அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் நகர்வுகளில் இலங்;கையில் எவ்வித முன்னேற்றங்களும்; ஏற்படாமையால் உலகளாவிய சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு உறுப்பு நாடுகளிடம் கோரிக்கைவிடுக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி விசேட உரையை நிகழ்த்தவுள்ள மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்ட் அல் ஹ{சைன் நேற்று, வாய்மூல அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். குறித்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, இனம், மதம் மற்றும் […]
Author: தமிழ்மாறன்
புலிகளின் நகர்வுகளை முஸ்லிம்களே அரசுக்கு காட்டிக்கொடுத்தனர்
யுத்த காலத்தில் புலிகளின் பிரதேங்களுக்குச் சென்று அவர்களது நகர்வுகள் தொடர்பாக முஸ்லிம்களே அரசுக்கு தகவல்களை வழங்கியதாக பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்தாவது, முஸ்லிம் சமூகத்தைப் பற்றி மிகமுக்கியமான ஒரு விடயத்தை தெரிவிக்க வேண்டும். இன்று நாம் வாழ்வதற்கு அவர்களின் அர்ப்பணிப்பே காரணம். அதற்காக அவர்களுக்கு நன்றி […]
சிறுபான்மையினரின் பாதுகாப்பை உடன் உறுதிப்படுத்துங்கள் ; கனடா வலியுறுத்து
சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிபடுத்துமாறும் வன்முறைக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் கனடா, இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது. இனங்களுக்கிடையிலான அமைதியின்மை காரணமாக இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால நிலை குறித்து கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃரீலண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். முஸ்லிம் மக்களை இலக்குவைத்து இலங்கையில் இடம்பெற்றுவரும் இனங்களுக்கிடையிலான வன்முறை குறித்து கனடா ஆழ்ந்த கவலையடைந்துள்ளது. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பேச்சுகளின் மூலம் நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட […]
வன்முறையை தொடரவிடக்கூடாது ; வேலு குமார் எம்.பி. வேண்டுகோள்
கண்டி – திகன பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைக்கு அரசின் அசமந்த செயற்பாடே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார். கண்டி – திகன பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இன்றைய நல்லாட்சி அரசை உருவாக்குவதில் தமிழ், முஸ்லிம் மக்கள் முன்னின்று செயற்பட்டு இருக்கின்றார்கள். அதன்மூலம் அவர்கள் எதிர்பார்த்தது சக வாழ்வையும், சமாதானத்தையும் ஆகும். இன்று […]
இலங்கையில் முடங்கியது முகநூல்
முகநூல் சேவைகளும், அலைபேசிகளினூடான இணைய சேவைகளும் நண்பகலுக்குப் பின்னர் முழு அளவில் முடங்கின. கண்டி மாவட்டத்தில் தொலைபேசிகளினூடான இணைய சேவைகளை இடைநிறுத்துமாறு காலை முதல் தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்திருந்த நிலையில், முகநூல் சேவைகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முடக்கப்பட்டுள்ளன. மேலதிக அறிவிப்பு வரும் வரை குறித்த இணைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமூகங்கள், குழுக்களுக்கிடையில் கலவரத்துக்குத் தூபமிடும் வகையில் முகநூல்களினூடாகவும் இன்னபிற அலைபேசியூடான இணைய சேவைகளூடாகவும் […]
கண்டி கலவரத்தின் பின்புலத்தில் அமெரிக்கா : எதிரணி சந்தேகம்
கண்டி – திகன பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறையின் பின்புலத்தில் அரச தரப்பும், அமெரிக்க இராஜாங்க திணைக்களமுமே இருக்க கூடுமென பொது எதிரணி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற பொது எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரணி கைவிடவில்லை. கட்டாயம் அந்தப் பிரேரணை கொண்டுவரப்படும். ஐ.தே.கவின் […]
இது சிங்கள பௌத்த நாடு முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும் : ஞானசாரர்
இது சிங்கள பௌத்த நாடு என்பதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஏற்றால்போல் வாழவும் வேண்டும். அடித்தால் திருப்பி அடிப்போம். கொலை செய்தால் திரும்ப கொலை செய்வோம் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். கொழும்பு இன்று நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். சிங்களம்,முஸ்லிம் என்ற பேதம் இல்லாமல் அனைவரும் சமாதானமாக இருக்க […]
நாடு முழுவது 10 நாட்களுக்கு அவசரகால சட்டம் பிரகடனம் : ஜனாதிபதி உத்தரவு
கண்டி, திகன – தெல்தெனி பிரதேசத்தில் ஏற்படடுள்ள பதற்றமான நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 10 நாட்களுக்கு நாடு முழுவது அவசகால சட்டத்தை பிரகடனப்படுத்துமாறு பாதுகாப்பு தரப்புக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவுப்பிறப்பித்துள்ளார்.
கண்டியில் மீண்டும் ஊரடங்கு – இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதால் தொடர்கிறது பதற்றம்
கண்டி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்ட போதிலும், தெல்தெனிய, பல்லேகல காவல்துறை பிரிவுகளில் மீண்டும் உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை அடுத்து, நேற்று பிற்பகல் 3 மணிக்கு கண்டி மாவட்டம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. எனினும், நேற்றிரவும் சில இடங்களில் பள்ளிவாசல்கள் முஸ்லிம்களின் வாணிப நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், […]
கண்டியில் வன்முறை களத்தில் இராணுவம்
கண்டியில் நேற்று வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து சிறிலங்கா இராணுவமும் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் திகண மற்றும் தெல்தெனிய பகுதிகளில் நேற்று வன்முறைகள் வெடித்தன. சிறப்பு அதிரடிப்படையினரும்இ காவல்துறையினரும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் தோல்வியடைந்தனர். இதையடுத்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் இராணுவத்தின் உதவி கோரப்பட்டது. காவல்துறையினால் உதவி கோரப்பட்டதை அடுத்து உடனடியாக இராணுவத்தினரை அங்கு அனுப்பி வைத்ததாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் […]





