மத்திய சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் இந்திய அளவில் டெங்கு பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. வருடத்திற்கு வருடம் டெங்குவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. டெங்கு என்பது ஒருவரின் உயிரையே பறிக்கக்கூடிய ஒரு கொடிய நோயாகும். இந்நோய் ஏடிஸ் ஏகிப்டி(AEDES AEGYPTI) என்ற ஒரு வகை கொசுவால் பரப்பப்படுகிறது. 2014-ம் ஆண்டில் டெங்கு காய்ச்சலுக்கு 2 ஆயிரத்து 804 பேரும், 2015-ம் …
Read More »ஜெயலலிதா மர்ம மரணம் ?
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி சுமார் 75 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர். எனவே, தமிழக அரசு சார்பில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தற்போது விசாரணையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன்படி, ஜெயலலிதாவின் …
Read More »இந்த நிலையில்தான் ஜெ. அனுமதிக்கப்பட்டார்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படுக்கை நிலையில்தான் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் என அப்போலோ துணைத்தலைவர் ப்ரீத்தா ரெட்டி பேட்டியளித்துள்ளார். மருத்துவமனையில் ஜெ. அனுமதிக்கப்பட்டது முதல் அவர் மரணமடைந்தது வரை அனைத்திலுமே மர்மமே நீடிக்கிறது. மருத்துவமனையில் அவரை யாருமே சந்திக்கவில்லை என்பது சந்தேகத்தை அதிகப்படுத்தியது. எனவே, இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. எனவே, ஜெ.வின் மரணம் குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் …
Read More »பெரியபாண்டி உடலில் பாய்ந்தது சக காவலரின் குண்டா?
காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களால் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் அவரது உடல் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு நேற்று மதுரை வழியாக அவரது சொந்த ஊரான மூவிருந்தாளி சாலைப்புதூர் வந்தடைந்தது. கிராம மக்களும் உறவினர்களும் பெரியபாண்டியனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரது மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. சென்னை நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய வடமாநில கொள்ளையர்களை பிடிக்க மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் …
Read More »அரசு மரியாதையுடன் பெரியபாண்டியன் உடல் நல்லடக்கம்
ரியல் தீரன் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களால் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் நேற்று அவரது உடல் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கிருந்து மதுரை வழியாக அவரது சொந்த ஊரான மூவிருந்தாளி சாலைப்புதூர் வந்தடைந்தது! கிராம மக்களும் உறவினர்களும் பெரியபாண்டியனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் அஞ்சலி செலுத்தினார். நிஜ …
Read More »கேரளாவில் கரை ஒதுங்கிய 40 உடல்கள்
கேரளாவில் உள்ள மருத்துவமனைகளில் மொத்தம் 40 உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது. இவர்கள் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஓகி புயலால் குமரி மீனவ மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளானார்கள். பல மீனவ மக்கள் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் சொந்த பந்தங்களை இழந்து தவித்து வருகின்றனர். காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தரக்கோரி மீனவர்கள் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். குமரிக்கு சென்ற தமிழக …
Read More »ஓகி புயலால் எத்தனை பேர் மாயம்?
ஒகி புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை தெரிந்துகொள்ள, மீனவ அமைப்பினர் மற்றும் ஆலய நிர்வாகத்தினரின் சார்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, ஓகி புயலால் குமரி மீனவ மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளானார்கள். பல மீனவ மக்கள் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் சொந்த பந்தங்களை இழந்து தவித்து வருகின்றனர். காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தரக்கோரி மீனவர்கள் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். குமரிக்கு சென்ற தமிழக முதல்வர் பழனிசாமி …
Read More »குக்கர் கடையில் வருமான வரித்துறை, பறக்கும் படை அதிரடி சோதனை: தினகரனுக்கு ஆப்பு?
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் களம் இறங்கியுள்ளார். அவர் போட்டியிடும் குக்கர் சின்னம் தொகுதி முழுவதும் பிரபலமாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் பெண்கள் குக்கருடன் வலம் வரும் காட்சியை பார்க்க முடிகிறது. இதனையடுத்து அருகில் உள்ள குக்கர் கடைகளில் தினகரன் தரப்பு டோக்கன் மூலம் வாக்காளர்களுக்கு குக்கர் வழங்கி வருவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து வருமான வரித்துறையினரும், தேர்தல் ஆணைய பறக்கும் படையும் சேர்ந்து …
Read More »முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பெரிய பாண்டியன் உடலுக்கு நேரில் அஞ்சலி
ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுடப்பட்டு உயிரிழந்த மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினர். சென்னை கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற காவல்துறை ஆய்வாளர் பெரிய பாண்டியன் நேற்று ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று அவரது உடல் ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. பெரியபாண்டியனின் உடலுக்கு …
Read More »தீபக்கிடம் 4 மணி நேரம் விசாரணை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அவரின் அண்ணன் மகன் தீபக்கிடம் விசாரணை கமிஷன் தலைவர் ஆறுமுகசாமி இன்று விசாரணை நடத்தினார். ஜெ.வின் மரணம் தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தது. அதன் பின் நடவடிக்கையில் இறங்கிய ஆறுமுகசாமி ஜெ.வின் அண்ணன் மகள் தீபா, தீபக் உட்பட 60க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பினார். இதையடுத்து நேற்று …
Read More »