யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக் குள் புகுந்த இருவர் அங்கிருந்த நடன ஆசிரியையும் அவரது தாயாரையும் கத்தியால் வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த ஆசிரியையும், தாயும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்தச் சம்பவம் நேற்றுப் பிற்பகல் 2.45 மணியளவில் கொக்குவில் மூன்றாம்கட்டையில் (தாவடிக்கு அண்மையில்) நடந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆசிரியையின் கூத்தலை வெட்டிக் அவரைக் கொடூரமாகக் கொடுமைப்படுத்தினர். …
Read More »மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு மட்டக்களப்பு வெல்லாவெளியில் இன்று நடைபெற்றது. வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப்பற்றுப் பிரதேச சபைச் சந்தியியிலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி வெல்லாவெளி பொது விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது.
Read More »நம் வீட்டிலிருந்து திருஷ்டி தோஷம் போக்க
வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள் வந்து போவார்கள். இப்படி வந்து போகிறவர்களில் ஒருசிலர் மட்டு பொறாமைக் குணத்தோடு வீட்டிற்குள் வந்து செல்வார்கள். அவர்களின் பொறாமைத் தீ எனப்படும் திருஷ்டி தோஷம் நம் வீட்டினுள் புகுந்து கொள்ளும். அன்று முதல் வீட்டில் உள்ளவர்களுக்கும் சிறு காயங்கள் ஏற்படும். பண விரயம் ஏற்படும். பொருட்கள் வைத்த இடம் தெரியாமல் போகும். சில பொருட்கள் உடைந்து போகும். கால்கள் இடறி காயங்கள் ஏற்படும். இத்தகைய பொறாமை …
Read More »அணு ஆயுதங்கள் குறித்து இரான் பொய் கூறுகிறது – இஸ்ரேல்!
அணு ஆயுத திட்டத்தை இரான் ரகசியமாக தொடர்ந்து வந்துள்ளதை நிரூபிக்கும் “ரகசிய அணு கோப்புகள்” என்ற சில கோப்புகளை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு வெளியிட்டுள்ளார். அணு ஆயுதங்களை சோதனை செய்யவில்லை என்று கூறி இரான் உலக நாடுகளை ஏமாற்றி வந்துள்ளதை காட்டும் ஆயிரக்கணக்கான பக்கங்களுடைய ஆவணங்கள் இஸ்ரேலுக்கு கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். தன் மீதான தடைகளை நீக்குவதற்கு பிரதிபலனாக அணுத் திட்டத்தை 2015ஆம் ஆண்டு கைவிட இரான் ஒப்புக்கொண்டது. அணு …
Read More »ஆப்கானிஸ்தானில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்: 21 பேர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள எண்டிஎஸ் உளவுத்துறை நிறுவனம் அருகே நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்று காலை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள எண்டிஎஸ் உளவுத்துறை நிறுவனத்தின் அருகில் தற்கொலைப்படையினரால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் மற்றோரு குண்டும் வெடித்தது. அப்போது அங்கு அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், பத்திரிக்கையாளர்கள் இருந்தனர். இதனால் பலர் …
Read More »பச்சை பட்டுடுத்தி வைகையில் இறங்கிய கள்ளழகர்
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் மதுரையில் நடைபெறும் விசேஷங்களில் முக்கியமானது கள்ளழகர் வைகை ஆற்றில் எழு8ந்தருளும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை காண மதுரையை சுற்றியுள்ள பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வைகை ஆற்றில் கூடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இன்று காலை 6 மணிக்கு இறங்கினார். பச்சை பட்டுடுத்தி வைகையில் இறங்கிய கள்ளழகரை ஏராளமானோர் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர். அழகர் வைகையில் …
Read More »நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் நியமித்த குழுவுக்கு அனுமதி நீட்டிப்பு
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிக்க சந்தானம் தலைமையிலான குழுவிற்கு மேலும் 2 வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை …
Read More »தமிழின உரிமையை அழிக்கவே துணை ராணுவம் குவிப்பு- திருமுருகன் காந்தி ஆவேசம்
டெல்டா மாவட்டங்களில் தமிழின உரிமையை அழிக்கவே துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். தஞ்சை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களும் அரசியல் கட்சியினர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களை கண்டுகொள்ளாத மத்திய அரசு டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் பணியில் மும்முரமாக இருந்தது. மீத்தேனுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடத்த அரசியல் கட்சிகளும் அந்த …
Read More »சென்னை மெரினாவில் 2000 போலீஸார் குவிப்பு
காவிரி விவகாரத்திற்காக மெரினாவில் போராட்டம் நடைபெறப்போவதாக வந்த தகவலின் பேரில், சென்னை மெரினாவில் 2000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்தது. ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய …
Read More »ஸ்டாலினுடன் பேசியது என்ன? தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ்
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அவர்கள் இன்று சென்னைக்கு வருகை தந்து திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர்களை சந்தித்து 3வது அணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் இன்று மாலை சென்னைக்கு வந்த தெலுங்கானா முதல்வர்,கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2004ஆம் ஆண்டு நான் ஏற்கனவே தமிழகம் வந்துள்ளேன். அப்போது நான் …
Read More »