சசிகலாவுக்கு பேரிடி – சொத்து குவிப்பு வழக்கில் ஒருவாரத்தில் தீர்ப்பு முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்துவிட துடித்துக் கொண்டிருக்கும் சசிகலாவுக்கு பேரிடியாக சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையானதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஒருவாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதி முதல்வர் பதவியில் உட்கார்ந்துவிட தயாராகிவிட்ட சசிகலாவுக்கு டெல்லியில் இருந்து இன்று வந்துள்ள செய்தி பேரிடியாகத்தான் இருக்கும். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்த மேல்முறையீட்டு […]
தமிழ்நாடு செய்திகள்
பொது மக்களை நேரில் சந்தித்துப் பேசாத சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார்
பொது மக்களை நேரில் சந்தித்துப் பேசாத சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார் பொதுமக்கள் முன்பாக எந்த பொதுக்கூட்டத்திலும் பேசாமல், மக்களை ஒரு முறை கூட நேரில் சந்தித்துப் பேசாத சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். ஜெயலலிதா மறைந்து சரியாக இரண்டாவது மாதங்கள் ஆன நிலையில் தமிழக முதல்வராக சசிகலா தேர்தெடுக்கப்பட்டுள்ளார் . கடந்த டிசம்பர் 5ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் […]
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியல் பயணத்தை தொடங்கினார்
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியல் பயணத்தை தொடங்கினார் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியல் பயணத்தை தொடங்கினார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவை அறிவிப்பேன் என்று தீபா தெரிவித்துள்ளார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று அ.தி.மு.க.வில் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வந்தனர். தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள தீபாவின் வீட்டு முன்பு […]
சென்னை கடலோரப் பகுதியிலிருந்து 65 டன் எண்ணெய் கசிவு அகற்றம் – மத்திய அரசு
சென்னை கடலோரப் பகுதியிலிருந்து 65 டன் எண்ணெய் கசிவு அகற்றம் – மத்திய அரசு சென்னை கடலோரப் பகுதியிலிருந்து இதுவரை 65 டன் எண்ணெய் கசிவு அகற்றப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 28-ம் தேதி சென்னை காமராஜர் துறைமுகத்தில் 2 கப்பல்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் கடலில் கச்சா எண்ணெய் கசிந்தது. இந்நிலையில், சென்னை கடலோரப் பகுதியிலிருந்து இதுவரை 65 டன் அதாவது 90% […]
சிவகங்கை மாவட்ட தொல்பொருள் ஆய்வுக்கு அனுமதி அளிக்க மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம்
சிவகங்கை மாவட்ட தொல்பொருள் ஆய்வுக்கு அனுமதி அளிக்க மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம் சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் தொல்பொருள் ஆய்வுகளை தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்று திமுக. மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினரான டி.கே.ரங்கராஜனும் இணைந்து மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் (தனிப்பொறுப்பு) மகேஷ் சர்மாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: அண்மையில் தமிழ்நாட்டிலுள்ள […]
ஓ.பன்னீர்செல்வம் தன் பதவி பற்றி கவலைப்படாமல் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்
ஓ.பன்னீர்செல்வம் தன் பதவி பற்றி கவலைப்படாமல் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த ஸ்டாலின் வலியுறுத்தல் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன் பதவி பற்றி கவலைப்படாமல் மாநிலத்தில் நிலவும் மக்கள் பிரச்சினைகள், அண்டை மாநிலங்களால் தமிழகத்திற்கு ஏற்படும் பிரச்சினைகள், மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசு திட்டங்கள், உதவிகள் போன்றவற்றில் தன் முழுக்கவனத்தை செலுத்த வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக […]
எண்ணெய் கசிவு நிலைமை சீராகும் வரை மீனவர்களுக்கு நிவாரணம் தேவை – தொல். திருமாவளவன்
எண்ணெய் கசிவு நிலைமை சீராகும் வரை மீனவர்களுக்கு நிவாரணம் தேவை – தொல். திருமாவளவன் கப்பல் விபத்தால் ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் சென்னையில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் கடற்பகுதியில் எண்ணெய் கழிவு பாதிப்பை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆய்வு மேற்கொண்டார். கடலில் கலந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணியை பார்வையிட்ட திருமாவளவன், வாளியில் எண்ணெய் கழிவுகளை அகற்றுவது அதிர்ச்சியளிப்பதாக கூறினார். செய்தியாளர்களிடம் […]
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடப்பதாக தகவல்
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடப்பதாக தகவல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்க ஒப்புதல் கடிதம் பெறுவதற்காகவே கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா கடந்த டிசம்பர் 31-ம் தேதி பொறுப்பேற்றார். அப்போதே கட்சியும், ஆட்சியும் ஒருவரிடம் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, சசிகலாவை முதல்வராக்கும் முயற்சி நடந்தது. அமைச்சர்கள் சிலரே அதற்கு அடித்தளம் […]
தமிழக மீனவர்கள் 25 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்
தமிழக மீனவர்கள் 25 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 25 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும்போது, எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது. விசாரணைக் […]
மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ.2.287 கோடி ஒதுக்கீடு
மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ.2.287 கோடி ஒதுக்கீடு மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ.2,287 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2009 முதல் 14ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட தொகையை விட 160 சதவீதம் அதிகமாகும். மாநில வாரியாக… இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்ட செய்தி: * மேற்கு வங்க மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.6336 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த […]





