Author: தமிழ்மாறன்

க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரம் வெளியாகும்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகள் இந்த வாரம்; வெளியிடப்படவுள்ளன. விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளன. இம்முறை பரீட்சைக்கு சுமார் 6 இலட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் தோற்றியிருந்தனர். இதேவேளை, தஹம் பாடசாலை தொடர்பான இறுதிப் பரீட்சை இம் மாதம் 24ஆம் 25ஆம் திகதிகளில் இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்தப் பரீட்சைக்கு சுமார் 1 இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

கண்டி வன்முறை: மூன்று குழுக்கள் குறித்து தீவிர விசாரணை

கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன், அரசியல் கட்சிகள் அடங்கிய 3 குழுக்கள் செயற்பட்டுள்ளமை தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் இலங்கை புலனாய்வுப் பிரிவினர் இரகசிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போதும் இந்தக் குழுக்களைச் சேர்ந்த பலர் கைதாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய சில அரசியல் கட்சிகளும் இந்தக் குழுக்களுடன் இணைந்து செயற்பட்டிருப்பதாக புலனாய்வு விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அடுத்த பிரதமருக்கு நான்தான் தகுதியானவன்; ஜோன் அமரதுங்க

இலங்கையின் அடுத்த பிரதமராவதற்கான அத்தனைத் தகுதிகளும் தனக்கு இருப்பதாக சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினருமான ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியிலிருக்கும் அதன் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அடுத்தபடியான சிரேஷ்ட உறுப்பினராக தாம் விளங்குவதாகவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க கூறியுள்ளார். கொழும்பு – வத்தளை அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை முடித்துக்கொண்டு வெளியே […]

ஜப்பானிய பேரரசரை சந்தித்தார் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜப்பானிய பேரரசர் அக்கிஹிட்டோ ஆகியோர் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. ஜனாதிபதிக்கு ஐந்து நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாபிதி இன்று காலை ஜப்பானிய பேரரசரை சந்தித்தார். இதன்போது ஜப்பானிய பேரரசர் ஜனாதிபதிக்கு சிறப்பு வரவேற்பளித்தார். நாளை ஜப்பானிய பிரதமரை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து மஹிந்த, பஸிலுடன் பேசவில்லை

2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, மஹிந்த ராஜபக்ஷவுடனோ, பஸில் ராஜபக்ஷவுடனோ பேசவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இப்போது கலந்துரையாடுவது, மிகவும் முற்கூட்டிய நடவடிக்கையாக அமையும். அதற்கான நேரம்வரும் போது, மஹிந்த ராஜபக்ஷ ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வருவார். ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தும் போது எந்தவொரு […]

முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு நவநீதப்பிள்ளை கடும் கண்டனம்

நம்பிக்கையை குறையச் செய்யும் வகையில் இலங்கை அரசின் தற்போதைய செயற்பாடுகள் அமைவதாக மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கவலை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசு ஐக்கிய நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றும் என தாம் நம்பியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய அரசு, ஐக்கிய நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை முழுமையாக […]

தகவல் அறியும் உரிமை எங்கே? நாமல் கேள்வி

அரசின் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் தகவலறியும் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்தியதாக மார்தட்டிக்கொள்ளும் அரசு, சமூக வலைத்தளங்களை முடக்கி பேச்சு சுதந்திரத்தை இல்லாமல் செய்துள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சாடியுள்ளார். சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளமை தொடர்பாக, அவர் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வரலாற்றில் எந்த அரசும் செய்யாத வகையில் தற்போதைய அரசு சமூக வலைத்தளங்களை முடக்கி வைத்துள்ளது. குறிப்பாக, தமக்கு சாதகமான நிலைப்பாட்டில் சமூக […]

ஒரு சிலரின் செயல்களால் முழு உலகிலும் சிங்கள இனம் குற்றச்சாட்டை எதிர்கொள்கிறது

ஒரு சிலரின் அழிவான செயல்கள் காரணமாக முழு உலகிலும் சிங்கள இனம் குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவதுஇ நடைபெற்ற சம்பவங்கள் ஊடாக உலகில் ஏனைய நாடுகளுடன் இலங்கையை ஒப்பிட்டு பார்க்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல தெற்காசியாவில் வாழும் ஏனைய பௌத்த மக்களுக்கு […]

ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கிடையே முறுகல்

ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கிடையே முறுகல்நிலை உருவாகியுள்ளதாக உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டம், ஒழுங்கு அமைச்சை எவரிடம் கையளிப்பது என்பது தொடர்பில் எழுந்த சர்ச்சையையடுத்தே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று கடந்தவாரம் இடம்பெற்றது.அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹாசீம், அகிலவிராஜ் காரியவசம், ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் இதில் பங்கேற்றனர். சந்திப்பில் பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “”சட்டம், ஒழுங்கு […]

பொலிஸார்மீது சரமாரியாக விமர்சனம் : விசாரணை வேட்டையில் பொலிஸ் ஆணைக்குழு!

அம்பாறை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட இன வன்முறைகளின்போது பொலிஸார் செயற்பட்டவிதம் தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. வன்முறைகள் வெடித்த பகுதிகளுக்கு இவ்வாரம் நேரில் பயணம் மேற்கொள்ளவுள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களிடம் கலந்துரையாடி சாட்சியங்களைப் பதிவுசெய்யவுள்ளனர். அம்பாறை மற்றும் கண்டி வன்முறைகளின்போது சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்குப் பொலிஸார் தவறிவிட்டனர் என்றும், பக்கச்சார்பான முறையிலேயே அவர்கள் […]