விசாரணை ஆணையம் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை 15 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டுமென சசிகலாவுக்கு ‘கெடு’ விதித்து சம்மன் அனுப்பியுள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் 75 சிகிச்சைப் பெற்று, கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியதால், அவரது மருத்துவமனையின் சிகிச்சை குறித்து விசாரிக்க வேண்டும் என எதிர்கட்சிகளும், அதிமுக தொண்டர்களும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து …
Read More »உளவுத்துறை அறிக்கையால் எடப்பாடி அதிர்ச்சி
சென்னை ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தினகரன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என பல்வேறு கருத்து கணிப்புகள் கூறுகிறது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் ஆர்.கே.நகரில் கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அந்நிலையில், அந்த தொகுதியில் கடந்த 21ம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெற்றது. சுயேட்சை வேட்பாளர்களோடு சேர்த்து 50க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டாலும் திமுக, அதிமுக மற்றும் தினகரன் …
Read More »ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என மக்கள் செய்தி மையம் கருத்து கணிப்பு நடத்தி செய்தி வெளியிட்டுள்ளது. ஆர்.கே.நகரில் கடந்த 21ம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெற்றது. சுயேட்சை வேட்பாளர்களோடு சேர்த்து 50க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டாலும் திமுக, அதிமுக மற்றும் தினகரன் ஆகிய மூவருக்கும் இடையே மட்டுமே பலத்த போட்டி நிலவுகிறது. அந்நிலையில், தேர்தலுக்கு முன்பு அந்த தொகுதியில் யார் வெற்றி …
Read More »ஜெ மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் பதவிக் காலம் 6 மாதம் நீட்டிப்பு
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை ஆணையம் கடந்த செப்டம்பர் 25ம் தேதி தமிழக அரசால் அமைக்கப்பட்ட நிலையில் இந்த ஆணையம் தற்போது விறுவிறுப்பாக விசாரணையை நடத்தி வருகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது அண்ணன் மகன் …
Read More »விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா-தம்பி பலி
சிவகங்கை அருகே நடந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா-தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையைச் சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கு வனிதா என்ற மகளும், அகிலன் என்ற மகனும் இருந்தனர். வனிதா 10-ஆம் வகுப்பும், அகிலன் 9-ஆம் வகுப்பும் படித்து வந்தனர். அகிலாவிற்கு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நெருங்குவதால் அவருக்கு பள்ளியில் ஸ்பெஷல் கிளாஸ் …
Read More »தினகரன் வெற்றி பெற்றால் அதிமுக என்ன ஆகும்
நடந்து முடிந்துள்ள ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ஊடகங்களின் கருத்துக்கணிப்பின்படி டிடிவி தினகரன் வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஒரே ஒரு தொகுதியில் திமுகவோ அல்லது அதிமுகவோ வெற்றி பெற்றால் ஆட்சியில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது. ஆனால் தினகரன் வெற்றி பெற்றால் அதிமுகவில் ஒரு பெரிய மாறுதல் இருக்கும் என்று கூறப்படுகிறது அதிமுகவில் இன்னும் மூன்று ஆண்டுகள் பதவியை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே பலர் ஈபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையை …
Read More »கடும் கோபத்தில் சசிகலா
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டதால், தினகரன் மீது சசிகலா கடுமையான கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். 20 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்த நிலையில், பழச்சாறு பருகியபடி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார். ஜெ.வின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், முதன் முதலாக …
Read More »அடேய்… எல்லை மீறி போறீங்க
சமீபத்தில் வெளியான ஜெயலலிதாவின் வீடியோவில் நெட்டிசன்கள் சில சிக் ஜாக் வேலைகள் செய்து மீம்ஸ்களா இணையத்தில் உலவ விட்டுள்ளனர். மறைந்த முதவ்லர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்டது என ஒரு வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சமீபத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து ஜெயலலிதாவை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட போது அந்த வீடியோ எடுக்கப்பட்டது எனவும், சசிகலாவின் மீது சுமத்தப்பட்டிருக்கும் கொலைப்பழியை நீக்கவே இந்த …
Read More »தோழிக்காக தனது உயிரை விட்ட பிளஸ்-1 மாணவி
விழுப்புரம் அருகே உடன் படித்த தோழி இறந்ததால் கவலையில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் பிரசாந்தி(16). இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். திருநாவலூரை அடுத்த ஆவலம் கிராமத்தை சேந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் ரசிகா(16). இவரும் பிரசாந்தி படிக்கும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இருவரும் …
Read More »பாலியல் பலாத்காரன் செய்தவனுக்கு 3 வருடம் மட்டுமே தண்டனையா?
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த அறிவழகன் என்ற குற்றவாளிக்கு வெறும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2800 மட்டுமே அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும் என அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். சென்னை கிண்டி, வேளச்சேரி, ஈக்காட்டுதாங்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வீட்டில் தனியாக …
Read More »