தமிழ்நாடு செய்திகள்

சசிகலா முதல்வராவதை

முதல்வரை தாக்கிப் பேசிய டி.ராஜேந்தர் ?

ஆனால் என்ன காரணத்தினாலோ திடீரென்று அதற்கு எந்த எந்த முக்கியத்துவமும் தராமல் இருந்தார்.முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்த போது அவருடன் அரசியல் பிணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டவர், ஏனோ விஜயகாந்த் மற்றும் சரத்குமார் போல தன்னை தனித்து அடையாளப்படுத்திக்கொள்ள தவறிவிட்டார்.எதுகை மோனையாக தமிழ் மொழியில் சரளமாக பேசுவது கைவரப்பெற்றவருக்கு அரசியல் சற்று காலை வாரிவிட்டதெனலாம். இன்னிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்றைய தமிழ்நாட்டு அரசியல் சூழல் பற்றிய தன்னுடைய கருத்தை பகிர்ந்து கொண்டார். […]

நேரத்த கொறச்சா எப்படி மாசு குறையும்? – பொதுமக்கள் கேள்வி

பட்டாசு வெடிப்பதால் ஒலி மற்றும் காற்று மாசுபாடு ஏற்படுவதாகக் கருதி சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களில் இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்தும் எதிர்ப்புக் கிளம்பியது. இதனை எதிர்த்து தமிழக அரசு […]

Narendra Modi

தப்பு கணக்கு போட்ட மோடி; திமிரிய ரிசர்வ் வங்கி ஆளுநர்

மத்திய அரசு சமீபத்தில் சிபிஐ விவகாரத்தில் எடுத்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்து ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கு நடந்து வந்த பனிப்போர் தற்போது வெளியே தெரிய துவங்கியுள்ளது. ஆம், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் மத்திய அரசுக்கும் இடையே முரண்பாடுகள் முற்றிவருவதாக தகவ்ல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு உரிய சுதந்திரத்தை வழங்குவதில்லை என்ர குற்றச்சாட்டி இருந்து வந்தது. கடந்த ஆண்டு வட்டி […]

ரஜினிக்கு வயசாயிடுச்சி.. அவரால முடியாது : ராஜேந்திர பாலாஜி

செல்லும் இடமெங்கும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை ராஜேந்திர பாலாஜி விமர்சித்து வருகிறார். 3 அமாவாசைகளுக்குள் கமல்ஹாசன் கட்சி காணாமல் போய் விடும் என்றார். அதன்பின், ஒரு தேர்தல் நடந்து முடிந்தால் கமல்ஹாசன் கட்சியே இருக்காது எனக்கூறினார். இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் அவர் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ஸ்டாலின்தான் அடுத்த […]

ரூ.1 லட்சம் சம்பளத்தை வைத்துகொண்டு நாக்கையா வழிப்பது? கருணாஸ்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பின்வருமாறு பேசினார். என் தொகுதி மக்களுக்காகவும் எந்த ஒரு சலுகையும் செய்திடாத அரசில் எம்.எல்.ஏ.வாக பதவியை தொடர நான் விரும்பவில்லை. நான் எம்.எல்.ஏ.வாக ஆனது அனைத்து பிரிவிலும் கமிஷன் பெற்று அரசுக்கு கொடுப்பதற்காக அல்ல. ஊதியத்துக்காக நான் எம்.எல்.ஏ.வாகவில்லை. இதுவரை சபாநாயகரிடம் இருந்து இதுவரை எந்த ஒரு கடிதமும் வரவில்லை. அப்படி வந்தால் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். என் சமுதாயத்திற்காக எப்போது […]

நான் மகான் அல்ல; பழனிச்சாமி புனிதருமல்ல : டிடிவி

கரூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளரும், ஆ.கே.நகர் சட்டமன்றத்தின் எம்.எல்.ஏ வுமான டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையில், சி.பி.ஐ விசாரணை தேவை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம் சாட்டிய போது., மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்று கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ, இன்று சி.பி.ஐ விசாரணை தேவையில்லை என்று மனு […]

எல்லா குழப்பத்திற்கும் சசிகலாவே காரணம் – திவாகரன் பகீர் பேட்டி

18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளனர். திடீர் திருப்பமாக, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தாய் கழகத்திற்கு திரும்பி வர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் நேற்று கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், அந்த அழைப்பை தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் […]

இடைத்தேர்தலில் போட்டி என கமல் அறிவிப்பு: ரஜினியின் முடிவு என்ன?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்றும், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாகவும் கமல் தெரிவித்தார். ஆனால் இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், தகுதி நீக்க வழக்கினால் காலியான 18 தொகுதிகள் உள்பட மொத்தமுள்ள 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தால் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என அறிவித்துள்ளார். கமலஹாசன் அறிவிப்பினை அடுத்து வரும் டிசம்பரில் […]

அரசியல் கருத்துக்கணிப்பு: ரஜினிகாந்தை பின்னுக்குத் தள்ளிய கமல்ஹாசன்

தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், அடுத்து யார் முதல்வராக பதவியேற்பார் என இந்தியா டுடோ, ஆக்சிஸ் மை இந்தியா மற்றும் பி.எஸ்.இ ஆகியவை இணைந்து 30 பாராளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 14, 820 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதன்படி திமுக – ஸ்டாலின் – 41 சதவீதம் அ.தி.மு.க. -பழனிசாமி – 10 சதவீதம் மக்கள் நீதி மய்யம் -கமல்ஹாசன் – 8 சதவீதம் பா.ம.க. – அன்புமணி – […]

அடுத்த முதல்வர் யார்? – கருத்துகணிப்பில் புதிய தகவல்

பெரிதும் எதிர்பார்க்கபப்ட்ட 18 எம்.ஏல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் தினகரனுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகியிருந்தால் தமிழக அரசியலில் பல அதிரடி திருப்பங்கள் மற்றும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என கருதப்பட்டது. ஆனால், ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வெளியாகியுள்ளது. இன்னும் சில மாதங்களில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தெரிகிறது. இந்நிலையில், தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், அடுத்து யார் முதல்வராக பதவியேற்பார் என […]