Author: தமிழ்மாறன்

கேப்பாபுலவு மக்களின் போராட்டம்

கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தொடர்கின்றது

கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தொடர்கின்றது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் காலை 128 குடும்பங்களிற்கு சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவத நாளாக மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.                            

ஜ.நாவில் கால அவகாசம் கோருவது உறுதி

ஜ.நாவில் கால அவகாசம் கோருவது உறுதி: மனோ தித்தவெல

ஜ.நாவில் கால அவகாசம் கோருவது உறுதி: மனோ தித்தவெல ஐ.ந மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு ஆண்டுகால அவகாசம் கோரவுள்ளதை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்பு செயலகத்தின் செயலாளர் மனோ தித்தவெல தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பில் பிரித்தானியா இந்த கூட்டத்தொடரில் புதிய தீர்மானம் ஒன்றை கொண்டுவரவுள்ள நிலையில் […]

இந்தோனேசியாவில் ஈழ அகதிகள்

இந்தோனேசியாவில் ஈழ அகதிகள் உணவு தவிர்ப்பு : ஒருவர் வைத்தியசாலையில்

இந்தோனேசியாவில் ஈழ அகதிகள் உணவு தவிர்ப்பு : ஒருவர் வைத்தியசாலையில் இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழர் ஒருவரின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் மொடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை எந்தவொரு அதிகாரிகளும் நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடாத நிலையில் ஈழதமிழர்கள் நான்காவது நாளாகவும் இன்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட […]

ஸ்ரீலங்காவில் மனித உரிமை காப்பு

ஸ்ரீலங்காவில் மனித உரிமை காப்பு: அல் ஹுசைனுக்கு மங்கள விளக்கம்

ஸ்ரீலங்காவில் மனித உரிமை காப்பு: அல் ஹுசைனுக்கு மங்கள விளக்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைனை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இதில் கலந்துகொண்டுள்ள ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமவீர, நேற்றைய தினம் மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஸ்ரீலங்காவில் மனித […]

சித்திரவதைக் குற்றங்களை இலங்கை - மங்கள சமரவீர

சித்திரவதைக் குற்றங்களை இலங்கை ஏற்றுக்கொள்கின்றது – மங்கள சமரவீர

சித்திரவதைக் குற்றங்களை இலங்கை ஏற்றுக்கொள்கின்றது – மங்கள சமரவீர இலங்கையில் இடம்பெற்றுவரும் சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை மிகவும் அவதானத்துடன் கையாள்வதற்கு முயற்சிக்கின்றோம் என ஐ.நா. கூட்டத்தொடரில் உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். அத்தோடு சித்திரவதைகளை சிறிதளவும் சகித்துக் கொள்வதில்லை என்ற கொள்கையை அரசு பின்பற்றுகின்றது என்றும் குறிப்பிட்டார். மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் திணைக்களம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட அமைப்புக்களுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்ட […]

ஜனாதிபதி ஆணைக்குழுவின் கண்காணி

ஜனாதிபதி ஆணைக்குழுவின் கண்காணிப்பில் திறைசேரியின் முறி விநியோகம்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் கண்காணிப்பில் திறைசேரியின் முறி விநியோகம் திறைசேரி முறி விநியோகத்தின் போது கடந்த காலத்தில் பாரிய ஊழல் மோசடி இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், மத்திய வங்கியில் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ள முறி விநியோகத்தை நேரடியாக கண்காணிப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு மத்திய வங்கிக்கு சென்றுள்ளது. பிணை முறி மோசடி குறித்து கண்டறிவதற்காக அண்மையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குறித்த ஆணைக்குழுவின் முன்னிலையிலேயே இன்றைய முறி விநியோகம் இடம்பெறவுள்ளது. இன்றைய தினம் திறைசேரியின் […]

வறிய மக்களின் நலனுக்கு அரசு முன்னுரிமை

வறிய மக்களின் நலனுக்கு அரசு முன்னுரிமை வழங்கியுள்ளது – ஜனாதிபதி

வறிய மக்களின் நலனுக்கு அரசு முன்னுரிமை வழங்கியுள்ளது – ஜனாதிபதி உலக பொருளாதார நெருக்கடியினால் நாடு பொருளாதார சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் வறிய மக்களின் நலனுக்கு அரசு முன்னுரிமை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற பேண்தகு நிதி தொடர்பான செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். சுமார் முப்பது சதவீதமான நாட்டு மக்கள் […]

பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்த தடை

பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்த தடை

பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்த தடை பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தப்படுவதை தடை செய்யும் வகையில் கல்வி அமைச்சு சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைவாக வெளிநபர்களும் குழுக்களும் அனுமதியின்றி பாடசாலைகளுக்குள் பிரவேசிப்பதும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவதும் முழுமையாகத் தடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கொள்கைகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக மாணவர்கள் மத்தியில் அடிப்படைவாத கருத்துக்களை முன்னெடுப்பதற்கு சில குழுக்களும் நபர்களும் முயற்சிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மாணவர்களின் கல்விக்கும், ஒழுக்கத்தைப் […]

பெண்களுக்கு எதிரான வன்முறை - யாழ்.அரச அதிபர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும்: யாழ்.அரச அதிபர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும்: யாழ்.அரச அதிபர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமென யாழ். அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 8ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று முதல், ஒருவார காலத்திற்கு மகளிர் தின வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு யாழ்.மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்ற நடைபயணத்தில் கலந்துகொண்ட […]

தவறான செய்திகளை பிரசுரிக்கவேண்டாம் - சீ.வி.விக்னேஷ்வரன்

என்னைப்பற்றி தவறான செய்திகளை பிரசுரிக்கவேண்டாம் – சீ.வி.விக்னேஷ்வரன்

என்னைப்பற்றி தவறான செய்திகளை பிரசுரிக்கவேண்டாம் – சீ.வி.விக்னேஷ்வரன் வழக்கமான வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக கொழும்பில் தன்னுடைய வீட்டில் தங்கியிருப்பதாகவும், சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கடுமையான சுகயீனமடைந்துள்ளதாகவும் தவறான செய்திகளை பிரசுரிக்கவேண்டாம். எனவும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தமது ஊடக இணைப்பாளர் ஊடாக குரல் பதிவு ஒன்றையும் அனுப்பியுள்ளார். இரத்த குழாய்களில் உள்ள அடைப்புக்கள் தொடர்பாக வைத்தியர்கள் தன்னை பரிசோதிக்க உள்ளதாகவும், அதனை […]