Sunday , October 19 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் (page 66)

தமிழ்நாடு செய்திகள்

செவிலியர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஜூலி

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் கடந்த மூன்று நாட்களாக செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று முதல் போராட்டம் நடத்தி வரும் செவிலியர்கள் உண்ணாவிரதமும் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் செவிலியர்கள் போராட்டம் உச்சகட்டத்தில் உள்ள நிலையில் பிக்பாஸ் புகழ் ஜூலி நேரில் வந்து போராட்டம் செய்து வரும் செவிலியர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளார். இந்த போராட்டம் குறித்து ஜூலி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: …

Read More »

ஆர்.கே. நகரின் அதிமுக வேட்பாளர்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் யார் போட்டியிடுவது என்பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் தரப்பிற்கிடையே பலத்தை போட்டி நிலவுகிறது. இரு அணிகளும் இணைந்துவிட்டாலும், ஓபிஎஸ் மற்றும் அவரின் அணியில் இருந்தவர்களுக்கு எடப்பாடி தரப்பு உரிய முக்கியத்துவத்தை அளிப்பதில்லை எனக் கூறப்படுகிறது. இதை, மைத்ரேயன் எம்.பி மற்றும் ஓபிஎஸ் அணி ஐ.டி.பிரிவு ஆஸ்பயர் சுவாமிநாதன் ஆகியோர் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தினர். அதன் பின் நடைபெற்ற …

Read More »

கல்லூரி மாணவி மிரட்டி கற்பழிப்பு ; நண்பனுக்கும் விருந்தாக்கிய காதலன்

சென்னையில் கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி கற்பழித்ததோடு, தனது நண்பருக்கும் அப்பெண்ணை விருந்தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவிக்கு, 4 வருடத்திற்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த மோனி என்பவருடன் பேஸ்புக்கில் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. எனவே, பேஸ்புக்கில் அவர்கள் இருவரும் காதலை பரிமாறி வந்தனர். அந்நிலையில், அப்பெண்ணை மோனி மிரட்டத் தொடங்கியுள்ளார். பேஸ்புக்கில் தன்னுடன் …

Read More »

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 6 முனைப்போட்டி

தி.மு.க. சார்பில் மருதுகணேசும், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயமும் மீண்டும் போட்டியிடுவார்கள் என்று அவர்களது கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதேபோல், அ.தி.மு.க. வேட்பாளர் யார் என்பது இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும், மதுசூதனனுக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. அதேபோல், அப்போது அ.தி.மு.க. (அம்மா) சார்பில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன், இப்போது சுயேச்சை வேட்பாளராக களம் இறங்க இருக்கிறார். டிசம்பர் 1-ந் தேதி மதியம் 1 மணிக்கு …

Read More »

நான் ஜெ.வின் மகள் என்பது ஓ.பிஎஸ்-ற்கு தெரியும் – அடுத்த குண்டு வீசும் அம்ருதா

தான் ஜெ.வின் மகள் என்பது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு தெரியும் என பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா தெரிவித்துள்ளார். தன்னை மறைந்த ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கும் படி பெங்களூரை சேர்ந்த அம்ருதா (30) உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இந்நிலையில், இன்று செய்தியாளரிடம் பேசிய அம்ருதா ““நான் ஜெ.வின் மகள் என்பது கடந்த மார்ச் மாதம்தான் தெரியவந்தது. என் உயிருக்கு ஆபத்து …

Read More »

டிடிவி தினகரன் ஆதரவு எம்பி-க்கள் முதல்வருக்கு ஆதரவு? இரட்டை இலையால் புது திருப்பம்!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக பல அணிகளாக பிரிந்ததால், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து அனைத்து அணிகளும் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்த நிலையில் தேர்தல் ஆணையம் விசாரணைக்கு பிறகு இரட்டை இலை சின்னம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கே ஒதுக்கப்படுவதாக அறிவித்தது. இந்நிலையில், ஆர்கே.நகர் தேர்தலில் தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டிடுவார் என கூறப்படுகிறது. தினகரனும் எனது ஆதரவாளர்கள் …

Read More »

தடவியல் நிபுணர்களால் தடவல் மன்னன் நித்யானாந்தாவுக்கு சிக்கல்

சர்ச்சைக்குரிய வீடியோவில் இருப்பது நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் தான், அதில் டூப்ளிகேட் எதுவும் இல்லை என்று சமீபத்தில் டெல்லி தடயவியல் ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையால் நித்யானந்தா வழக்கு மீண்டும் உயிர்ப்பெற்றுள்ளது. டெல்லி தடயவியல் ஆய்வு மையத்தின் ஆய்வறிக்கை தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை காரசாரமாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நித்தியானந்தாவின் பெங்களூர் ஆசிரமம் முன் …

Read More »

ஆர்.கே.நகரில் கமல்ஹாசன் போட்டியா?

கடந்த சில மாதங்களாகவே டுவிட்டரிலும் நேரிலும் அரசியல் கருத்துக்களை கூறி வரும் நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் அவருடைய சகோதரர் சாருஹாசனே கமலும், ரஜினியும் சேர்ந்து கட்சி ஆர்மபித்தாலே 5% ஓட்டுக்கு மேல் கிடைக்காது என்று கூறியுள்ளதால் அரசியல் கட்சியை உடனே தொடங்க அவர் தயங்குவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தனக்குள்ள செல்வாக்கை உறுதி …

Read More »

துப்பாக்கியை கண்டே அஞ்சாதவர்கள் தொப்பியை பார்த்தா பயப்பட போகிறோம்: தமிழிசை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்று டிடிவி தினகரன் கூறியிருக்கும் நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் தமிழிசை செளந்திரராஜன் அப்போது செய்தியாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தமிழிசை ‘மீண்டும் தொப்பி சின்னத்தை தினகரனுக்கு கொடுக்க கூடாது என்று தேர்தல் கமிசனிடம் வலியுறுத்துவோம். கடந்த முறை எத்தனை லட்சம் தொப்பிகளை அவர் ஆர்.கே.நகர் தொகுதியில் இறக்கினார் என்பது அனைவரும் அறிந்ததே’ என்று கூறினார். அப்போது …

Read More »

மதுரை விழாவிற்கு ஓபிஎஸ்-ற்கு அழைப்பு இல்லை

மதுரையில் நடைபெறும் முப்பெரும் விழாவில் ஓபிஎஸ் மற்றும் அவரின் அணியினருக்கு அழைப்பிதழ் வழங்கப்படவில்லை என ஓ.பி.எஸ் அணி ஐடி பிரிவு ஆஸ்பயர் சுவாமிநாதன் அதிருப்தி தெரிவித்துள்ளார். ஓ.பி.எஸ் அணியில் இருக்கும் மைத்ரேயன் தனது முகநூலில் “ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?” என ஒரு பதிவை இட்டு, இரு அணிகளுக்கும் இடையே இன்னும் புகைச்சல் நீடிக்கிறது என்பதை …

Read More »