மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க மே 7ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் காரணமாக 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி ஜெயலலிதா சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருந்த அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா, 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அவரது உடல், […]
Author: தமிழவன்
24 மணி நேரத்தில்… 250 நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு
அமெரிக்காவில் ஹவாய் தீவுகளில் 24 மணி நேரத்தில் தொடர்ந்து 250 நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து தற்போது எரிமலை வெடித்து அவசர அவசரமாக மக்கள் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் எரிமலை வெடிப்பு குறித்து எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், திடீரென எரிமலை வெடித்து சாலை வரை எரிமலை குழம்பு பீறிடத்துவங்கியுள்ளது. சாலைகளில் விரிசல் ஏற்பட துவங்கியுள்ள நிலையில், எந்நேரமும் எரிமலை குழம்பு வெளியேறலாம் என்ற காரணத்தால், […]
இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த காதலன் : நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரம்
குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டி கற்பழித்த வாலிபரும், அவரின் நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவடம் அரூர் பகுதியில் வசிக்கும் 25 வயது பெண்ணிற்கும், சேலம் அழகாபுரத்தை சேர்ந்த நைம் மாலிக்(24) என்கிற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. எனவே, அவர்கள் இருவரும் சேலத்தின் பல இடங்களுக்கும் சுற்றி திரிந்துள்ளனர். இந்நிலையில், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, சேலத்திற்கு […]
டிரம்ப் நிர்வாண சிலையை ரூ.18 லட்சத்துக்கு ஏலம் எடுத்த ஆராய்ச்சியாளர்
டிரம்ப்பின் நிர்வாண சிலையை ஆராய்ச்சியாளர் ரூ.18 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இவரது நிர்வாண சிலை ஒன்றை அமெரிக்காவை சேர்ந்த சிற்பி ஒருவர் அவரது கை வண்ணத்தால் உருவாக்கினார். இந்த சிற்பம் அவர் அதிபராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு உருவாக்கப்பட்டு, மக்களின் பார்வைக்காக நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் 2016-ஆம் ஆண்டு வைக்கப்பட்டிருந்து. இந்த சிலையை ஜுலீயன் நிறுவனம் ஏலம் […]
உலகின் முதலாவது ஆணுறுப்பு மாற்று சத்திர சிகிச்சை பெரு வெற்றி
அமெரிக்காவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் அடி வயிறு பகுதியில் ஆணுறுப்பு உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டன. அதற்காக அவர் மேரிலேண்டில் உள்ள பால்டிமோர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் சிகிச்சை மேற்கொண்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி செயல்பட செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து அவருக்கு மரணம் அடைந்த ஒரு நபரின் உறுப்பை தானமாக […]
கல்லூரிகளில் விழாக்களில் அரசியல் பேசக்கூடாது: கல்லூரிக் கல்வி இயக்குநர்
மாநிலங்களில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் நடக்கும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் அரசியல் கொள்கைகள், கருத்துகள் பேசக்கூடாது என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் மஞ்சுளா உத்தரவிட்டுள்ளார். இதன் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்லூரிகள் நடத்தும் விழாக்கள், நிகழ்ச்சிகளில் பங்குபெறும் சிறப்பு அழைப்பாளர்கள் தாங்கள் சார்ந்த அரசியல் கட்சி அல்லது இயக்கங்களின் கொள்கைகளை தங்களின் உரைகளில் கலந்து பேசுவதாக தெரியவருவதாகவும், இது போன்ற நிகழ்வுகள் கல்வி கற்கும் மாணாக்கர்களுக்கு இடையூறாக அமையும் […]
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அனைவரும் ஓரணியில் திரளுங்கள்!!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் அனைத்து உறவுகளும், அமைப்புக்களும் , அரசியல்கட்சிகளும் ஒன்றிணைந்து ஓரணியாக ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டும் என்று ஜனநாயகப் போராளிகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ளதாவது-, இலங்கைத் தீவில் தமிழ் மக்களும் இறையாண்மை உள்ள ஆட்சி அதிகாரங்களுக்கு உரித்துடையவர்கள். இந்தச் செல்நெறிப்போக்கு கடந்த காலங்களில் இடர்பாடுகளை எதிர்கொண்ட வேளைகளில்தான் தமிழர்கள் தமது தார்மீக அடிப்படையிலான […]
நீட் தேர்வு எழுதவிருந்த நெல்லை மாணவர் திடீர் தற்கொலை
கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி, மருத்துவ சீட் கிடைக்காத விரக்தியில் அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்னும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில் இன்னும் நான்கு நாட்களில் நீட் தேர்வு எழுதவுள்ள நெல்லை மாணவர் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்த தினேஷ் என்ற மாணவரின் தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும், இதனால் அவருடைய குடும்பம் […]
பருத்தித்துறையில் வீடு புகுந்து 6 பேருக்கு வாள் வெட்டு
பருத்தித்துறை, கற்கோவளத்தில் நேற்றுமுன்தினம் நடந்த வாள்வெட்டில் 6 பேர் காயமடைந்துள்ளனர். பருத்தித்துறைப் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மூன்று வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இது தொடர் பில் பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவேயில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டியிருந்த நிலையிலேயே நான்காவது சம்பவமாக இது நடந்துள்ளது. பருத்தித்துறை, சுப்பர்மடம், தும்பளை ஆகிய இடங்களில் கடந்த ஏப்ரல் மாதம் அடுத்தடுத்து வாள்வெட்டுச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருடைய அணுகுமுறையில் சந்தேகம் […]
வாகன விபத்தில் 25 பேர் காயம்
குருநாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து நேற்று முன்தினம் இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர். தனியார் பேருந்தொன்று எரிபொருள் ஏற்றிவந்த வாகனத்தின் மீது மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது எனக் கூறப்பட்டது. காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்ட்டனர். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.





