அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னால் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்கா வாழ் இலங்கை முஸ்லிம்களும், தமிழர்களும் கலந்துகொண்டனர்.
Author: தமிழ்மாறன்
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகள் பலமான நட்புறவாக மாறியுள்ளது – ஜப்பான் பிரதமர்
சென் பிரன்ஸிஸ்கோ மாநாட்டில் பலப்படுத்தப்பட்ட ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான நட்புறவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் புதிய பரிமாணத்தை பெற்றிருப்பதுடன், அது நம்பிக்கையும் பலமும் மிக்க நட்புறவாக மாறியிருப்பதாக ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்தார். ஜப்பானுக்கு அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேவினால் நேற்றுமுன்தினம் விசேட இராப்போசன விருந்து வழங்கப்பட்டது. டோக்கியோ நகரில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் […]
வெறுப்புணர்வை தூண்டியோருக்கு எதிராக நடவடிக்கை அவசியம் : பிரிட்டன் வலியுறுத்து
இன, மதங்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை அரசிடம் பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் தமது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற வன்முறை காரணமாக பெருமளவானோர் அச்சமடைந்துள்ளனர். இந் நிலையில், இன மற்றும் மத ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில், சமூக வலைத்தளங்கள் உள்ளடங்காளாக செயற்பட்ட அனைவருக்கும் எதிராக […]
ரஷ்யா சென்ற நாமல்
ரஷ்யாவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிக்க கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் எதிர்வரும் 18ஆம திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை சுதந்திரமான கண்காணிப்பாளராக கண்காணிப்பதற்கு வருமாறு நாமல் ராஜபக்ஷவுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று நாமல் ராஜபக்ஷ ரஷ்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இலங்கையில் பேஸ்புக் மீதான தடை நீக்கப்பட்டது
இலங்கையில் பேஸ்புக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது டுவிட்டர் தளத்தில் இதனைப் பதிவு செய்துள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகளும்இ ஜனாதிபதி செயலாளருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று இன்று நடைபெற்றது. இதன்போது இனவிரோத பதவிகளை தடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பேஸ்புக் பிரதிநிதிகள் உறுதியளித்தனர். இதன்படி இந்த தடையை நீக்குவதற்கு தாம் இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் […]
சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தக்கூடிய முறையான பொறிமுறையொன்று அவசியமாகும்
கண்டி மற்றும் அம்பாறை சம்பவங்களின் பின்னர் விதிக்கப்பட்ட பேஸ்புக் சமூக வலையமைப்பிற்கான தற்காலிகமான தடை எதிர்வரும் சில தினங்களுக்குள் நீக்கப்படும் எனவும், சமூக நலனுக்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு விடயத்திற்கும் இடமளிக்கப்பட்டபோதிலும், சமூகத்தை சீர்குலைக்கும் விடயங்கள் காணப்படுமாயின் அவற்றை கட்டுப்படுத்தக்கூடிய முறையொன்று அவசியமாகும் எனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். ஜப்பானிற்கான அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று(13) பிற்பகல் டோக்கியோ இம்பேரியல் […]
வன்முறையாளர்களுக்கு எதிராக விரைவில் வழக்குத் தொடுக்கவும்!
கண்டியில் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுப்பதற்குரிய நடவடிக்கையைத் துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். வன்முறைச் சம்பவம் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் கூடிய விரைவில் முடிவுக்குக் கொண்டுவருமாறு பாதுகாப்புத் தரப்பினருக்கும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். இதேவேளை, கண்டியிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரும், புலனாய்வுத்துறையினரும் தனித்தனியே விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 230 பேர் […]
வன்முறைகளில் 24 பள்ளிவாசல்கள், 445 வீடுகள் மற்றும் வாணிபங்கள் சேதம்
சிறிலங்காவில் கடந்தவாரம் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளில்இ 24 பள்ளிவாசல்கள்இ 445 வீடுகள் மற்றும் வாணிபங்கள் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 4ஆம் நாள் கண்டி மாவட்டத்தில் உள்ள தெல்தெனிய மற்றும் திகண பகுதிகளில் தொடங்கிய வன்முறைகளில் முஸ்லிம்களின் பெருமளவு சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக நேற்று தகவல் வெளியிட்ட சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர, ”வன்முறைகளின் போதுஇ 445 வீடுகள், வாணிப நிலையங்கள் மீது […]
மகிந்தவின் எழுச்சிக்குப் பின் வீழ்ச்சி காணும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு
சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெற்றதையடுத்துஇ அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 1.18 ரூபாவினால் (0.76 வீதம்) வீழ்ச்சி கண்டுள்ளது. சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள அரசியல் உறுதிப்பாடின்மையினால்இ பொருளாதாரம் ஆட்டம் கண்டு வருகிறது. கடந்த பெப்ரவரி 9ஆம் நாள் 156.19 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலர் ஒன்றின் மதிப்பு நேற்றுஇ 157.37 ரூபாவாக வீழ்ச்சி கண்டது. இது […]
மெதுவான முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சர் கவலை
வடக்கு மாகாணத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மிகவும் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை தெரிவித்துள்ளார். வடக்கிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்காவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியான போல் கொட்பிறி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைத் தாம் மீண்டும் சந்தித்த போதே அவர் இந்தக் கவலையை வெளியிட்டார் என்று கீச்சகப் பதிவு ஒன்றில், போல் கொட்பிறி குறிப்பிட்டுள்ளார். Pயரட […]





