உத்தரபிரதேச மாநிலத்தில் 8 வயது சிறுமியை 13 வயது சிறுவன் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பெரெய்லி அருகே உள்ள கிராமத்தில் 13 வயது சிறுவன் 8 வயது சிறுமியை தோட்டத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல்துறையினர் அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை …
Read More »சென்னை புழல் சிறையில் இருந்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஜாமீன்
காவிரி விவகாரத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் மன்சூர் அலிகானிற்கு செங்கல்பட்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக பாரதிராஜா, சீமான் உள்ளிட்ட பலர் சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களை தடுக்க வந்த போலீசாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சிலர் …
Read More »இங்கிலாந்து இளவரசருக்கு 3வது குழந்தை: மகிழ்ச்சியில் மன்னர் பரம்பரை
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்–டயானா தம்பதியரின் மூத்த மகனும் இளவரசருமான வில்லியம்ஸ் அவர்களுக்கு ஏற்கனவே 4 வயது ஜார்ஜ் மற்றும் 3 வயது சார்லோட் ஆகிய 2 குழந்தைகள் உள்ள நிலையில், இன்று அவருக்கு 3வது குழந்தை பிறந்துள்ளது. வில்லியம்ஸ் அவர்களின் மனைவி கேதே மிடில்டன் இன்று அழகான ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். வில்லியம்ஸ்-கேதே தம்பதிக்கு 3வது குழந்தை பிறந்த இந்த தகவலை இங்கிலாந்து அரண்மனை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் …
Read More »புதரில் சிக்கிய குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்!
ஆஸ்திரேலியாவில் காட்டுப்பகுதியில் இருக்கும் புதரில் சிக்கிய 3 வயது குழந்தையை இரவு முழுவதும் நாய் பாதுகாத்த சம்பவம் பெரும் வியப்பை வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தை சேர்ந்த ஆரோரா என்ற 3வயது குழந்தை வீட்டை விட்டு வெளியேறி சுமார் 2 கி.மீ தூரம் வரை சென்றுள்ளார். அப்போது காட்டுப்பகுதியில் உள்ள புதரில் சிக்கிக்கொண்டார். அவரது வீட்டில் வளரும் மாக்ஸ் என்ற நாய் குழந்தையுடன் உடன்சென்றுள்ளது. குழந்தையை காணாமல் போனதை கண்டு …
Read More »முல்லைக் கடலில் கண்டெடுக்கப்பட்ட விசித்திரச் சங்கு
முல்லைத்தீவு கடற்கரையில் விசித்திரமான சங்கு ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடற்கரையோரப் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போது இந்தச் சங்கு கண்டெடுக்கப்பட்டது. சங்கின் வெளிப்பகுதி தோற்றம் ஒரு பூசணிக்காய் போன்று காணப்படுவதாகவும், உள்பகுதி ஒரு பறவை போன்று விசித்திரமாக காணப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More »தமிழரின் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து
தமிழரின் தாயக பூமியான, வடக்கு– – கிழக்கு மாகாணம் தமிழரின் கையை விட்டுச் சென்றால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும். இந்தப் பேராபத்தைக் கருத்திற் கொண்டு – கரிசனையில் எடுத்து இந்திய அரசு தமது அயலுறவுக் கொள்கையில் மாற்றங்களை உடனடியாகக் கொண்டு வரவேண்டும் என்று ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இந்தியப் பத்திரிகையாளர் தி.ராமகிருஸ்ணன் எழுதிய ‘ஓர் இனப்பிரச்சினையும் ஓர் ஒப்பந்தமும்’ என்ற நூல் அறிமுக விழா …
Read More »நாடு திரும்பினார் அரச தலைவர் மைத்திரி
பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றிருந்த அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக்குழுவினர் சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளனர். கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் அவர்கள் நாடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அரச தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் கடந்த 15 ஆம் திகதி லண்டன் சென்றிருந்தனர்.
Read More »ஊழல், மோசடியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
வடக்கு மாகாண சபையின் ஆளுகைக்குட் பட்ட அமைச்சுக்கள், திணைக்களங்கள் ஆகியவற்றில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணை அறிக்கையின் பரிந்து ரைகளை விரைந்து – சபையின் ஆயுள் காலத் துக்குள் – எதிர்வரும் ஒக்ரோபர் 25ஆம் திகதிக் குள் நிறைவேற்றுமாறு எதிர்வரும் வியாழக் கிழமை இடம்பெறவுள்ள மாகாண சபை அமர் வில் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. நிதி மோசடிகள், அதிகார முறைகேடுகள் உள் ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் காலத்துக்குக் …
Read More »பால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்!!
பால்மா ஒரு கிலோ 75 ரூபாவாலும், சமையல் எரிவாயு 245 ரூபாவாலும் இன்னும் சில தினங்களில் அதிகரிக்கப்படலாம் எனத் தெரிவருகிறது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் பால்மா விலை மற்றும் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் பால்மா மற்றும் சமையல் எரிவாயு விலைகள் அதிகரித்துள்ள காரணத்தால், பால்மா மற்றும் காஸ் நிறுவனங்கள் விலையை அதிகரிக்கும்படி வாழ்க்கைச் செலவு …
Read More »உடுவில் மகளிரை வென்றது வேம்படி!!
கீர்த்திகன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான கூடைப்பந்தாட்டத் தொடரில், நேற்று இடம்பெற்ற ஆட்டமொன்றில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி வெற்றிபெற்றது. கொக்குவில் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் உடுவில் மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி மோதியது. 38:34 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி வெற்றிபெற்றது.
Read More »