சேலம் அண்ணா பூங்காவில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அமைக்கப்படவுள்ள மணிமண்டபத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். சேலத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். 2100 சதுரடியில் ரூ.80 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மணிமண்டபத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். அவருடன் சேலம் மாவட்ட கலெக்டர் ரோஹிணி […]
Author: தமிழவன்
42 பயணிகளுடன் பேருந்தை கடத்திய போலி போலீஸ்காரகள். மைசூரில் பரபரப்பு
பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு சென்ற ஆம்னி பஸ் ஒன்றை 42 பயணிகளுடன் 7 பேர் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் இருந்து கேரளா மாநிலம் கண்ணூருக்கு சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து ஒன்றில் 10 பெண்கள் உள்பட 42 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த பேருந்து மைசூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென 7 பேர் கொண்ட கும்பல் மறித்தது. தாங்கள் மத்திய குற்றப்பிரிவு […]
அமெரிக்க அதிபருக்கு சொந்தமான 33 மாடிக் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து
அஜர்பைஜான் நாட்டில் செயல்பட்டுவரும் அமெரிக்க அதிபருக்கு சொந்தமான டிரம்ப் டவரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாகுவில் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்புக்கு சொந்தமான 33 மாடிகள் கொண்ட பிரமாண்ட கட்டிடம் உள்ளது. இந்நிலையில் நேற்று அந்த கட்டிடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. […]
அம்மா அணியின் பொதுச்செயலாளர் யார்? திவாகரன் பதில்
தினகரனுக்கு போட்டியாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து அதற்கு அம்மா அணி என்ற பெயரும் வைத்துள்ளார் என்பதை சற்றுமுன் பார்த்தோம். இந்த கட்சியின் அலுவலகம் நேற்று மன்னார்குடியில் திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தில் பெரிய அளவில் ஜெயலலிதாவின் புகைப்படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சிக்கு சசிகலா பொதுச்செயலாளராகவும், தினகரன் துணை பொதுச்செயலாளராகவும் உள்ளனர். இந்த […]
திவாகரனை அதிமுக வில் சேர்க்க மாட்டோம் – ஜெயக்குமார் தடாலடி
தினகரன் – திவாகரன் இடையே ஏற்பட்ட மோதலில், நாங்கள் எக்காரணத்தைக் கொண்டும் திவாகரனை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு இட, அதற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் எதிர்வினையாற்ற தினகரன் – திவாகரனுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஏற்க முடியாது. […]
வடகொரியா மீதான அழுத்தம் தொடரும்
வெள்ளிக்கிழமை தென் கொரியாவோடு நடைபெற்றுள்ள உச்சி மாநாடு வெற்றியடைந்தாலும், வட கொரியா மீது அதிகபட்ச அழுத்தங்களை வழங்குவதைத் தொடரப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருக்கிறார். அணு ஆயுதங்கள் இல்லாத கொரிய தீபகற்பத்தில் கொரியர்கள் எல்லாரும் ஒன்றாக வாழும் ஒரு நாள் வரும் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வரக்கூடிய வாரங்களில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னோடு நடைபெறும் சந்திப்பில் சாத்தியப்படுமானால், ஒப்பந்தம் ஒன்றை எட்டக்கூடிய பொறுப்பு […]
ஒரே நேரத்தில் 140 குழந்தைகள் நரபலி
சர்வதேச ஆராய்ச்சி குழு நடத்திய ஆய்வில் 550 ஆண்டுகளுக்கு முன் பெரு நாட்டின் வட பகுதியில் ஒரே நேரத்தில் 140 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. ட்ருஜிலோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் பேராசிரியர் கேப்ரியல் ப்ரிடோ மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் வெரானோ ஆகியோர் கடந்த 2011 ஆண்டு முதல் பெரு நாட்டின் வட பகுதியில் அமைந்துள்ள ட்ருஜிலோ நகரத்தில் லாஸ் லாமாஸ் பகுதியில் ஆய்வு நடத்தினர். சர்வதேச ஆராய்ச்சி […]
பிறந்த குழந்தையின் பிறப்புறுப்பை வெட்டிய டாக்டர்
ஜார்கண்ட் மாநிலத்தில் டாக்டர் ஒருவர் ஆண் குழந்தையின் பிறப்புறுப்பை வெட்டி கொன்றுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் சத்ரா என்ற பகுதியில் வசித்து வருபவர் அனில் பான்டா. இவரது மனைவி 8 மாத கர்ப்பிணியாக உள்ளதால் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த தனியார் மருத்துவமனையின் டாக்டர் அருண்குமார், பான்டாவின் மனைவியின் மேல்சிகிச்சைக்காக மற்றோரு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளார். அதன்படி அவரும் வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே அவரது மனைவிக்கு […]
இன்றைய ராசிபலன் 26.04.2018
மேஷம்: இன்று மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும். மற்றவர்களுடன் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு விலகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 ரிஷபம்: இன்று குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை தீரும். காரியவெற்றி உண்டாகும். எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாக தப்பித்துக் கொள்வீர்கள். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் […]
இந்தோனேசியா பெட்ரோல் கிணற்றில் தீ விபத்து: 15 பேர் பலி
இந்தோனேசியாவில் உள்ள ஒரு பெட்ரோல் கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்தால் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தோனேசியா நாட்டின் உள்ள சுமத்ரா தீவின் அருகில் உள்ள பகுதிகளில் பெட்ரோல் ஊற்றுகள் அதிகமாக உள்ளன. அங்குள்ள மக்கள் பெட்ரோல் கிணறுகளை திருட்டுத்தனமாக பயன்படுத்தி பெட்ரோல் எடுத்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள பசி புட்டி என்ற கிராமத்தில் பெட்ரோல் கிணறு ஒன்று சுமார் 250 […]





