முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக பல அணிகளாக பிரிந்ததால், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து அனைத்து அணிகளும் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்த நிலையில் கடந்த சில மாதங்களாக தேர்தல் ஆணையம் இதுகுறித்து விசாரணை செய்து வந்தது இந்த நிலையில் விசாரணைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் இன்று யாருக்கு இரட்டை இலை என்பதை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]
தமிழ்நாடு செய்திகள்
இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது
இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது என நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் இந்து தீவிரவாதம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். Loading… தனது கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். ஆனாலும் அவர் தனது கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை. இந்நிலையில், இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது என நடிகர் கமல்ஹாசன் […]
நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் நாடு பேரழிவுக்கு செல்லும்…
நடிகர்கள் தற்போது அரசியலுக்கு வருவது வாடிக்கையாகிவிட்டது. அதன் வரிசையில் கமல், ரஜினி சமீபகாலமாக அரசியலுக்கு வருவேன், வந்துவிடுவேன் என்று பேசி வருகின்றனர். Loading… இதில் முதன் முதலில் நடிகர் கமல்ஹாசன் முந்திக்கொண்டு நற்பணி இயக்கம் சார்பாக ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என தனது பிறந்த நாள் அன்று உத்தரவிட்டிருந்தார். அது மட்டுமின்றி ஒரு ஆப் ஒன்றையும் உருவாக்கியும் அதனை வெளியிட்டார். இந்நிலையில், நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு மிகப்பெரிய […]
நெகமம் அருகே பிளஸ்–2 மாணவி உயிருடன் எரித்துக்கொலை காதலன் கைது
கோவை மாவட்டம் நெகமம் அருகே செஞ்சேரிப்புதூரை சேர்ந்தவர் கமலா (வயது 75). இவருடைய பேத்தி ஜான்சிபிரியா (17). இவருக்கு தாய், தந்தை இல்லை. இதனால் பாட்டி கமலா வீட்டில் தங்கி அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்–2 படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணியத்தின் மகன் செல்வகுமார் (22). விசைத்தறி தொழிலாளி. செல்வகுமாரும், ஜான்சிபிரியாவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். இவர்களுடைய காதல் […]
ஒரே கட்சி சின்னம்: மல்லுக்கட்டும் கமல், ரஜினி
அரசியல் களத்தில் கால்பதிக்க தயாராகும் நடிகர்கள் கமளும் ரஜினியும் ஒரே கட்சி சின்னத்தை குறி வைத்து காய்கள் நகர்த்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. Loading… கட்சியின் பெயர் என்ன என்பதை இன்னும் முடிவு செய்துகொண்டிருக்கும் கமல், தன் கட்சியின் சின்னம் என்ன என்பதை முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. கமல் தன் கட்சிக்காக இப்போது தெரிவு செய்து வைத்திருக்கும் சின்னம் விசில். விசில் என்றால் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், எச்சரிக்கை செய்தல், புறப்படுவதற்கும், நிறுத்துவதற்குமான […]
சோப்பு போட்டு குளித்தால் 6 மாதங்கள் ஜெயில்!
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அங்கிருக்கும் பம்பை ஆற்றில் சோப்பு, ஷாம்பு, சியக்காய் போன்றவற்றை பயன்படுத்தினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என கேரள அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் குளிக்கும் போது, சோப்பு, ஷாம்பு, சியக்காய் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகிறார்கள். சிலர் சாப்பிட்ட இலைகளை ஆற்றில் வீசுகின்றனர். இதனால் பம்பை ஆற்றில் அசுத்தம் அதிகரிக்கிறது. ஆறு அசுத்தமாவதைத் தடுக்கும் வகையில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய், சியக்காய் ஆகிய பொருட்களை குளிக்க […]
இன்று இரவு முதல் சென்னையில் கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு
தமிழ்நாடு வெதர்மேன் அவ்வப்போது தனது ஃபேஸ்புக்கில் மழை குறித்த தனது கணிப்பை துல்லியமாக அளித்து வருகிறார். அந்த வகையில் நாளை முதல் மழை இரண்டாம் சுற்று ஆரம்பிக்கவுள்ளதாகவும், இன்று இரவு முதல் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது: வடக்கு கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் இரண்டாவது சுற்று இன்றிரவு முதல் தொடங்குகிறது. வழக்கமாகவே, வடகிழக்கு பருவமழையானது காற்றழுத்த தாழ்வு நிலைகள் சார்ந்தது. […]
தினகரனின் பண்ணை வீட்டில் ரகசிய அறைகள்: தம்பி வீட்டிலிருந்து 7 கிலோ தங்கம்
சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று புதுவையில் டிடிவி தினகரனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சோதனை மேற்கொண்ட போது அங்கு ரகசிய அறைகள் இருந்ததாம். அந்த அறைகளுக்கு மின்சாதன பூட்டு போடப்பட்டிருந்ததால், சிறிது நேர போராட்டத்திற்கு பிறகே அதிகாரிகள் அந்த அறைகளை திறந்ததாகவும், ஆவணங்கள் மற்றும் பொருட்களை கைப்பற்றிய பின்னர் […]
மக்களுக்கு புரியும்படி கமல் பேச வேண்டும்: இளங்கோவன் கருத்து
கோபியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியது: நடிகர் கமல் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். ஆனால், அவர் மக்களுக்கு புரியும்படி பேசினால் நன்றாக இருக்கும். சென்னை மக்கள் வெள்ளத்தால் அவதியுறும் போது, சேலத்தில் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். நிலைமை இப்படி இருந்தால், வெள்ள நிவாரண பணி எப்படி சரியாக நடைபெறும் என்றார்.
இரட்டை இலை சின்னத்திற்கும் வருமான வரி துறை சோதனைக்கும் தொடர்பில்லை
சென்னையில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரி துறை சோதனை நடந்து வருகிறது. முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத நிலையில் வருமான வரி துறை சோதனை நடைபெறுகிறது. வருமான வரி ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று சசிகலாவின் உறவினர்களான திவாகரன், விவேக், கிருஷ்ணப்ரியா வீடுகளிலும் […]





