Author: தமிழ்மாறன்

மூளையில் குறைப்பாடு எஸ்.பி.திஸ்ஸாநாயக்க

மஹிந்த ராஜபக்சவின் மூளையில் குறைப்பாடு: எஸ்.பி தெரிவிப்பு

மஹிந்த ராஜபக்சவின் மூளையில் குறைப்பாடு: எஸ்.பி தெரிவிப்பு மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்ப்பை வெளியிடுவாராயின் அவரின் மூளையில் குறைப்பாடு ஏதும் ஏற்பட்டுள்ளது என்றே கூற வேண்டுமென அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் பூரண ஆசிர்வாதத்துடனேயே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதாகவும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்றைய தினம் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் […]

37.500 கோடி ரூபாவை இந்திரஜித் குமாரசுவாமி

37.500 கோடி ரூபாவை கடனாக பெற தீர்மானம்: முயற்சிக்கின்றது அரசாங்கம்

37.500 கோடி ரூபாவை கடனாக பெற தீர்மானம்: முயற்சிக்கின்றது அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்தில் நிலவும் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக இவ்வாண்டில் 37,500 கோடி ரூபாவை (2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) திரட்டுவதற்கு​ ​ஸ்ரீலங்காஅரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார். ஒன்றிற்கு மேற்பட்ட பல்வேறு மூலங்களில் இருந்து திரட்டப்படுகின்ற கடன்கள் மற்றும் அரச பிணையங்கள் மூலமாகவே இந்தத் தொகையை திரட்ட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மத்திய வங்கியின் […]

அரசாங்கம் வாக்குறுதி

காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் வாக்குறுதி: போராட்டம் தொடருமென மக்கள் எச்சரிக்கை

காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் வாக்குறுதி: போராட்டம் தொடருமென மக்கள் எச்சரிக்கை அரச காணிகளை இராணுவத்தின் செயற்பாட்டிற்கு பெற்றுக்கொண்டு பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு பரிசீலனை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலாகத்திற்கு முன்னால் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களில் சிலர் இன்றையதினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இந்த சந்திப்பின்போதே விரைவில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் […]

யாழ். பல்கலை மாணவர்கள்

யாழ். பல்கலை மாணவர்கள் படுகொலை: 5 பொலிஸாரும் விளக்கமறியலில்

யாழ். பல்கலை மாணவர்கள் படுகொலை: 5 பொலிஸாரும் விளக்கமறியலில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் – கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் வைத்து கடந்த ஒக்டோபர் […]

அரசாங்கம் விடுத்த அழைப்பு நிராகரிப்பு

அரசாங்கம் விடுத்த அழைப்பு நிராகரிப்பு: 10ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்

அரசாங்கம் விடுத்த அழைப்பு நிராகரிப்பு; 10ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம் காணிப் பிரச்சினை தொடர்பாக அலரிமாளிகையில் நடைபெறும் கலந்துரையாடலுக்கு வருமாறு அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் நிராகரித்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் தமது நிலமீட்பு போராட்டத்தை 10ஆவது நாளாக இன்றும் முன்னெடுத்து வருகின்றனர். பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட காணி இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பிலவுக்குடியிருப்பு மக்கள் இராப்பகலாக போராட்டத்தை முன்னெடுத்து […]

கேப்பாப்பிலவு மக்களிடம் காணிகளை

கேப்பாப்பிலவு மக்களிடம் காணிகளை ஒப்படைக்கவும்: இராணுவம் ஜனாதிபதியின் உத்தரவை மீறியுள்ளது

கேப்பாப்பிலவு மக்களிடம் காணிகளை ஒப்படைக்கவும்: இராணுவம் ஜனாதிபதியின் உத்தரவை மீறியுள்ளது “காணிகள் மீளக் கையளிப்பு தொடர்பில் ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை பாதுகாப்புப் படையினர் மீறியுள்ளனர். எனவே, கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை அவர்களிடம் ஒப்படைக்க அரசு உடன் நடவடிக்கை வேண்டும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாக எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை […]

சட்டத்தில் திருத்தம்

காணாமல் போனோர் அலுவலகத்தை அமைப்பது தொடர்பான சட்டத்தில் திருத்தம்!

காணாமல் போனோர் அலுவலகத்தை அமைப்பது தொடர்பான சட்டத்தில் திருத்தம்! காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவுவதில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படும் நிலையில், குறித்த அலுவலகத்தை அமைப்பது தொடர்பான சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்தார். காணாமல் போனோர் தொடர்பான காரியாலயத்தை அமைப்பதற்கான சட்டத்தை […]

கர்ப்பிணிப் பெண் படுகொலை

ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண்ணின் படுகொலைக்கு நீதி கோரி பெண்கள் அமைப்பினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. ஊர்காவற்துறை பொது சந்தைக்கு முன்பாக காலை 9 மணியளவில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெண்கள் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரின் மனைவியான ஞானசேகரன் […]

வடக்கு மாகாண மீனவ அபிவிருத்தி

வடக்கு மாகாண மீனவ அபிவிருத்தி திட்டத்திற்கான கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தீர்மானம்

வடக்கு மாகாண மீனவ அபிவிருத்தி திட்டத்திற்கான கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தீர்மானம் வடக்கு மாகாண நிலையான மீனவ அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து முற்பண கடனை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்- ”வட. மாகாண நிலையான மீனவ அபிவிருத்தி […]

இரட்டைப் படுகொலை ஏறாவூர்

ஏறாவூர் இரட்டைப் படுகொலை சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஏறாவூர் இரட்டைப் படுகொலை சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு ஏறாவூரில் தாய் மற்றும் மகள் என இரட்டைப் படுகொலைச் சந்தேக நபர்கள் அறுவரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் குறித்த ஆறு பேரும் இன்று (புதன்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில் மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஏறாவூர் நகர […]