வலி வடக்கு காணிகளை விடுவியுங்கள் : விஜயரட்ணம் ரெட்ணராஜா யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களின் காணிகளை ஒரு மாதகாலத்திற்குள் விடுவிக்குமாறு காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையின் தொழிற்சங்க தலைவரும் யாழ்பாண பிரஜைகள் குழுவின் தலைவருமான விஜயரட்ணம் ரெட்ணராஜா கேட்டுக்கொண்டுள்ளார். வலிகாமம் வடக்கு பகுதி மக்கள் காணிகளை விடுவிக்குமாறு கோரி சத்தியாக்கிர போராட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்னர் அவற்றை விடுவிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். காங்கேசன் துறை, மயிலிட்டி, பலாலி, ஊரணி, […]
Author: தமிழ்மாறன்
தரம் 13 வரை சகல மாணவர்களுக்கும் கட்டாயக்கல்வி – எரான் விக்ரமரட்ன
தரம் 13 வரை சகல மாணவர்களுக்கும் கட்டாயக்கல்வி – எரான் விக்ரமரட்ன நாட்டின் அனைத்து மாணவர்களும் தரம் 13 வரையில் கல்வி பயிலக்கூடிய வகையில் இந்த புதிய சட்டம் அமுல்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி குறிப்பிட்டுள்ளார். மேலும் பாடசாலைகளில் 13 ஆண்டுகள் மாணவர்கள் கட்டாயம் கல்வி கற்க வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தி புதிய சட்டமொன்று அமுல்படுத்தப்பட உள்ளதாகவும், […]
மக்களுக்கான சிறந்த சேவை நீதிபதிகளின் தரத்திலேயே உள்ளது: பிரதம நீதியரசர்
மக்களுக்கான சிறந்த சேவை நீதிபதிகளின் தரத்திலேயே உள்ளது: பிரதம நீதியரசர் மக்களுக்கு உயர்ந்த சேவையை வழங்குவதற்கு நீதிபதிகள் உயர் தரத்தில் இருக்க வேண்டும் என பிரதம Def Justice piriyacatன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார். புதிய பிரதம நீதியரசர் உச்ச நீதிமன்றில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்ளும் நிகழ்விலேயே மேற்படி கூறியுள்ளார். மேலும் மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது நீதிமன்றின் பிரதான கடமையாகும் என்பதுடன் சட்டத்தில் வழியில் எனது அர்ப்பணிப்புடனான சேவைகளை வழங்குவேன் எனவும் […]
மஹிந்தவின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவோம் ரணில் திட்டவட்டம்
மஹிந்தவின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவோம் ரணில் திட்டவட்டம் ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை குறைக்காமல் தொடர்ந்தும் பலப்படுத்துவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் இடம் பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீர திசாநாயக்கவால் எழுப்பப்பட்ட வினாவிற்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க பதிலளித்து கொண்டிருந்தபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆட்சியின்போது ஸ்ரீலங்காவின் […]
கால அவகாசம் ஐ.நாவின் நம்பகத்தன்மைக்கு சவால் விடுக்கிறது
கால அவகாசம் ஐ.நாவின் நம்பகத்தன்மைக்கு சவால் விடுக்கிறது ஐக்கிய நாடுகள் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஸ்ரீலங்காவிற்கு மேலும் இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கப்படுவது தற்போது உறுதியாகியுள்ள நிலையில், சர்வதேசத்தின் இந்த நகர்வானது ஐ.நா மனித உரிமைப் பேரவையின் நம்பகத்தன்மைக்கு சவால் விடுப்பதாக அமைந்திருப்பதாக தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் தொழிற் சங்கங்கள் மற்றும் அரசியற் கட்சிகள் கூட்டாகத் தெரிவித்துள்ளார்கள். இது குறித்து ஐ.நா மனித உரிமை பேரவைக்கு போரினால் […]
லிந்துலை மெராயாவில் மினி சூறாவளி 33 வீடுகள் சேதம் 150 பேர் பாதிப்பு
லிந்துலை மெராயாவில் மினி சூறாவளி 33 வீடுகள் சேதம் 150 பேர் பாதிப்பு லிந்துலை மெராயா பகுதியில் நேற்று மாலை 3.35 மணியளவில் ஏற்பட்ட மினி சூறாவளியால் 33 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் சுமார் 150இற்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நேற்று மாலை திடீரெ இவ்வாறு சூறாவளி ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்தமை மாத்திரமின்றி பாதுகாப்பாக இடத்தை நோக்கி அல்லோல கல்லோலப்பட்டு ஓடியிருந்தனர். பாதிப்படைந்த வீடுகளில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் […]
தினேஷ் குணவர்தனவுக்கு சபை அலுவல்களில் ஈடுபட ஒரு வார காலத்திற்கு தடை
தினேஷ் குணவர்தனவுக்கு சபை அலுவல்களில் ஈடுபட ஒரு வார காலத்திற்கு தடை பாராளுமன்ற நிலையியற்கட்டளைகளுக்கு மாறாக செயல்பட்டதினால் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கு சபை அலுவல்களில் கலந்துகொள்வதற்கு ஒரு வார காலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவைத் தலைவர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் குறித்த பிரேரணையை முன்வைத்தார். பிரேரணை வாக்கெடுப்பு விடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்ததையடுத்து, மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் பிரேரணை 63 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. யோசனைக்கு […]
தீர்வின்றி தொடரும் நில மீட்பு போராட்டம்
தீர்வின்றி தொடரும் நில மீட்பு போராட்டம் முல்லைத்தீவு கேப்பாப்புலவு பூர்வீக கிராமத்திலுள்ள இராணுவம் வெளியேறி தமது காணிகள் ஒப்படைக்கப்படவேண்டும் என தெரிவித்து மக்கள் முன்னெடத்து வரும் போராட்டம் இன்று எட்டாவது நாளாக தொடர்கின்றது. கேப்பாபுலவு கிராமசேவகர் பிரிவுக்குட்டபட்ட சீனியாமோட்டை, சூரிபுரம், மற்றும் புலவுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளை மக்கள் போராட்டத்தின் மூலம் பெற்றிருந்தனர். இந்த நிலையில் கேப்பாபுலவில் பூர்வீகமாக வாழ்ந்த 128 குடும்பங்களுக்கு சொந்தமான 484 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியே […]
கடிதத்தில் கையெழுத்து : கூட்டமைப்பிற்குள் குழப்பம்
கடிதத்தில் கையெழுத்து : கூட்டமைப்பிற்குள் குழப்பம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஸ்ரீலங்காவிற்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கோரியும், வழங்கக் கூடாது என்று கோரியும், அனுப்பப்பட்ட மனுக்களில் போலியான கையெழுத்துகள் இடம்பெற்றிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றில், கூட்டமைப்பின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருப்பதாக கூறப்பட்டது. ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு மேலதிக காலஅவகாசம் வழங்கக்கூடாது […]
இந்திய மீனவர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் இலங்கை விரிவான விசாரணை
இந்திய மீனவர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் இலங்கை விரிவான விசாரணை இந்திய மீனவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரிவான முறையில் இலங்கை விசாரணை நடத்தப்படவுள்ளது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பெரும் இடையூறாக இருந்துவரும் கடல் எல்லை அத்துமீறலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தொடர்சுற்றுப் பேச்சுவார்த்தையின் மற்றுமொரு பேச்சுவார்த்தை ஏப்பிரல் மாதம் நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் காத்திரிமான தீர்வினை எதிர்பார்க்கமுடியும் என்று பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஹர்ச டி சில்வா இன்று அராங்க […]





