Thursday , August 21 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் (page 4)

தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் திடீரென அதிகாலை இடம்பெற்ற நிலநடுக்கம்…

வங்கக் கடலில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சென்னையில் சில இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது.வங்கக் கடலில் இன்று காலை 7.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சென்னைக்கு வடகிழக்கே 609 கிமீ தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவு கோலில் 4.9 அலகாக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நில அதிர்வு …

Read More »

கமலை கட்சியில் சேர்ப்பீர்களா..? ஸ்டாலின் பதில்

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு, திமுக – காங்கிரஸ் கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி என விமர்சிக்கப்படுகிறதே என கேட்ட போது, பிரதமர் மோடி அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சி எடுப்பதாக எங்களுக்கு செய்தி வருகிறது. அது கொள்கைக் கூட்டணியா? அல்லது கொள்ளைக் கூட்டணியா? என்பதுதான் என்னுடைய கேள்வி. இன்னும் சொல்லப்போனால் …

Read More »

தயாரிப்பாளர் சங்க பிரச்சனைக்கு அரசு எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு

நடிகர் விஷால் பூட்டு போடப்பட்டிருந்த தயாரிப்பாளர் சங்க கட்டிடத்தை பூட்டை உடைத்து திறக்க முயற்சித்தால் இன்று காலை கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மாலையில் விடுவிக்கப்பட்டார். அதன் பின் அவர் சென்னை அண்ணா சாலையில் உள்ள மற்றொரு சங்க கட்டிடத்தில் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் திநகரில் உள்ள தயாரிப்பாளர்சங்க கட்டிடத்திற்கு சீல் வைக்க அரசு உத்தரவிட்டு, தற்போது கட்டிடம் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. இருதரப்பும் சமாதானம் …

Read More »

அரசியல் கட்சிக்கு முன் தொலைக்காட்சி தொடங்கும் சூப்பர் ஸ்டார் !

அரசியல் களம் தமிழ்நாட்டில் எப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. மறைந்த ஜெயலலிதா இழப்பிற்கு பிறகு நிறைய திருப்பங்கள் நடக்கிறது என்று கூறலாம். அதில் ஒன்று தான் ரஜினி-கமல் அரசியலுக்கு வருவதாக சொன்னது. கமல் கட்சி தொடங்கி அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார், அடுத்து ரஜினி எப்போது தொடங்குவார் என பெரிய கேள்வி. இந்த நேரத்தில் தான் ஒரு சூப்பர் தகவல், அதாவது ரஜினி அவர்கள் ஒரு புதிய தொலைக்காட்சி ஆரம்பிக்க இருக்கிறாராம். அந்த …

Read More »

மோடி டிவிட் போட்டு வருத்தம் தெரிவித்தார்: ஸ்டாலின் என்ன செய்தார்?

திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் ஸ்டாலினை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் தெரிவித்தது பின்வருமாறு, ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டால் நிச்சயம் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் மோடி பிரதமராவது உறுதி. பாஜக தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறது. திமுக என்னவோ பலமான கூட்டணி அமைத்தது போல பேசி வருகிறார்கள். தமிழகத்தில் மக்கள் …

Read More »

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல். விஷால் கைது !

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து சங்க தலைவர் விஷாலுக்கு எதிராக ஓரணியில் திரண்டனர். இதனால் தி.நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விஷால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி ஏ.எல் அழகப்பன், ரித்தீஸ், எஸ்வி சேகர் போன்றவர்கள் விஷாலுக்கு எதிராக சராமரியாக குற்றம் சாட்டினர். தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டி விட்டும் சென்றனர். இந்நிலையில் இன்று தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டை உடைக்க முயன்று சட்டத்தை மீறியதற்காக சங்க தலைவர் …

Read More »

மோடியை தூங்க விடமாட்டேன்: ராகுல்காந்தி சபதம்

விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்க விடமாட்டேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் அனைத்தும் பாஜக வுக்கு எதிராக வந்துள்ளன. பாஜக கோட்டையாக திகழ்ந்து வந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களும் காங்கிரஸ் வசம் சென்றுவிட்டது. மேலும் மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான வாக்குகளைக் கூடப் பெற வில்லை. மோடி …

Read More »

ரஜினியை சீண்டிய தமிழிசை

நடந்து முடிந்துள்ள 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜக கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தர் முடிவுகள் வெளிவந்த அன்று தமிழிசை சவுந்தர்ரஜன் கொடுத்த புதுவிளக்கமான வெற்றிகரமான தோல்வி என்பது தன் கட்சி தொண்டர்களை தேற்றுவதற்கும், தோல்வியின் தழும்புகளை மறைப்பதற்கானதாகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் மீண்டும் ஒரு விளக்கம் கொடுத்து உள்ளார். அதில் மோடியின் அலை ஒயவே ஓயாது என்று கூறியவர் தேர்தல் தோல்வியை ரஜினியின் படத்துடன் …

Read More »

ஸ்டாலின் மட்டுமே உண்மையான தலைவர் !

தினகரன் ஆதரவாளராக இருந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏவான செந்தில் பாலாஜி சற்றுமுன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன் தன்னை திமுக கட்சியில் இணைத்து கொண்டார். திமுகவில் இணைந்தப்பின் செய்தியாளர்களுக்கு செந்தில் பாலாஜி பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் தொண்டர்களை அரவணைத்து செல்பவரே உண்மையான அரசியல் தலைவர்; அந்த வகையில் மு.க.ஸ்டாலின் உண்மையான தலைவர். மு.க.ஸ்டாலினை சிறந்த தலைவராக பார்க்கிறேன், அவர் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் …

Read More »

தினகரன் தவிர அனைவரையும் ஏற்று கொள்ள தயார்

அதிமுகவின் ஒரு பிரிவாக தினகரன் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அவருடைய கூடாரம் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே செந்தில் பாலாஜி திமுக இணையவிருப்பதாக கூறப்படும் நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மற்ற எம்.எல்.ஏக்களும் மீண்டும் அதிமுகவில் இணைய தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தினகரனை தவிர யார் வந்தாலும் அதிமுகவில் இணைத்து கொள்ளப்படுவார்கள் என இன்று சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பின்னர் முதலமைச்சர் …

Read More »