Sunday , July 6 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் (page 22)

தமிழ்நாடு செய்திகள்

சேலத்தில் எம்ஜிஆர், ஜெ.வின் மணிமண்டம் அடிக்கல் நாட்டும் விழா – முதல்வர் பங்கேற்பு

சேலம் அண்ணா பூங்காவில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அமைக்கப்படவுள்ள மணிமண்டபத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். சேலத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். 2100 சதுரடியில் ரூ.80 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மணிமண்டபத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். அவருடன் சேலம் மாவட்ட கலெக்டர் ரோஹிணி …

Read More »

அம்மா அணியின் பொதுச்செயலாளர் யார்? திவாகரன் பதில்

தினகரனுக்கு போட்டியாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து அதற்கு அம்மா அணி என்ற பெயரும் வைத்துள்ளார் என்பதை சற்றுமுன் பார்த்தோம். இந்த கட்சியின் அலுவலகம் நேற்று மன்னார்குடியில் திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தில் பெரிய அளவில் ஜெயலலிதாவின் புகைப்படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சிக்கு சசிகலா பொதுச்செயலாளராகவும், தினகரன் துணை பொதுச்செயலாளராகவும் உள்ளனர். இந்த …

Read More »

திவாகரனை அதிமுக வில் சேர்க்க மாட்டோம் – ஜெயக்குமார் தடாலடி

தினகரன் – திவாகரன் இடையே ஏற்பட்ட மோதலில், நாங்கள் எக்காரணத்தைக் கொண்டும் திவாகரனை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு இட, அதற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் எதிர்வினையாற்ற தினகரன் – திவாகரனுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஏற்க முடியாது. …

Read More »

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக நடிகர் ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் சம்மன்

ரஜினிகாந்த்

சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கில் வரும் ஜூன் 6-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு சென்னை ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா மீது, சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், தன்னிடம் இருந்து பணம் பறிப்பதற்காக போத்ரா இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக குற்றம் …

Read More »

ஒரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் கட்டணம் – வங்கிகளின் ஷாக் திட்டம்

வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ஏ.டி.எம். பரிவர்த்தனை, காசோலை பயன்பாடு, டெபிட் கார்டு உள்ளிட்டவற்றுக்கு கட்டணம் வசூலிப்பது என்று வங்கிகள் திட்டமிட்டுள்ளன. வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு இலவச சேவைகளை வழங்கி வருகிறது. குறைந்த பட்ச பேலன்ஸ், ஏ.டி.எம். பண பரிவர்த்தனை, காசோலை பயன்பாடு உள்ளிட்டவற்றை வழங்குகிறது. விரைவில் இந்த இலவச சேவைகளை நிறுத்த வங்கிகள் திட்டமிட்டுள்ளன. வங்கிகள் அளிக்கும் சேவைக்கு 5 ஆண்டு முன் தேதியிட்டு வரி வசூலிக்க மத்திய அரசு …

Read More »

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி

விடுதலை சிறுத்தை கட்சி நடத்திய போராட்டம் காரணமாக, நடிகை கஸ்தூரி வேளச்சேரி பகுதியில் சிக்கிக்கொண்டார். எனவே தனது டிவிட்டர் பக்கத்தில் “பொதுமக்களை பாதிக்கக்கூடிய வகையில் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவது ஒரு பேஷனாகிவிட்டது ஏன் என தெரியவில்லை” என ஒரு காட்டமான டிவிட் போட்டிருந்தார். அந்நிலையில், விடுதலை கட்சியை சேர்ந்த ஆலூர் ஷா நவாஸ் “லட்சக்கணக்கில் திரண்டும் ஒரே ஒரு பேருந்துக் கண்ணாடி கூட உடையவில்லை. வழியில் எந்த வழிபாட்டுத் …

Read More »

நிர்மலா தேவி மீது மேலும் இரண்டு மாணவிகள் புகார்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த பேராசிரியர் நிர்மலாதேவி மீது மேலும் இரண்டு மாணவிகள் புகார் அளித்துள்ளனர். கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த அருப்புக்கோட்டை கல்லூரி ஒன்றின் கணித பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை கவர்னர் நியமனம் செய்த சந்தானம் தலைமையிலான குழுவும், சிபிசிஐடியும் தனித்தனியே விசாரணை செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவிக்க்கு துணை பேராசிரியர் முருகன் என்பவரும், ஆராய்ச்சி மாணவர் …

Read More »

மீதமுள்ள தண்ணீர் மட்டுமே தமிழகத்திற்கு: அதிமுக வேட்பாளரின் அதிர்ச்சி பேட்டி

உச்சங்கிளையில் ஊசலாடும் உட்கட்சி பிரிவுகள்

தமிழகத்தில் காவிரி தண்ணீருக்காக பல்வேறு அரசியல் கட்சியினர் போராடி வருகின்றனர். ஆளும் கட்சியான அதிமுகவும் காவிரிக்காக உண்ணாவிரதம் உள்பட ஒருசில போராட்டங்களை நடத்தி வருகிறது இந்த நிலையில் வரும் மே 12ஆம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யுவராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘எங்களை பொருத்தவரையும் காவிரி நீரை கர்நாடகத்திற்கே கிடைக்கவே முக்கியத்துவம் கொடுப்போம். கர்நாடக மாநிலத்தின் தேவை போக மீதியிருந்தால் மட்டுமே எங்கள் சகோதரர்களாக …

Read More »

ஜியோ போட்டியை சமாளிக்க முடியாமல் திணறும் ஏர்டெல்! ஏர்செல் கதி ஏற்படுமா?

இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், ஜியோவுக்கு முன் வரை போட்டியே இன்றி வெற்றிநடை போட்டு வந்த நிலையில் ஜியோவின் வருகைக்கு பின் லாபம் பெற திணறி வருகிறது. இந்த நிறுவனத்தின் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டு வருமானம் சுமார் 78% அளவு குறைந்துள்ளதாகவும், இந்த வருமானம். கடந்த 15 ஆண்டுகளில் மிகக்குறைந்த லாபம் என்றும் கூறப்படுகிறது.. ஜியோ போட்டி காரணமாக குறைந்த கட்டணத்தில் …

Read More »

ஆடியோவில் இருப்பது நிர்மலா தேவி குரல்தான் – ஆய்வில் நிரூபணம்

கல்லூரி மாணவிகளிடம் செல்போனில் பேசியது பேராசிரியர் நிர்மலாதான் என்பது ஆய்வில் நிரூபணம் ஆகியுள்ளது. கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த அருப்புக்கோட்ட கல்லூரி ஒன்றின் கணித பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை கவர்னர் நியமனம் செய்த சந்தானம் தலைமையிலான குழுவும், சிபிசிஐடியும் தனித்தனியே விசாரணை செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவிக்க்கு துணை பேராசிரியர் முருகன் என்பவரும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என்பவரும் உதவியதாக சிபிசிஐடி போலீசார் …

Read More »