துபாய்க்கு தப்பி ஓடிய தாய்லாந்து முன்னாள் பெண் பிரதமர் இங்கிலாந்தில் தஞ்சம் அடைய திட்டமிட்டுள்ளார். இத்தகவலை தாய்லாந்தின் ராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்தனர். தாய்லாந்து முன்னாள் பெண் பிரதமர் யிங்லக் ஷினாவத்ரா (50). விவசாயிகளுக்கு அரிசி வழங்கியதில் ஊழல் செய்ததாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது அங்கு ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே யிங்லக் ஷினாவத்ரா மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. கடந்த 2 வருடங்களாக […]
Author: தமிழ்மாறன்
டிரம்ப் தாக்குதல் மிரட்டல்: அமெரிக்காவுடன் போருக்கு தயாராகும் வெனிசுலா பொது மக்கள்
அமெரிக்காவுடன் போருக்கு தயாராகும் வெனிசுலா பொது மக்களுக்கு அந்நாட்டு ராணுவம் துப்பாக்கி சுடும் பயிற்சியை அளித்து வருகிறது. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபராக நிகோலஸ் மதுரோ பதவி வகிக்கிறார். ஹியூகோ சாவேஸ் மறைவுக்கு பின் 2013-ம் ஆண்டு முதல் இப்பதவியை அவர் வகிக்கிறார். வெனிசுலா எண்ணை வளமிக்க நாடு. சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை சரிவால் இதன் பொருளதார நிலை சீர் குலைந்தது. உணவு பொருட்கள் தட்டுப்பாடு, […]
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கை சம்பந்தமாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவதால், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் சந்திம வீரக்கொடி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருப்பவர்கள் கட்சியின் ஒழுக்க கட்டுப்பாட்டை […]
அரசியலுக்கு வர ஆசைப்படும் பொலிஸ்மா அதிபர்! பிரதமரிடம் நிபந்தனை விதிப்பு
கடமையில் இருந்த கீழ் நிலை அதிகாரியை தாக்கியமை, சித்திரவதை மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் பாரதூரமான குற்றத்தை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்படும், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பதவியில் இருந்து விலக நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. பொலிஸ்மா அதிபர் கீழ் நிலை அதிகாரியை தாக்கும் காணொளி ஊடகங்களில் வெளியானதை அடுத்து, பொலிஸ்மா அதிபரை அழைத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கௌரவமாக பதவியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அறிவித்துள்ளார். தான் பதவி […]
ஐ.தே.கட்சியில் மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கும் திஸ்ஸ
ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர் என்ற வகையில் தனது அரசியல் பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அந்த கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கெலிஓயா பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அரசியல் ரீதியாக முடிவுகளை எடுக்க இன்னும் காலம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தான் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்த காரணத்தை அடிப்படையாக கொண்டு தன்னை […]
விடுதலைப் புலிகளை பழி தீர்த்ததா இந்தியா? உண்மையை கூறிய கோத்தபாய
விடுதலைப் புலிகளை தோற்கடிக்க வேண்டும் என்ற அவசியம் இந்தியாவுக்கு இருந்ததாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு வார நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகளே படுகொலை செய்ததாக கூறுகின்றீர்கள். இந்தியா விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு ஆதரவளித்ததாகவும் கூறுகின்றீர்கள், அந்த காலப்பகுதியில் ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தியின் கட்டுப்பாட்டுக்குள்ளே […]
ரயில்வே திணைக்களத்தை தனியார் மயப்படுத்த நேரிடும் – நிமல் சிறிபால டி சில்வா
ரயில்வே திணைக்களத்தின் ஊழியர்கள் தொடர்ந்தும் பணிப் புறக்கணிப்புகளில் ஈடுபட்டு வந்தால், ரயில்வே திணைக்களத்தை தனியார் மயப்படுத்த நேரிடும் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தரமான ரயில் சேவையை வழங்க சகல தொழிற்சங்கங்களும் புதிய ரயில்வே முகாமையாளருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். தான் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், தொழிற்சங்க பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வை பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை கேலி பொருளாக மாற்றிய கூட்டு எதிர்க்கட்சி
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ற நடைமுறையை கூட்டு எதிர்க்கட்சியினர் கேலி பொருளாக எடுத்துக் கொண்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் அவர் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அமைச்சர் ராஜித சேனாரத்ன தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு […]
கூடுதலாக ராக்கெட்கள், வெடிகுண்டுகள் தயாரிக்குமாறு வடகொரியா அதிபர் அதிரடி உத்தரவு
சமாதான பேச்சுவார்த்தையின் பக்கம் அமெரிக்கா நெருங்கிவரும் நிலையில் கூடுதலாக ராக்கெட்கள் மற்றும் வெடிகுண்டுகளை தயாரிக்குமாறு வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார் குவாம் தீவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை அழித்து விடுவோம் என்று மிரட்டிவரும் வடகொரியாவுக்கு பதில் அளிக்கும் வகையில் அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னர் குறிப்பிட்டிருந்தார். எனினும், பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் ஏற்படும் என […]
ஆப்கானிஸ்தான்: தலிபான்களின் தற்கொலைப்படை தாக்குதலில் 5 பேர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டு தெற்கு பகுதியில் இன்று தலிபான் இயக்கத்தை சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர் அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதை தொடர்ந்து, அல்கொய்தா மற்றும் தலிபான் பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்காக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் களமிறங்கின. நீண்ட காலமாக நடந்து வரும் இந்த போரில் பயங்கரவாதிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டதை தொடர்ந்து, உள்நாட்டு பாதுகாப்பு பொறுப்பை அந்நாட்டு அரசு […]





