வட.மாகாண சபையின் அமைச்சுப் பதவிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் முதலமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் 3 முக்கிமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன. இவ்வாறான சந்திப்புக்கள் தொடரும் எனவும் புதிய அரசியலமைப்புத் தொடர்பாக விரைவில் சந்தித்துப் போசுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் […]
Author: தமிழ்மாறன்
எஞ்சியுள்ள முன்னாள் போராளிகளையும் அழிக்க அரசாங்கம் புதிய சதி: சிறிதரன்
வாள்வெட்டுச்சம்பவங்களுடன் தொடர்பு படுத்தி அவர்களைக் கைது செய்வதன் மூலம் எஞ்சியுள்ள முன்னாள் போராளிகளையும் அழிக்க அரசாங்கம் புதிய சதியினை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கம் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் இன்று வன்முறைச்சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி அவர்களைக் கைது செய்வதன் […]
யாழில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய மாநாடு!
தமிழர் விடுதலைக்கூட்டணியின் தேசிய மாநாடு நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரியின் தலைமையில் மேற்படி மாநாடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வட.மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, வட.மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் மற்றும் சிறீ ரெலோ கட்சியின் தலைவர் உதயராசா உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
வடக்கு இளைஞர்களின் செயற்பாடுகள் வேதனையளிக்கின்றன: விக்னேஸ்வரன்
வடக்கில் தற்போதைய இளைய தலைமுறையினரின் செயற்பாடுகள் வேதனையளிப்பதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வல்வெட்டி பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு இளைஞர்களின் சீரழிவிற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெறுகின்ற பண உதவிகள் முறையற்ற விதத்தில் செலவு செய்யப்படுவதே பிரதான காரணமாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில் வடக்கில் மாணவர்கள் […]
இலங்கையை ஒருபோதும் பாதுகாப்புத்தளமாக சீனா பயன்படுத்தாது: சீன தூதுவர்
இலங்கையை தாம் ஒருபோதும் பாதுகாப்புத் தளமாக பயன்படுத்தப் போவதில்லை என இலங்கைக்கான சீன தூதுவர் Yi Xianliang தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் அபிவிருத்திக்காக சீனா தனது உதவிகளைத் தொடர்ந்து வழங்கும் என்று குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் சீனா இலங்கையில் எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்தது என்பதை அவதானித்தால் இதனை அறிய முடியும் என்றும் கூறினார். இலங்கையில் சீன […]
கூட்டமைப்பின் எதிர்ப்பையும் மீறி வடக்கில் 6000 பொருத்து வீடுகள்!
வடக்கு மாகாணத்தில் 6000 பொருத்து வீடுகளை வழங்க மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. வட.மாகாணத்திற்கு பொருத்து வீடுகளை வழங்க மீள்குடியேற்ற அமைச்சா் டி.எம்.சுவாமிநாதன் நடவடிக்கைகளை எடுத்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட.பகுதிக்கு பொருத்தமில்லை எனத் தெரிவித்து அதனை எதிர்த்திருந்தது. அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இது தொடர்பில் வழக்குதாக்கல் செய்துள்ளதுடன், வடக்கு மாகாண சபையும் பொருத்து வீட்டினை எதிர்த்து வருகின்றது. இந்நிலையில், வடக்கில் […]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைப் பிடிக்கும்: கருணாகரம்
அடுத்த தேர்தலில் கிழக்கு மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்படும் 37 ஆசனங்களில் குறைந்தது 15 ஆசனங்களைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைப் பிடிக்கும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். மட்டக்களப்பு நெல்லிக்காடு முன்பள்ளி சிறார்களின் உடல் திறன் விளையாட்டு விழாவில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கிழக்கு மாகாணத்தின் 5 வருட […]
சட்டை அணியாமல் வெற்று உடம்புடன் ஏரியில் மீன் பிடித்த ரஷிய அதிபர் புதின்
சட்டை அணியாமல் வெற்று உடம்புடன் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஏரியில் மீன் பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் (64). இவர் பன்திறமை கொண்டவர். பல்வேறு சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் கடந்த 1-ந்தேதி முதல் 3-ந்தேதிவரை கடும் குளிர் நிறைந்த சைபீரியாவில் 3 நாள் விடுமுறையை கழித்தார். அப்போது தைவர் பகுதியில் உள்ள மலை ஏரியில் […]
ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட துக்கதினம்: ஜப்பானில் இன்று அனுசரிக்கப்பட்டது
இரண்டாம் உலகப் போரின்போது 1945-ம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீசப்பட்ட 72-ம் ஆண்டு துக்கதினம் இன்று ஜப்பானில் அனுசரிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது, உலகின் முதல் அணுகுண்டாக கருதப்படும் ‘லிட்டில் பாய்’ குண்டை ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா 6-8-1945 அன்று வீசியது. இரும்பைக் கூட உருக வைக்கும் 4000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் குண்டு வீசப்பட்ட இடத்தின் அருகிலிருந்த அத்தனையும் பஸ்பமாகின. சுமார், […]
ரவிக்கு ஜனாதிபதி – பிரதமர் அழுத்தம்?
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் ஆகியோர் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிணை முறி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அர்ஜூன் அலோசியஸூடன் ரவி கருணாநாயக்க தொடர்புகளை பேணி வந்துள்ளதாகவும், சில வரப்பிரசாதங்களை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முறிகள் விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரவி கருணாநாயக்கவிடம் […]





