தமிழ்நாடு செய்திகள்

100 தாமரை மொட்டுகளே...: தமிழிசை நம்பிக்கை

சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ஊழலுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி – தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ஊழலுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி – தமிழிசை சவுந்தரராஜன் கருத்து சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்கிய இந்த தீர்ப்பு ஊழலுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி என மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜான் தெரிவித்தார். பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். […]

கவர்னர் அழைப்பு

கவர்னர் அழைப்புக்காக எதிர்நோக்கியுள்ளோம் – எடப்பாடி பழனிச்சாமி

கவர்னர் அழைப்புக்காக எதிர்நோக்கியுள்ளோம் – எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது: அதிமுக எம்எல்ஏ கூட்டம் நடைபெற்றது. கழக பொருளாளர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எனது பெயரை அறிவித்தார். என்னை, அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக தேர்வு செய்தனர். ஜெ., அரசை அமைக்க வேண்டும் என கவர்னருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அவர் அழைப்புக்காக எதிர்நோக்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.               […]

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்றுள்ளார்

கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்றுள்ளார் சசிகலாவுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்றுள்ளார். அவருக்கு ஆதரவு அளித்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் சென்றனர். சொத்து குவிப்பு வழக்கு சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டு, அவர்களுக்கான 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. […]

சட்டசபை வாக்கெடுப்பு ப.சிதம்பரம்

மெஜாரிட்டியை நிரூபிக்க சட்டசபை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – கவர்னருக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்

மெஜாரிட்டியை நிரூபிக்க சட்டசபை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – கவர்னருக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல் மெஜாரிட்டியை நிரூபிக்க சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கவர்னருக்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு அணியாக இருந்தால் கவர்னர் மெஜாரிட்டியை நிரூபிக்க கேட்டுக்கொள்ளலாம். 2 பிரிவாக இருக்கும் பட்சத்தில் கவர்னர் சட்டசபையை கூட்டி வாக்கெடுப்பு நடத்த அழைப்பு விடுக்க […]

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது

அ.தி.மு.க.வில் இருந்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்

அ.தி.மு.க.வில் இருந்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கி இருக்கிறார்கள். இன்று காலை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து அங்கு சசிகலா, தன்னை ஆதரிக்கும் 125 எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி சசிகலா அதிரடி நடவடிக்கை எடுத்தார். ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. பொருளாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இந்த நீக்கம் செல்லாது என்று கூறிய ஓ.பன்னீர்செல்வம் […]

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா முயற்சி தோல்வி – அன்பழகன்

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா முயற்சி தோல்வி – அன்பழகன் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பாக, சொத்து குவிப்பு வழக்கை தொடர்ந்த தி.மு.க., பொதுச்செயலாளர் அன்பழகன் கூறுகையில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா முயற்சி தோல்வியடைந்துள்ளது. தற்போது கோர்ட் தீர்ப்பு வந்துள்ளது. சசிகலாவுக்கும், மற்றவர்களும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 4 வருட சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. எக்காரணத்தை முன்னிட்டும் அவர் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. இவ்வாறு அவர் […]

ஒற்றுமையுடன் செயல்படுவோம் - ஓபிஎஸ் அழைப்பு

அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம் – அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் ஓபிஎஸ் அழைப்பு

அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம் – அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் ஓபிஎஸ் அழைப்பு தற்காலிகமாக நமக்கிடையே ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளை மறந்து நாம் அனைவரும் எப்போதும் போல ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்று அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பொறுப்பு முதல்வர் ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில், ”எனது அன்புக்குரிய அதிமுக அமைச்சர்களே, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்! கடந்த […]

சட்டமன்ற கட்சி-எடப்பாடி பழனிச்சாமி

சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு

சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு சசிகலாவுக்கு உச்ச நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளதையடுத்து சட்டமன்ற கட்சித் தலைவராக (முதல்வர்) நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கூவத்தூரில் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய சசிகலா எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை முன் மொழிந்தார். இதையடுத்து அவரை எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர். முன்னதாக செங்கோட்டையன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் […]

சட்டமன்ற கட்சி-சசிகலா

சட்டமன்ற கட்சித் தலைவராக (முதல்வர்) யார்? செங்கோட்டையன் , எடப்பாடி பழனிச்சாமி அல்லது தீபக் – எம்எல்ஏக்களுடன் சசி தீவிர ஆலோசனை

சட்டமன்ற கட்சித் தலைவராக (முதல்வர்) யார்? செங்கோட்டையன் , எடப்பாடி பழனிச்சாமி அல்லது தீபக் – எம்எல்ஏக்களுடன் சசி தீவிர ஆலோசனை சசிகலாவுக்கு உச்ச நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளதையடுத்து சட்டமன்ற கட்சித் தலைவராக (முதல்வர்) செங்கோட்டையன் அல்லது எடப்பாடி பழனிச்சாமி அல்லது ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக கூவத்தூர் விடுதியில் தனது கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களுடன் […]

21 வருடங்களுக்கு பின் நீதி நிலைநாட்டப்பட்டது: தி.மு.க.

21 வருடங்களுக்கு பின் நீதி நிலைநாட்டப்பட்டது: தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்

21 வருடங்களுக்கு பின் நீதி நிலைநாட்டப்பட்டது: தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் சசிக்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பாக தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: 21 வருடங்களுக்கு பின் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஊழல் செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பது என்பதற்கு இந்த தண்டனை உறுதி செய்துள்ளது. தமிழகத்தில்நிலையான ஆட்சி ஏற்பட கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரச்னைக்கு தீர்வ காண நிலையான ஆட்சி வேண்டும். இவ்வாறு அவர் […]