Author: தமிழ்மாறன்

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இராப்போசன விருந்துபசாரம் வழங்கிய அமைச்சர் ராஜித

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இராப்போசன விருந்துபசாரமொன்றை வழங்கியுள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து உறுப்பினர்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளனர். நல்லாட்சி அரசின் அனைத்து உறுப்பினர்களதும் வெற்றியாக இந்தத் தீர்மானம் கருதப்படுகின்றது. இந்த வெற்றியை கொண்டாடும் நோக்கில் சுகாதார அமைச்சால் இராசாப் போசன விருந்துபசாரமொன்று வழங்கப்பட்டுள்ளது. ஆமைச்சர் ராஜிதவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த விருந்துபசாரத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் நான்கு […]

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பூட்டல்கள் பேஸ்புக்வில் தீவிரம்

இலங்கையில் பேஸ்புக்கின் செயற்பாடுகள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பூட்டல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அமெரிக்க நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பேஸ்புக்கின் செல்வாக்கு மற்றும் இலங்கையின் பேஸ்புக் பயன்பாடு என்பன தொடர்பாக லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஆய்வு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு ஏற்கனவே அவர்களுக்கு எதிராக காட்டப்பட்டு வந்த வெறுப்பூட்டும் செயற்பாடுகள் காரணமாக இருந்ததாக அது தெரிவித்துள்ளது. இந்நிலையில், பேஸ்புக்கின் செயற்பாடுகள் […]

ஜெனீவாவில் ஒவ்வொரு வருடமும் பதிலளிக்கும் நிலை மாறவேண்டும் – சரத் அமுனுகம ஆவேசம்

இலங்கை அரசு தொடர்பில் ஜெனீவாவில் முன்வைக்கப்பட்ட சகல விடயங்களையும் நாம் ஏற்கவில்லையென, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறு ஜெனீவாவில் வலியுறுத்தப்பட்ட போதிலும் எமது நிலைப்பாட்டை அவர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளேன். மேலும், இலங்கை அரசமைப்பின் பிரகாரம் வெளிநாட்டு நீதிபதிகளை […]

தேசிய சொத்துகளை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கியதே சாதனை : கோட்டா

இலங்கையின் தேசிய சொத்துக்களை சீனாவிற்கும், இந்தியாவிற்கும் வழங்கியதன் மூலம் அவ்விரு நாடுகளினதும் அதிகாரப் போராட்டத்திற்கு நல்லாட்சி அரசே அழைப்பு விடுத்துள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். குளியாபிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போNது அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”போலியான காரணங்களை சுட்டிக்காட்டி அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மத்தல விமான நிலையம் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. […]

இலங்கையின் வளமான எதிர்காலத்திற்கு பாகிஸ்தான் நிபந்தனையற்ற ஆதரவு!

பிரகாசமான மற்றும் வளமான எதிர்காலத்தை அடைவதற்கான இலங்கையின் முயற்சிக்கு, நிபந்தனையற்ற ஆதரவை வழங்கவுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற வரவேற்பு நிகழ்வொன்றில் உரையாற்றிய இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஷாஹிட் அஹமட் ஹஷ்மத் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”இலங்கையும், பாகிஸ்தானும் ஒரு வலுவான உறவைக் கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர நலன்களால் […]

நல்லாட்சி அரசுக்கு முடிவுகட்ட கண்டியிலிருந்து கொழும்புக்கு நடைபவனி

நாட்டின் தேசிய சொத்துக்களை சூரையாடும் கூட்டணி அரசுக்கு முடிவுகட்ட பாரிய நடை பவனியொன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி கண்டியிலிருந்து கொழும்புக்கு பேரணியாக வரத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் கையெழுத்துக்களை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது. நல்லாட்சியின் மூலம் ஜனநாயக சீர்த்திருத்தமொன்றை மக்கள் எதிர்பார்த்த போதிலும், இன்றுவரை எவ்வித எதிர்பார்ப்புகளும் பூர்த்திசெய்யப்படாத நிலையிலேயே மக்கள் இவ்வாறு வீதிக்கு இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மைத்திரி […]

டொனால்ட் ட்ரம்ப்

இலங்கைக்கான வரிச்சலுகையை மீண்டும் அங்கீகரித்தது அமெரிக்கா

ஐக்கிய அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை இலங்கைக்கு மீள வழங்கும் திட்டத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கீகாரம் வழங்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் வகையில், குறித்த வரிச்சலுகைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. நடப்பு வருடத்திற்கான வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் கடந்த 23ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டதாகவும், அதில் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகத்தின் […]

யாழ்ப்பாணத்தை மீண்டும் கட்டியெழுப்ப 10 வருட விசேட வேலைத்திட்டம்!

யுத்தத்திற்குப் பின்னர் யாழ்ப்பாணத்தின் கல்வி செயற்பாடுகள் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் அதனை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் 10 வருட செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வட மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, யுத்தத்திற்கு முன்னராக காலப்பகுதியில் வடக்கில் சிறப்பான கல்வி வளர்ச்சி […]

ரஷ்ய தீ விபத்துக்கு ஜனாதிபதி இரங்கள்

இக்கட்டான சூழ்நிலைகளில் ரஷ்ய அரசுடனும், மக்களுடனும் அவர்களது துயரை பகிர்ந்துக்கொள்வதற்கு இலங்கை அரசும், மக்களும் துணை நிற்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் கெமரோவா நகரிலுள்ள வர்த்தக வளாகத்தில் இடம்பெற்ற தீ விபத்து குறித்து ஜனாதிபதி வெளியிட்ட இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்திற்கு நேற்று (புதன்கிழமை) விஜயம் செய்த ஜனாதிபதி, அங்குள்ள நினைவுக் குறிப்பேட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு விசேட குறிப்பொன்றின் ஊடாக […]

க.பொ.த. சாதாரணதர பெறுபேறுகள் வெளியீடு : வேம்படி மாணவி முதலிடம்

2017 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது. பரீட்சைக்குத் தோற்றிய 73.05 வீதமான மாணவர்கள் உயர் தரத்தில் கல்வி கற்கும் தகுதியை இம்முறை பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கம்பஹா – ரட்னாவளி மகாவித்தியாலயத்தை சேர்ந்த கசுன் செனவிரட்ன, ஷாமோதி சுபசிங்க, கண்டி – மகளிர் கல்லூரியின் நவோதயா ரணசிங்க, கண்டி – மஹமாய கல்லூரியின் லிமாஷா விமலவீர, மாத்தறை – […]