Sunday , November 17 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் (page 60)

தமிழ்நாடு செய்திகள்

என் கணவரை கொலை செய்தது யார்?

ராஜஸ்தானில் சென்னையை சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியனை அவரது சக ஆய்வாளர் முனிசேகர் என்பவர் தவறுதலாக சுட்டதாக ராஜஸ்தான் காவல்துறையினர் கூறப்பட்டு வரும் நிலையில் முனிசேகர் மீது இன்று காலை வழக்குப்பதிவும் செய்துள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து பிரபல தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா, ‘எனது கணவர் உயிரிழந்த சம்பவத்தில், உரிய விசாரணை நடத்தி எனக்கு தயவு செய்து தெளிவுபடுத்துங்கள் என்றும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் …

Read More »

லஞ்சம் பெற்ற சார் பதிவாளருக்கு 8 ஆண்டுகள் சிறை

ரூ.500 லஞ்சம் பெற்ற சார் பதிவாளருக்கு ஈரோடு நீதிமன்றம் 8 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டியாளையத்தில் மேக்லீன் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதன் ஆலோசகரான புஷ்பராஜ் ஆண்டுதோறும் இல்லத்தின் வரவு-செலவு கணக்கை சார் பதிவாளரிடம் ஒப்புதல் பெற்று, மாவட்ட பதிவாளரிடம் சமர்பித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சார் பதிவாளராக இருந்த தங்கவேல் என்பவரிடம் புஷ்பராஜ் வரவு …

Read More »

13 லட்சம் ரூபாய் செலவில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடமாலை

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு 13 லட்சம் ரூபாய் செலவில் வடமாலை அணிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் கோயிலில் இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபடுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர். அதிகாலை முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, கோயில் நிர்வாகம் சார்பில் 18 அடி …

Read More »

பெரியபாண்டியன் கொலை வழக்கில் சக ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பெரியபாண்டியன் வழக்கை தீவிரமாக ராஜஸ்தான் போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் பாலி மாவட்ட காவல்துறை அதிகாரி பார்கவி, ‘பெரியபாண்டியனின் உடலை துளைத்தது சக ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கியில் இருந்து வெளிவந்த குண்டு’ என்று கூறி அதிர்ச்சி அளித்தார். இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி, ‘பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சென்னை கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்த்ரன் போலீசார் …

Read More »

பெரியபாண்டியனை துளைத்தது சக ஆய்வாளரின் துப்பாக்கி குண்டா? அதிர்ச்சி தகவல்

சென்னை கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்த ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்க சென்ற இடத்தில் ராஜஸ்தான் கொள்ளையர்களால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்த ஆய்வாளர் பெரியபாண்டியன் கொலை குறித்து ராஜஸ்தான் போலீசார் விசாரணை செய்து கொண்டு வருகின்றனர் இந்த நிலையில் ராஜஸ்தானின் பாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் பார்க்கவ் கூறியபோது, ‘பெரியபாண்டியனின் உடலில் உள்ள குண்டு, சக ஆய்வாளர் முனிசேகர் வைத்திருந்த துப்பாக்கியில் இருந்து வெளிவந்த குண்டு என்று அதிர்ச்சி தகவல் ஒன்றை …

Read More »

போருக்கு வராமல் இருக்கும் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார்கள். ஆனால் அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை. போருக்கு தயாராக இருங்கள் என்று கூறிவிட்டு அமைதியாக இருக்கிறார். ஆனால் அவரை சுற்றியுள்ளவர்கள் அவர் மிக விரைவில் அரசியலுக்கு வருவார், அதுதொடர்பாக அறிவிப்பார் என கூறுகிறார்கள். கடந்த 12-ஆம் தேதி அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அன்றைய தினக் அவரது அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு நிச்சயம் இருக்கும் என பெரிதாக பேசப்பட்டது. இதனால் …

Read More »

டி என்ஏ ஆதாரம் எடுக்க அம்ருதா தீவிரம்!

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் மகள் என தன்னை கூறிக்கொள்ளும் பெங்களூரை சேர்ந்த அம்ருதா, தான் ஜெயலலிதாவுக்கும், சோபன் பாபுவுக்கும் தான் பிறந்தேன் என்பதை நிரூபிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தால் அவரது உடலில் இருந்து டெஸ்டுக்கு ஏதாவது எடுத்திருக்கலாம் என, அம்ருதா கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. தன்னுடைய மருத்துவ நண்பர் ஒருவர் மூலம் அப்பல்லோ மருத்துவமனையில் …

Read More »

ஜெயலலிதா ஆபத்தான நிலையில் தான் அனுமதிக்கப்பட்டார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவரது மரணம் குறித்து ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை கமிஷன் விசாரணை செய்து வருகிறது இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் உள்பட பலர் விசாரணை கமிஷன் முன் ஆஜராகி வரும் நிலையில் சற்று முன்னர் அப்பல்லோ மருத்துவமனையின் பிரதாப் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்து பல திடுக்கிடும் உண்மைகளை கூறி வருகிறார் ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதாவை அப்பல்லோ …

Read More »

அமெரிக்காவின் தலையெழுத்து

அமெரிக்கா மற்றும் அமெரிக்க இடையே அமைதியின்மையான சூழல் நிலவி வருகிறது. இதனால், உலக நாடுகள் கலக்கத்தில் உள்ளது. இந்நிலையில், வடகொரியா வெளியிட்டுள்ள செய்தி ஒன்று மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இது ஆபத்தை ஏற்படுத்தும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்தும் இதனை பொருட்படுத்தாமல் வடகொரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. எனவே, வடகொரியா மீது பல பொருளாதார …

Read More »

குரூப் 4 விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான அறிவிக்கையை நவம்பர் 14ம் தேதி வெளியிடப்பட்டு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 13 என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட ஓகி புயல் காரணமாக மின்சாரம் சுமார் ஒருவார காலம் பாதிக்கப்பட்டது. இதனால் ஆன்லைனில் இந்த பணிக்கு பலரால் விண்ணப்பிக்க முடியவில்லை இதனால் குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கால …

Read More »