Thursday , November 21 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் (page 29)

தமிழ்நாடு செய்திகள்

ஜெ.வின் மரணத்தில் விலகும் மர்மங்கள் ….

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை ஆணையம் மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளது. ஜெ.வின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சர்ச்சை காரணமாக, ஓய்வு பெற்று நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஜெயலலிதாவின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உதவியாளர் பூங்குன்றன், இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, விவேக், அண்ணன் மகள் …

Read More »

எடுபுடி வேலை பார்க்கும் அரசு : வெளுத்து வாங்கிய கமல்ஹசன்

காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் போலியானது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் இன்று மாலை திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக கமல்ஹாசன் நேற்று மாலை ரயில் மூலம் சென்னையிலிருந்து திருச்சி கிளம்பி சென்றார். இந்நிலையில், இன்று காலை திருச்சியில் செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய கமல்ஹாசன் “நீதிமன்ற உத்தரவையடுத்து, காவிரி மேலாண்மை வாரியத்தை …

Read More »

சீமானின் முகத்திரையை நார் நாராய் கிழித்த வைகோ

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சீமான் எடுத்து கொண்ட புகைப்படம் கிராபிக்ஸ் என்றும், அவருடன் புகைப்படம் எடுத்து கொள்ள பிரபாகரன் விரும்பவில்லை என்றும் கூறிய வைகோ, சீமான் தான் விடுதலைப்புலிகளின் பிரதிநிதி என்று கூறி கோடிக்கணக்கில் வெளிநாட்டு தமிழர்களிடம் பணம் பெற்றதாகவும் வைகோ கூறியுள்ளார். மேலும் பிரபாகரன் – சீமான் சந்திப்பு வெறும் 8 நிமிடங்கள் மட்டுமே நடந்தது என்றும், விடுதலைப்புலிகளின் சீருடை அணிய கூட சீமானை பிரபாகரன் அனுமதிக்கவில்லை என்றும் …

Read More »

கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி

3’ம் தேதி கடையடைப்பு… விக்கிரமராஜா. 5’ம் தேதி, கடையடைப்பு… ஸ்டாலின் 11″ம் தேதி கடையடைப்பு…வெள்ளையன்… அடுத்தது மே5 வணிகர் தினம் என்று நன்கொடை வசூல் மற்றும் கடையடைப்பு. இன்னும் பல இலட்டர் பேடு அமைப்புகள் கடை அடைப்பு போராட்டம் அறிவிப்பு. கடை அடைத்தால் காவிரி ஆணையம் கிடைத்து விடுமா? கடையே இல்லாத தலைவர்களே எங்களை கடை அடைக்க சொல்கிறீர்களே இது நீயாயமா? நாங்கள் வாங்கிய கந்து வட்டி பணத்திற்கு நீங்கள் …

Read More »

தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் மனுவை ஏற்கக் கூடாது என வலியுறுத்திய தமிழகத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்தது. கர்நாடகாவில் சட்ட பேரவைத் தேர்தல் நடைபெறப் போவதால், காவிரி மேலாண்மை வாரிய அமைக்க 3 மாத கால அவகாசம் கேட்டு …

Read More »

முதலமைச்சர், துணை முதலமைச்சர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பு

காவரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தமிழகமெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பல இடங்களிலும் …

Read More »

ஆண் காவலர்களுடன் சரக்கடிக்கும் பெண் காவலர் – வைரல் வீடியோ

ஒரு பெண் காவல் அதிகாரி மது அருந்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆண் காவலர்கள் பணி நேரத்தில் மது அருந்துவது, போதையில் தள்ளாடுவது போன்ற வீடியோக்கள் இதற்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஒரு பெண் காவலார் சீருடையில் காரில் அமர்ந்து கொண்டு மது அருந்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஆண் காவலர்களுடன் சீருடையில் தண்ணி அடிக்கும் திண்டுகல் பெண்காவலர். வாடா போடா, …

Read More »

சென்னையில் பல இடங்களில் போராட்டம்

காவிரி மேலாண்மை அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய, மாநில அரசை கண்டித்தும் திமுகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தமிழகமெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நிலையில், தமிழகத்தின் பல இடங்களிலும் மாணவர்களும், பொதுமக்களும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அதேபோல் திமுக …

Read More »

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த மதிமுக நிர்வாகி ரவி உயிரிழப்பு

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக கூட்டத்தில் தீக்குளித்த சிவகாசியைச் சேர்ந்த மதிமுக நிர்வாகி ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மக்கள் எதிர்ப்புகளுக்கிடையே தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் நியூட்ரினோ திட்டத்தை செயற்படுத்துவதற்கு அனுமதியளித்து மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இத்திட்டம் செயற்படுத்தப்படும் இடத்தில் ஆய்வு மேற்கொண்ட `சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு`, மக்களின் வாழ்வாதாரமும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படாது என்று பரிந்துரைத்துள்ளது. இதனை தொடர்ந்து மத்திய …

Read More »

ஸ்டெர்லைட் ஆலை நடத்த ரூ.8 ஆயிரம் கோடி லஞ்சம் – கமல்ஹாசன் பகீர் குற்றச்சாட்டு

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித நோய்கள் ஏற்படுவதாக கூறி அந்த ஆலையை மூடும்படி அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அடுத்த ஆண்டுடன் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில் மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை நீடித்தது. மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி …

Read More »