வவுனியா நகரப்பகுதியை அண்டியுள்ள மக்கள் குடியிருப்புக்களில் நுழையும் குரங்குகளால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிா்நோக்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரை அண்மித்துள்ள கற்குழி, குட்செட்வீதி, வைரவபுளியங்குளம், உள்வட்ட வீதி, வவுனியா நகரம், குருமன்காடு உள்ளிட்ட பகுதிகளே குரங்குகளின் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளன. குறித்த பகுதிகளுக்கு நாளாந்தம் வந்து செல்லும் குரங்குகள் அப்பகுதியில் உள்ள மக்களது வசிப்பிடங்களில் புகுந்து அவர்களது ஆடைகள், வீட்டு வளவில் உள்ள பொருட்கள், பயன்தரு மரங்களில் உள்ள […]
Author: தமிழ்மாறன்
மன்னாரில் சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் மீட்பு!
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாப்பாமோட்டை பிரதேச காட்டுப்பகுதியில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் சிலவற்றை பாதுகாப்புத்தரப்பினர் மீட்டுள்ளனர். அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கிராம அலுவலகர் ஊடாக பாப்பாமோட்டை காட்டுப்பகுதியில் வெடிக்காத நிலையில் உள்ள வெடி பொருட்கள் தொடர்பில் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக குறித்த வெடி பொருட்கள் […]
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வை வழங்க ரோஹித்த தயார்!
வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர் விபரங்களை சத்தியக்கடதாசி ஒன்றின் மூலம் தம்மிடம் ஒப்படைக்குமாறும், அதன் பின்னர் உரிய அதிகாரிகளிடம் கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தருவதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், கிழக்கு ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 156 நாட்களை கடந்துள்ளது. எனினும், தமது பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வை பெற்றுக்கொடுக்காத நிலையில், இன்றைய தினம் கிழக்கு […]
வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படாவிட்டால தமிழர்களின் தனித்துவம் இல்லாமல் போய்விடும்
வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படாவிட்டால, இன்னும் 20 வருடங்களில் தமிழர்களின் தனித்துவம் இல்லாமல் போய்விடுமென வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள வடக்கு முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 1949ஆம் ஆண்டை விட தற்போது அங்கு வாழும் சிங்கள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதென முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில, புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் சுயாட்சி ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் தனித்துவம் அற்றுப்போய்விடும் என அவர் […]
சீன கடற்படையின் பாரிய மிதக்கும் மருத்துவமனை சிறிலங்கா வருகிறது
சீன கடற்படையின் மிக நவீனமான மருத்துவமனைக் கப்பலான, ஆர்க் பீ்ஸ் நல்லெண்ணப் பயணமாக நாளை மறுநாள் சிறிலங்காவுக்கு வரவுள்ளது. இந்தக் கப்பல் எதிர்வரும் 9ஆம் நாள் வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்று சீன தூதரகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 8ஆம் நாள், இந்த மிதக்கும் மருத்துவமனையில் இலங்கையர்களுக்கு இலவச மருத்துவ உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்க் பீ்ஸ் கப்பல், சீனாவினால் கட்டப்பட்ட மிகப் பெரிய மருத்துவமனைக் கப்பல் என்பது […]
ஏமன் நாட்டில் 2 லட்சம் குழந்தைகள் பட்டினியால் உயிர் இழக்கும் அபாயம்
ஏமன் நாட்டில் 2 லட்சம் குழந்தைகள் உயிர் இழக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக சேவ் த சில்ரன் சமூக அமைப்பு தெரிவித்து உள்ளது. அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு அரசு கட்டுப்பாட்டில் சில பகுதிகளும், புரட்சி படையினர் கட்டுப்பாட்டில் சில பகுதிகளும் இருக்கின்றன. இரு தரப்பினரும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வேறு இடங்களில் […]
பொருளாதார தடை: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை
வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்க முடிவு செய்ததை அடுத்து அமெரிக்காவுக்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு எதிராக ரஷியா செயல்படுவதாகவும், சர்வதேச விதிமுறைகளை மீறி நடந்து கொள்வதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டி வந்தது. இதனால் ரஷியாவுக்கும் இதே போல் தங்கள் நாட்டுக்கு எதிராக செயல்படும் வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளுக்கும் பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்தது. இது தொடர்பான மசோதா அமெரிக்க […]
தமிழரசுக் கட்சியை புறந்தள்ளி இடம்பெற்ற ரகசிய சந்திப்பு!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியை தவிர்த்து, ஏனைய பங்காளிக் கட்சிகள் ரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளன. வவுனியா புகையிரத நிலையத்திற்கு அண்மையில் உள்ள விருந்தினர் விடுதியொன்றில், நேற்று (புதன்கிழமை) இரவு இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எனினும், இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. வடக்கு மாகாண சபையின் சுழற்சி முறையிலான ஆசனம், இம்முறை தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட்ட நிலையில் ஏனைய கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இவ்வாறான […]
மஹிந்த ஆட்சியில் 87 ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்பட்டனா்: மங்கள சமரவீர
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் 87 ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்பட்டனா் என்றும், 13 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர் என்றும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஊடக ஒடுக்குமுறை கடந்த ஆட்சியில் அதிகமாக காணப்பட்டதென சுட்டிக்காட்டிய அமைச்சர் மங்கள, சில ஊடகவியலாளர்கள் தொடர்பான தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லையென மேலும் தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இலங்கை பத்திரிகை பேரவையின் ஊடகக் கல்வி […]
வடக்கில் திட்டமிட்ட குழப்பநிலையை ஏற்படுத்த சதி?
வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பாக பொலிஸார் அவசர அவசரமாக முன்னாள் போராளிகள் மீது குற்றஞ்சுமத்துவது, வடக்கில் திட்டமிட்ட குழப்பநிலையை ஏற்படுத்துவதற்கான சதியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சட்டத்தரணி சுகாஸ் கனகரட்னம் குறிப்பிட்டுள்ளார். அல்லது முன்னாள் போராளிகளை இலக்குவைத்து இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற சந்கேதத்தையும் ஏற்படுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற கோப்பாய் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், முன்னாள் போராளிகள் என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர […]





