கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் திகண பகுதியில் நேற்று நடத்தப்பட்ட இனவாத தாக்குதல்களின் போது முஸ்லிம்களுக்குச் சொந்தமான 27 வாணிப நிலையங்கள் பல வீடுகள் ஒரு பள்ளிவாசல் என்பன தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று நடந்த வன்முறைகளினால் திகண பிரதேசம் எங்கும் போர்க்களம் போல காட்சியளித்தது. வீதிகளில் ரயர்கள் எரிக்கப்பட்டதாலும் முஸ்லிம்களின் வீடுகள் வாணிப நிலையங்கள் எரிக்கப்பட்டதாலும் எங்கும் கருமையான புகை மூட்டமாக இருந்தது. இதனிடையே திகண பகுதியில் […]
Author: தமிழ்மாறன்
கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை ; பின்புலத்தில் சுமணரத்ன தேரர்
கண்டியில் வன்முறைகள் வெடித்ததன் பின்னணியில் பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரும் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருமே இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் தெல்தெனியவுக்குச் சென்றதை அடுத்தே அங்கு அமைதியற்ற நிலை தோன்றியதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அதேவேளை, திகண, தெல்தெனிய உள்ளிட்ட கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்த […]
திகனயில் பதற்றம் : ஊரடங்கு சட்டம் அமுல் : பொலிஸார் களத்தில்
கண்டி – திகன தெல்தெனிய பிரதேசத்தில் தற்போது விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த நபர்இ நேற்றுமுன்தினம் மரணமடைந்தார். இதில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் உயிரிழந்தவரின் உடல் இன்று பிற்பகல் வேளையில் இறுதிக் கிரியைகளுக்காக மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. இதனால் அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்பாடமல் தடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளைஇ […]
ரணிலின் இடத்திற்கு பொன்சேகாவை நியமிப்பதில் ஐ.தே.க மீண்டும் ஆர்வம்
சட்டம் ஒழுங்கு அமைச்சராக உள்ள ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்கு பீல்ட் மார்ஸல் சரத்பொன்சேகாவை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆர்வம் காட்டிவருவதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி முன்னதாகவே யோசனையை முன்வைத்திருந்தது. எனினும் இந்த யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்திருந்தார். ஆனால்இ தற்போது மீண்டும் சரத்பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி […]
இந்தியாவின் தலையீடு இல்லாமல் அரசியல் தீர்விற்கு சாத்தியமில்லை
இந்தியாவின் தலையீடு இல்லாமல் இலங்கையில் ஒரு அரசியல் தீர்வு ஏற்பட சந்தர்ப்பம் இல்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து விடைபெற்றுச் செல்லவுள்ள இந்திய துணைதூதுவர் ஆ.நடராஜனின் சேவையை பாராட்டும் விதமாக யாழ். முஸ்லிம் சிவில் சமூகம் ஏற்பாடு செய்த விருந்துபசார நிகழ்வொன்று யாழிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று இடம்பெற்றுள்ளது. வட மாகாணசபை உறுப்பினர் அயுப் அஸ்மின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்இ கலந்துகொண்டு […]
அனந்தி சசிதரன் அம்பலப்படுத்தி உண்மை : டக்ளஸ் வரவேற்பு
தன்னை கொலை செய்யும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட தாக்குதலை தமிழரசுக் கட்சியினரே நடத்தியதாக வடக்கு மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தத. இது குறித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தன்னை கொலை செய்யும் நோக்கத்தோடு […]
இரண்டாம் கட்ட அமைச்சரவை மாற்றம் : சு.கவுக்குள் இழுபறி
அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இன்னும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என கட்சியின் உள்ளகத் தகவல்கள் ஊடாக அறியமுடிகின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கம் சந்தித்த தோல்வியின் பின்னர் கொழும்பு அரசியலில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அரசியல் பதற்ற நிலையைத் தனிக்க அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்வதாக தேசிய அரசாங்கம் அறிவிப்பை வெளியிட்டது. எனினும் முதலாம் கட்டமாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவையில் மாத்திரம் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. […]
ஜப்பான் செல்கிறார் மைத்திரி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்மாத நடுப்பகுதியில் ஜப்பானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பை தடுக்கின்ற ஒரு முயற்சியாக சிறிலங்காவுடனான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக் கொள்ளும் தனது அர்ப்பணிப்பை ஜப்பான் உறுதிப்படுத்தவுள்ளது. ஜப்பானில் இருந்து வெளியாகும் பத்திரிகையொன்று தகவலை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 12ஆம் நாள் தொடக்கம் 15ஆம் நாள் வரை ஜப்பானுக்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜப்பானிய சக்கரவர்த்தி அகிஹிடோ […]
நௌரு முகாமிலிருந்த இலங்கையர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர்
நௌருவில் அவுஸ்ரேலியாவின் குடிவரவுத் தடுப்பு முகாமில் இருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட மற்றொரு தொகுதி அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 29 பேர் கொண்ட இந்தக் குழுவில்இ இரண்டு குடும்பங்கள், ஒரு ரொகிங்யா குடும்பம், ஒரு ஆப்கானிஸ்தான் குடும்பம் மற்றும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள் இடம்பெற்றுள்ளன. நௌருவில் இருந்து இவர்கள் நேற்று விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர். இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள எட்டுப் பேர் குழந்தைகளாவர். அவுஸ்ரேலிய […]
ரணிலுக்கு எதிரான பிரேரணை – எதிரணி நாளை தீர்மானம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து முடிவு செய்வதற்காக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு நாளை கூடவுள்ளது. எதிர்வரும் 6ஆம் நாளுக்குள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று கூட்டு எதிரணைியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறியிருந்தார். இந்த நிலையிலேயே நாளை கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை நாடாளுமன்றக் கட்டடத்தில் நாங்கள் ஒன்று […]





