அதிமுகவில் தனி அணியாக செயல்பட்டுவந்த டிடிவி தினகரன் நாளை புதிய கட்சி குறித்து அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை இலை சின்னத்தையும், அதிமுகவையும் இழந்தாலும் தனக்கான ஆதரவாளர்களை வைத்துக்கொண்டு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு பலம்பொருந்திய அதிமுக, திமுக கட்சிகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார் தினகரன். இந்த வெற்றி அளித்த ஊக்கத்தில் புதிய கட்சி குறித்த ஆலோசனையில் தினகரன் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் …
Read More »ஒன்றரை ஆண்டுகளுக்கு கனிமொழி வீட்டிற்கு சென்ற கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் மட்டுமே உள்ளார். இந்த நிலையில் ஒன்றரை வருடங்கள் கழித்து சி.ஐ.டி. நகரில் உள்ள கனிமொழியின் வீட்டிற்கு இன்று கருணாநிதி சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். இதுகுறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்த கனிமொழி, ‘ஒன்றரை வருடங்கள் கழித்து இன்றுதான் அப்பா எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார். இன்று தான் எங்களுக்கு …
Read More »எச்.ராஜா என்ன டிசைன்னே தெரியலையே
பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாதவர் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா. இவர் எப்போது எப்படி இருப்பார் என்பது தெரியாது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கும், தமிழக பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதோ என தோன்றுகிறது. ரஜினியின் அரசியல் குறித்து இருவரும் மாறுபட்ட கருத்துக்களுடன் செயல்படுகின்றனர். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் பேசிய குருமூர்த்தி பாஜகவும், ரஜினிகாந்தும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என கூறினார். …
Read More »ரஜினியின் ஆன்மீக அரசியலும், தமிழ் இலக்கணமும்
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துவிட்டார். கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்த ரஜினி, தான் ஆன்மீக அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறினார். ஆன்மீக அரசியல் என ரஜினி கூறியது பல்வேறு எதிர்ப்புகளை அவருக்கு உருவாகி வருகிறது. பலரும் அவரது ஆன்மீக அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ரஜினியின் அரசியல் கொள்கை என்ன என்பதும் குழப்பமாக உள்ளது. நிரூபர் ஒருவர் உங்கள் …
Read More »நாளை வெளியாக உள்ள முக்கிய அறிவிப்பு
ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்குவது குறித்து நாளை அறிவிக்க உள்ளதாகவும், நாளை முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு கிடைத்ததால் அதிமுக கட்சியையும் அவர்கள் கைப்பற்றிவிட்டனர். இதனால் பல எம்எல்ஏக்கள், எம்பிக்கள் அவர்கள் பக்கம் உள்ளனர். தினகரன், சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கி, ஒதுக்கி வைத்துள்ளனர். ஆனாலும் தினகரன் தனன்னுடைய …
Read More »உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஆனால் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தி பெற்றவை. நேற்று அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து, மாட்டுப் பொங்கலான இன்று மதுரை பாலமேட்டில் கோலாகலமாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் …
Read More »அதிமுகவை எவராலும் அழிக்க முடியாது
ரஜினியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் ஆட்சி மாற்றம் வரும் என்று குருமூர்த்தி பேசியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். தமிழக அரசியலில் பா.ஜ.க.வும் ரஜினியும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என துக்ளக் இதழின் பத்திரிக்கை ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி துக்ளக் ஆண்டு விழாவில் பேசியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் ரஜினியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் ஆட்சி மாற்றம் …
Read More »பிரபல எழுத்தாளர் ஞானி காலமானார்
பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஞானி சங்கரன் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் (64) உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். இவர் செங்கல்பட்டில் பிறந்தவர். இவரது இயற்பெயர் வே. சங்கரன். ஆங்கில இதழாளர் வேம்புசாமியின் மகன் ஆவார். சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ஞானிக்கு இன்று அதிகாலை திடீரென்று முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் ஞானியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே …
Read More »பொங்கல் திருநாளை முன்னிட்டு தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதி
பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று திமுக தலைவர் கருணாநிதி தனது கட்சி தொண்டர்களை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளில் கட்சி தொண்டர்களை சந்திப்பது கருணாநிதியின் வழக்கம். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு அவர் தொண்டர்களை சந்திக்கவில்லை. இந்நிலையில் டாக்டர்களின் ஆலோசனைக்கு பிறகு கருணாநிதி இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதியை சந்திக்க வரும் தொண்டர்கள் அவருக்கு பூங்கொத்து கொடுப்பதை …
Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி
வரும் 16-ந் தேதி நடைபெறவுள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக முதல்வரும் துணை முதல்வரும் தொடங்கிவைப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் இன்று மகிழ்ச்சியாகக் கொண்டாடடப்படுகிறது. வீடுகள் தோறும் புத்தாடை உடுத்தி பொங்கலிட்டு அண்டை வீட்டாருடன் பகிர்ந்துகொண்டு கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஆனால் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய …
Read More »