தமிழ்நாடு செய்திகள்

என்னை பற்றிய குறைகளையும் மக்கள் கூறலாம்: செயலியை அறிமுகப்படுத்தி கமல் பேச்சு

புதிய செயலியை அறிமுகப்படுத்திய கமல்ஹாசன் அதன் மூலம் தன்னை பற்றிய குறைபாடுகள் இருந்தாலும் கூறலாம் என தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனுக்கு நேற்று 63-வது பிறந்தநாளாகும். பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் அவர் நற்பணி மன்றம் சார்பில் விழா ஒன்று நடைபெற்றது. இதில் புதிய செயலியை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தி பேசினார். அவர் கூறுகையில், மக்கள் பிரச்சனையை தெரிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன். நிறைய விடயங்களை கற்றுக்கொள்வதற்காக தான் சுற்றுப்பயணம் […]

என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் கமல்ஹாசன் வேண்டுகோள்

இன்று கமல்ஹாசனுக்கு 63வது பிறந்த நாளாகும். இந்த நாளில் வழக்கம் போல நலத்திட்ட உதவிகள் வழங்கத் திட்டமிட்டிருந்தனர் கமல் நற்பணி இயக்கத்தினர். ஆனால் மக்கள் மழை வெள்ள பாதிப்பில் உள்ள இந்த நேரத்தில் யாரும் என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்றும், இன்று மற்றும் ஒரு வழக்கமான நாள்தான் என்றும் கமல் ஹாஸன் கூறியுள்ளார். பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட, அதை மாற்றத்துக்கான நாளாக மாற்றுங்கள் என்று தன் […]

அரசை கேலி செய்யாதீர்கள், கள வீரர்களுக்கு சலாம்! நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் அரசின் சில பொறுப்பற்ற செயல்களை குறி வைத்து ட்விட்டரில் கருத்துக்களை அதிரடியாக வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் நிகழ்வுகள் மூலம் களத்திலும் நேரடியாக இறங்கிவிட்டார். அவரின் செயல்பாடுகள், அறிவிப்புகளுக்கு சில எதிர்ப்பும் தெரிவித்துவருகிறார்கள். தற்போது அவரின் மீது சில வழக்குகளும் பாய்ந்துள்ளது. நிலவேம்பு கசாயம் குறித்து சர்ச்சைக்கு முடிவுகள் கூறியுள்ளார்கள். இந்நிலையில் அவர் ட்விட்டரில் இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்கையில் அரசுப் பணியாளர்களுக்கு இடைஞ்சலோ […]

சினிமா இல்லாமல் இருந்துவிட முடியும், உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் இருக்க முடியாது!

சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் அரங்கத்தில் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து கூட்டம் நடைபெற்றது. இந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு கமல்ஹாசன் பேசியதாவது:- மழை காலங்களில் வெள்ள சேதம் பெரும் பிரச்சினையாக உள்ளது. எனக்கு தெரிந்த சில நண்பர்கள், நற்பணி இயக்கத்தினர் குளங்கள், ஏரிகளை செப்பனிட என்ன செய்ய வேண்டுமோ அதற்கு உதவி செய்வார்கள் மற்ற மாநிலங்களில் விவசாய கடன்களை ரத்து செய்யும் அரசு தமிழகத்திற்கு ஏன் மறுக்கிறது. அரசியல் […]

ஆஸ்பத்திரியில் அட்மிட்டான குஷ்பூ..! ஆபரேசனுக்கான ஏற்பாடுகள் தீவிரம்…!!

ரஜினி, கமல், பிரபு என அப்போதைய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் குஷ்பு. தற்போது படத்தயாரிப்பு, அரசியல் என ஈடுப்பட்டு வருகிறார். சமீபத்தில் அவர் தொடர் வயிற்றுவலியால் அவதிப்பட்டுவந்தார். அதற்காக சிகிச்சை எடுத்து வரும் அவர் இன்று காலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயிற்றில் இருக்கும் சிறு கட்டியை அகற்றுவதற்கான அறுவைசிகிச்சை நடைபெறவுள்ளது. இது முடிந்து அவர் 2 வாரங்கள் முழுமையான ஓய்வு எடுக்க மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதன் அவர் […]

சென்னையில் மீண்டும் விட்டு விட்டு தொடரும் மழை

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருகிறது. கனமழை மேலும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதையடுத்து சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (சனிக்கிழமை) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். சென்னையில் இன்று காலை முதல் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று […]

வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு

சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது.இதில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் இன்னும் மழை நீர் வடியாமல் உள்ளது. போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. வெள்ள நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமி நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை […]

நவம்பர் 8ம் தேதி வரை விடாது மழை – வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக மழை பொழிவு இருந்தது. அதன் காரணமாக, பல பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளது. மீஞ்சூர், வேளச்சேர், கோவிளம்பாக்கம் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் நேற்று இரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவர்கள் […]

கருணாநிதி வீட்டில் வெள்ளம் புகுந்தது

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீடு கோபாலபுரத்தில் உள்ளது.நேற்று பெய்த மழையில் வீட்டு காம்பவுண்டுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது சென்னையில் நேற்று இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரமே ஸ்தம்பித்தது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது. குடிசைப் பகுதிகள் மட்டுமின்றி வி.ஐ.பி.க்கள் வசிக்கும் பாதுகாப்பான பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. அண்ணாநகர், அடையார், போயஸ்கார்டன், கோபாலபுரம், போட்கிளப், பெசன்ட்நகர், கே.கே.நகர், நுங்கம்பாக்கம் போன்ற இடங்களில் வசதியான வர்கள் […]

சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழை

தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே நிலை கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் வட கடலோட மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. தென் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்தது. சென்னை நகரில் காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சிறிது நேரம் வெயிலும் அடித்தது. இதனால் தாழ்வான இடங்களில் தேங்கி இருந்த தண்ணீர் வடிய தொடங்கியது. மதியத்திற்கு பிறகு வானிலை அப்படியே மாறியது […]