Friday , November 22 2024
Home / தமிழ்மாறன் (page 9)

தமிழ்மாறன்

அவசரகாலநிலை நீக்கப்படும்வரை : சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீடிக்கும்

அவசரகால நிலைப் பிரகடனம் நீக்கப்படும் வரையில், இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீடிக்கும் என்று அரச வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இலங்கையில் இன பதற்றநிலை தீவிரமடைந்ததையடுத்து, கடந்தவாரம்சமூக வலைத்தளங்களை முடக்கிய அரசு, இந்தத் தற்காலிகத் தடை 72 மணித்தியாலங்கள் வரை நீடிக்கும் என்று கூறியிருந்தது. எனினும், இந்தத் தடை மேலும் நீடிக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி செயலரும், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையத்தின் தலைவருமான ஒஸ்ரின் பெர்னாண்டோ, சமூக வலைத்தளங்கள் …

Read More »

சமூக வலைத்தளங்களின் முடக்கம்; இலங்கை பொருளாதாரத்திற்கு அடி

சமூக வலைத்தளங்கள் பாவனைமீது அரசு வித்துள்ள தற்காலிக தடை இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கல் செலுத்தியுள்ளதுடன்இ பொருளாதார சரிவுக்கு வழிவகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்டி நிர்வாகப் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருந்த இநனவாத வன்முறைகள் காரணமாக இலங்கை முழுவதும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த முதன் கிழமை முதல் அவசரகால நிலையும் நாடு பூராக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அவசரகால நிலை நீக்கப்படும்வரை சமூக வலைத்தளங்கள் …

Read More »

மைத்திரி- மோடியை சந்தித்தார்

இந்தியாவின் புதுடெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகியுள்ள அனைத்துலக சூரியசக்தி மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார். இன்று காலை புதுடெல்லியில் ஆரம்பமான குறித்த மாநாட்டில், 45 நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரியும் கலந்துகொண்டுள்ளார். மாநாட்டிற்கு வருகை தந்தவர்களை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். இம்மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரி உரையாற்றியதோடு, அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

Read More »

சட்டரீதியான நடவடிக்கை மூலம் இனவாதத்தைத் தோற்கடிப்போம்

பேரினவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கான கண்டி – திகன பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொண்ட மாகாண சபைகள் மற்றும் உள்ள+ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா, சட்டரீதியான நடவடிக்கை மூலம் இனவாதத்தைத் தோற்கடிப்போம் என்று தெரிவித்துள்ளார். திகன உள்ளிட்ட அப்பிரதேசங்களில் தாக்குதல்களுக்குள்ளான பள்ளிவாசல்களின் தலைவர்கள் உட்பட நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் ஊர்; பிரமுகர்களுடன் விசேட கலந்துரையாடலொன்றிலும் அமைச்சர் ஈடுபட்டார். கண்டி – மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களையும் சந்தித்து, அவர்களுக்கும் இது …

Read More »

ஆயுதங்கள் மீது முஸ்லிம்களுக்கு ஒருபோதும் நம்பிக்கை இல்லை

நாங்கள் ஆயுதத்தின் மீது எந்தக் காலத்திலும் நம்பிக்கை இல்லாத ஒரு சமூகமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களை சந்திப்பதற்காக நேற்று (சனிக்கிழமை) கண்டிக்கு விஜயம் செய்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டகுழுவில் அங்கம் வகித்திருந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அங்கு இடம்பெற்ற சந்திப்புகளிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சட்டத்தை கையில் எடுக்க எவருக்கும் அனுமதிக்க முடியாது. இவ்வளவு அழிவுகளும், …

Read More »

நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஜனாதிபதியால் முடியும் – நாம்நாத் கோவிந்

சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முடியும் என இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (சனிக்கிழமை) இந்திய ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தளமான ராஸ்ரபதி பவனில் இடம்பெற்றது. இதன்போது சூழலைப் பாதுகாப்பது தொடர்பில் ஜனாதிபதி எடுத்திருக்கும் நடவடிக்கைகளை இந்திய ஜனாதிபதி பாராட்டினார். இதேவேளை, முழு உலகமும் மின்சக்தி பிரச்சனைக்கும், பூகோள வெப்பமாதல் அதிகரிப்பது …

Read More »

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்ற தினேஷ் தலைமையில் திட்டமிடல் குழு!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்ற பொது எதிரணி புதிய திட்டமிடல் குழுவொன்றை நியமித்துள்ளது. பொது எதிரணியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் தினேஷ் குணவர்தன தலைமையிலான திட்டமிடல் குழுவொன்றே இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கெதிராக கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்ற ஆதரவு திரட்டுவதற்காக கூட்டு எதிர்கட்சியினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய தரப்புடன் பேச்சுகளை …

Read More »

கண்டி அசம்பாவிதத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கு நஷ்டயீடு விரைவில்

கண்டி அசம்பாவிதத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 இலட்சம் ரூபாவும், சேதமடைந்த வீடுகளுக்கு 50 ஆயிரம் ரூபாவும், கடைகள் மற்றும் வியாபார நிலையங்களுக்கு வியாபாரத்தை மீள ஆரம்பிப்பதற்காக 1 இலட்சம் ரூபாவும், பள்ளிவாசல்களுக்கு 1 இலட்சம் ரூபாவும் முதற்கட்டமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் அழைப்பின்பேரில், கண்டி அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பின்னர், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டயீடு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க …

Read More »

ஜனாதிபதியாக களமிறங்கும் நிலை ஏற்பட்டால் அமெரிக்க குடியுரிமையை தூக்கியெறிவேன்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்வேன் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விஷேட நேர்காணல் ஒன்றிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, நாட்டின்மீது உண்மையான பற்றும் அன்பும் உள்ள ஒருவரும், யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த ஒருவரும், இராணுவத்தினரை பாதுகாக்கும் ஒருவரும், நாட்டில் கலாச்சாரத்தை பாதுகாக்கும் ஒருவரும், சுயநலமற்ற தூய்மையான அரசியலில் …

Read More »

ராஜீவ் காந்தி கொலையாளிகளை முற்றாக மன்னித்து விட்டோம்

ராஜீவ் காந்தி கொலையாளிகளைத் தானும், தனது சகோதரி பிரியங்காவும் முழுமையாக மன்னித்து விட்டதாக ராஜீவ் காந்தியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மலேசியா சென்றுள்ள ராகுல் காந்தி, கோலாலம்பூரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றின் கலந்துரையாடல் நேரத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்தாவது, “நாங்கள் பல ஆண்டுகளாக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தோம். அது எம்மை பாதித்தது. நாங்கள் மிகவும் கோபமாக இருந்தோம். …

Read More »