Saturday , August 23 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் (page 15)

தமிழ்நாடு செய்திகள்

அமித்ஷாவால் மழை பெய்தது…குளத்தில் தாமரை மலரும் : தமிழிசை நம்பிக்கை

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் வருகையால் தான் தமிழகத்தில் மழை பெய்தது என்றும் அந்த மழை நீரில் தாமரை மலர்ந்தே தீரும் என தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்தும், மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கவும் அமித்ஷா நேற்று சென்னைக்கு வந்தார். விமான நிலையத்திலிருந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு …

Read More »

எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை!

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சிறுவன் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, முதலமைச்சரின் இல்லத்தில் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு அந்த சிறுவன் தொடர்பை துண்டித்துள்ளார். மீண்டும் அந்த தொலைப்பேசி எண்ணுக்கு காவலர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசவே, அவரது வீட்டிலும் வெடிகுண்டு வைத்துள்ளதாக அச்சிறுவன் தெரிவித்துள்ளான். இதனை அடுத்து முதலமைச்சர் இல்லத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். …

Read More »

எந்த நடிகனும் வரட்டும், ஆனால், என் தம்பி விஜய் வந்தால், கமல் கலக்கல் பதில்

கமல் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக தைரியமாக பேசுபவர். அப்படி அவர் சமீபத்தில் பேசியது செம்ம வரவேற்பு கிடைத்துள்ளது. கமல் இன்று டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் போது விஜய் ரசிகர் ஒருவர் ‘விஜய் அரசியலுக்கு வருவது பற்றி கூறுங்கள்’ என்றார். அதற்கு கமல் ‘எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்’ என்று கூறி விஜய் …

Read More »

ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்படாது: செங்கோட்டையன் அறிவிப்பு!

அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூட இருப்பதாக வெளியான தகவல் குறித்து திமுக உறுப்பினர்கள், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதில் பேசிய அக்கட்சியின் உறுப்பினர் பொன்முடி, அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை மூடும் திட்டம் அரசிடம் உள்ளதா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேர மாணவர்களுக்கு ஆர்வம் இல்லை எனவும், 849 பள்ளிகளில் …

Read More »

என்னை போலீஸ் புடிச்சாட்டாங்க ; நீங்களும் செய்யாதீங்க : நடிகர் ஜெய் அறிவுரை (வீடியோ)

அதிக இரைச்சலுடன் காரை ஓட்டிய நடிகர் ஜெய்க்கு, சென்னை போலீசார் வித்தியாசமான தண்டனையை வழங்கியுள்ளனர். மது அருந்திவிட்டு காரை செலுத்தி போலீசாரிடம் பலமுறை சிக்கியவர் நடிகர் ஜெய். சமீபத்தில் மிதமிஞ்சிய மது போதையில் அடையாற்றில் தனது காரை ஓரிடத்தில் மோதி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் நீதிமன்றம் வரை அவர் செல்ல நேரிட்டது. இந்நிலையில், நேற்று இரவு பெரிய மேட்டில் தனது காரை அதிக இரைச்சலுடன் அவர் ஓட்டி சென்றார். அவரை …

Read More »

தாமிரபரணி ஆற்றில் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை: பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து தாமிரபரணி ஆற்றில் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கீழ் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய், ஆகிய ஏழு கால்வாய்களின் கீழ் நேரடி மற்றும் மறைமுக பாசன பரப்புகள் உள்ளன. இந்த பாசன பரப்புகளுக்கு கார் …

Read More »

நடிகர் ரஜினிகாந்த் 1000% வியாபாரி” – பால் முகவர்கள் சங்கத் தலைவர் பகிரங்க கடிதம்!

ரஜினிகாந்த்

அதுகுறித்து ரஜினிக்கு கடிதம் ஒன்றை எழுதிய அவர், திரைப்படங்களில் நடித்து மக்களை ஏமாற்றுவது போல், நிஜ வாழ்க்கையில் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என குறிப்பிட்டிருந்தார். மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களை சமூக விரோதிகள் என்று கூறியது முற்றிலும் தவறு என சுட்டிக்காட்டி இருந்தார். காலா திரைப்படத்தின் நோக்கம் குறித்து நடிகர் ரஜினிகாந்திற்கு கேள்வி எழுப்பி இருந்த அவர், மத்திய மாநில அரசுகளை எதிர்ப்பது மற்றும் காவல் …

Read More »

ரூ.750 கோடி இழப்பீடு: வேதாந்தா நிறுவனத்திற்கு செக்?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்ட போது வெடித்த கலவரம் காரணமாக 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர். இதன் பிறகு அரசு மீது எழுந்த விமர்சனங்கல் காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. இந்த ஆலையால் சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில், ஸ்டெர்லைட் ஆலையின் தாய் நிறுவனமான வேதாந்தா நிறுவனம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடாக ரூ.750 …

Read More »

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தற்போதைக்கு ஆபத்து இல்லை; தமிழ் நாட்டிற்குத்தான் ஆபத்து

காஞ்சிபுரத்தில் மறைந்த முன்னால் மாவட்ட திமுக அவைத் தலைவர் CVM பொன்மொழியின் திருஉருவபடத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே நடந்த பொதுகூட்டத்தில் கலந்துகொண்டு மு.க.ஸ்டாலின் பேசினார். 18 MLA க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் நீதிபதிகள் வழங்கிய மாறுபட்ட தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தற்போதைக்கு ஆபத்தில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.  எப்போது இந்த ஆட்சி மாறும் என் மக்கள் கேட்பதாகக் கூறிய மு.க.ஸ்டாலின், …

Read More »

​நடிகை கஸ்தூரி வீட்டை முற்றுகையிட்ட திருநங்கைகள்!

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் தொடர்பான இருநீதிபதிகளின் தீர்ப்பு குறித்து, நடிகை கஸ்தூரி அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அப்போது அந்த டிவிட்டர் பதிவில் நடிகை கஸ்தூரி திருநங்கைகளை இழிவுபடுத்தியதாக சர்ச்சை எழுந்தது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தி போயஸ் கார்டன் பகுதியில் உள்ள நடிகை கஸ்தூரியின் வீட்டை, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த திருநங்கைகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Read More »