கண்டி மாவட்டத்தில் திகன, அகுரன, ஹலகா, கடுகஸ்தொட, மெனிக்கின்ன, அபதென்ன, பூஜாபிடிய போன்ற இடங்களில் அண்மைக்காலங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டள்ளது. இந்த நிலையில் கலவரம் நடைபெற்ற இடத்திற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக நேற்று நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தில் கண்டி பள்ளிவாசலின் மௌலவி மற்றும் அப்பிரதேச முஸ்லிம் மக்களை சந்தித்து உரையாடினார். சம்பவம் இடம்பெற்ற பிரதேசங்களில் உள்ள பொது மக்களுக்கோ […]
Author: தமிழ்மாறன்
கண்டி வன்முறை யார் காரணம்? – எதிர்க்கட்சித் தலைவர்
சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினரே கண்டி திகன சம்பவம் வன்முறையாகவும் கலவரமாகவும் மாற பிரதான காரணம் எனவும் அவர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளும் இதற்கு காரணம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பை கொண்டு இந்த தரப்பினருக்கு எதிராக அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கண்டி, தெல்தெனிய சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை […]
கண்டி கலவரத்திற்கு யார் பொறுப்பு கூறுவது: அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன?
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டுட்டதையடுத்து நாடு முழுவதும் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக சிங்கள் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையில ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தற்போது தீவிரமடைந்துள்ளது பெரும் கலவரமாக மாறியுள்ளதுடன்இ சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. அத்துடன் பொது மக்களின் ஏராளமான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஒரு அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதை காணமுடிகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் […]
இஸ்லாமிய நாடுகளின் இராஜதந்திரிகளை அவசரமாக சந்தித்தார் மஹிந்த
முன்னாள் ஜனாதிபத மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் உள்ள இஸ்லாமிய நாடுகளின்; இராஜதந்திரிகளை சந்தித்து சமகால நிலவரம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்டி மற்றும் அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளமை குறித்து விளக்கமளிப்பதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களை அவசரமாகச் சந்தித்துள்ளார். எனினும்,இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் இதுவும் வெளியாகவில்லை. அம்பாறை மற்றும் கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரங்களின் பின்னணியில், […]
வடக்கு ரயில் பாதை புனரமைப்பு துரிதப்படுத்த முகாமைத்துவ பிரிவு
ரயில் குறுக்கு பாதையில் பாதுகாப்பு கட்டமைப்பை பொருத்துவதற்கும் மற்றும் வடக்கு ரயில் பாதையை புனரமைப்பதற்கான பணிகளை துரிதப்படுத்தும் திட்ட முகாமைத்துவ பிரிவுவொன்று அமைக்கப்படவுள்ளது. இலங்கையின் ரயில் வீதி பாதை வலைப்பின்னலின் நீளம் 1450 கிலோமீற்றர்களாகும். அத்தோடு இதில் 1337 குறுக்கு ரயில் பாதை உண்டு. இவற்றில் 520 ரயில் குறுக்குபாதைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் மேலும் 400 ரயில் குறுக்கு பாதைகளில் பாதுகாப்பு கட்டமைப்பை […]
சட்டம், ஒழுங்கு அமைச்சு ஏன் பொன்சேகாவிற்கு மறுக்கப்பட்டது?
இராணுவத்தில் பீல்ட் மார்சல் அதிகாரியாக தொடர்ந்து செயற்பட்டுவரும் ஒருவரை பொலிஸாருக்கு பொறுப்பானவராக நியமிக்க முடியாது. அதனாலேயே சரத் பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவியை சரத் பொன்சேகாவுக்கு வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டமை தொடர்பாக நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். சரத் பொன்சேகா கடந்த ஆட்சிக்காலத்தில் இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்ததாக சுட்டிக்காட்டிய அவர், […]
தீர்வு கிடைக்குமென நம்பியே வாக்களித்தோம்; ஜனாதிபதிக்கு : மாவை எம்.பி சீற்றம்
வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து சகலரையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாய சட்டத்தை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார். வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனவைரையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாயச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர், “ஒரு சம்பவம் நீதிக்கு அப்பாற்பட்டதாக இருக்குமாயின் […]
நல்லிணக்கம் பாதிக்கப்படின் நாடு அழிவை எதிர்நோக்கும் ; மகாநாயக்க தேரர் எச்சரிக்கை
நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பாதிக்கப்படுமாயின், நாடு பாரிய அழிவை எதிர்நோக்குவதை தடுக்க முடியாது என மல்வத்து பிரிவின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க நேற்று (புதன்கிழமை) தலதா மாளிகைக்குச் சென்று மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள இனங்களுக்கிடையலான இந்த வன்முறைக்கு அரசியலில் ஏற்பட்டுள்ள […]
தொடர்ந்து கண்டி நிர்வாகப் பிரிவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது : இராணுவப் பேச்சாளர்
கண்டி மாவட்டத்தில் நிலவிய பதற்றமான சூழல் நேற்றுமுதல் ஓரளவு சாதாரண நிலைக்குத் திருப்புள்ள போதிலும் தொடர்;ந்து ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார் அவர் மேலும் தெரிவித்தாவது, கண்டி மாவட்டத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த முப்படையினரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்காக மேஜர் ஜெனரல் ருக்மன் […]
கண்டியில் கலவரம் தணிந்தது- ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது!
கண்டி நிர்வாக மாவட்டத்தில் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று (காலை) 10 மணிக்கு தளர்த்தப்பட்டுஇ மீண்டும் மாலை 4 மணிக்கு அமுல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அமுலுக்குவரும் வகையில் நேற்று பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவானது இன்று மாலை 4 மணிவரை தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால்இ தற்போது நிலைமை சுமூகமடைந்துள்ளதால் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்இ கடந்த 12 மணிநேரங்களில் எவ்வித பாரதூரமான சம்பவங்களும் இடம்பெறவில்லை […]





