விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அதில் மாற்றுக்கருத்தில்லை என்று மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும், உலகத்தமிழர் பேரவையின் ஸ்தாபருமான பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது; பிரபாகரன் உயிருடன் இல்லை. புலிகளை முழுமையாக அழித்து விட்டோம் என்றால் இராணுவத்துக்கு ஒரு இலட்சம் பேரை எதற்காக தற்போது இணைக்கின்றார்கள். அவர்களுக்கு இந்தியாவில் எதற்கு பயிற்சி அளிக்கின்றார்கள். அதற்கான அவசியம் என்ன? வடக்கில் எதற்காக இலட்சக்கணக்கான இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. போராளிகள் …
Read More »நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உண்ணாவிரதம்!
உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் குடலில் உள்ள ஸ்டெம்செல்கள் புத்துயிர் பெறுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், திசுக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்காவும் ஸ்டெம்செல்கள் முக்கிய பங்குவகிக்கிறது. வயது அதிகரிக்க அதிகரிக்க குடலில் உள்ள ஸ்டெம் செல்கள் ஸ்டெம்செல்கள் திறம்பட செயல்படுவதில்லை. இதனால் உடல் நலனில் பாதிப்பு ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் ஸ்டெம்செல்கள் புத்துயிர் பெறுவதை ஆராய்ச்சியாளர்கள் …
Read More »சிரியா போர்: குடும்பத்தோடு வெளியேறும் சிரியா போராளிகள்
போரால் சிதைந்துள்ள சிரியாவில் தங்களின் கடைசியாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த ராஸ்டன் பகுதியை விட்டு வெளியேறத் துவங்கியுள்ளனர் சிரிய கிளர்ச்சியாளர்கள். மத்திய சிரியாவில் உள்ள ஹோம்ஸ் மற்றும் ஹாமாவுக்கு இடையிலான ஒரு பிரதேசத்தில் இருந்து நூற்றுக்கணக்கான போராளிகள் தங்களின் குடும்பத்தோடு பேருந்து வழியாக வெளியேறி வருகின்றனர். சிரியா அரசு மற்றும் அதன் ரஷ்ய கூட்டணியுடன் ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில், வடக்கு சிரியாவில் எதிராளியின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசத்திற்கு இப்போராளிகள் பாதுகாப்பாக …
Read More »விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது ‘பிக் பாஸ்’ சீஸன் 2
தமிழ் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸன், விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் ஆரவ், ஓவியா, காயத்ரி ரகுராம், ஷக்தி வாசு, வையாபுரி, சினேகன், கணேஷ் வெங்கட்ராம், ஜூலி உள்பட 19 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர். 100 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆரவ் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த வருடம் …
Read More »ஜெ.வின் நினைவு மண்டபத்தில் இரட்டை இலை?
மக்கள் வரிப்பணத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவரது நினைவிடத்தில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அதற்காக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அந்த நினைவு மண்டபத்திற்கு நேற்று அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று இந்த நினைவிடம் …
Read More »கம்மலை அடகுவைத்து நீட் தேர்வுக்கு கேரளா செல்லும் ஏழை மாணவி..!
நீட் தேர்வை எழுதுவதற்காகத் தாயின் கம்மலை அடகு வைத்துவிட்டு எர்ணாகுளம் செல்கிறார், அரியலூர் மாணவி ஹேமா. பேருந்து நிலையத்திற்கே தனியாகச் செல்லாத நான், எப்படி வெளிமாநிலத்திற்குச் சென்று தேர்வெழுதப்போகிறேன் என்று தெரியவில்லை எனப் புலம்புகிறார். நீட் தேர்வுக்கான மையங்கள் வெளி மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளதாகப் புகார் செய்யப்பட்டது. இதில், நீட் தேர்வுக்காக ஒதுக்கப்பட்ட மையங்களில்தான் நீட் தேர்வு எழுத வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, வெளிமாநிலத்தில் நீட் தேர்வெழுத மாணவர்கள் …
Read More »மகாவிஷ்ணு ராமாவதாரத்தை எடுப்பதற்கு முன்பாக
மகாவிஷ்ணு ராமாவதாரத்தை எடுப்பதற்கு முன்பாக, அனைத்து தெய்வங்களும் 33 கோடி தேவர்களும் வைகுண்டத்தில் சங்கமித்தார்கள். ராமாவதாரத்தில் எந்தெந்த பாத்திரங்கள் வரும், அவற்றை யார், யார் ஏற்பது என்பது குறித்து தீர்மானிக்கப்பட்டு வந்தது. எல்லா பாத்திரங்களுக்கும் யார் பொறுப்பேற்பது என்பது தீர்மானமாகிவிட்டது. சிவனும் கூட ஆஞ்சநேயர் பாத்திரத்திற்குத் தயாராகிவிட்டார். ஆனால் ஒரே ஒரு பாத்திரத்திற்கு மட்டும் பதில் இல்லை. அது மந்தாரை என்ற கூனி பாத்திரம். உண்மையில் ராமாயணத்தில் திருப்பம் ஏற்படுத்துவது …
Read More »இந்த ஆண்டு நோபல் பரிசு வழங்காததற்கான காரணம் என்ன?
உலகின் மிக சிறப்பு மிக்க விருதாக கருதப்படுவது நோபல் பரிசு. ஆனால், இந்த் ஆண்டும் நோபல பரிசு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல பரிசு வழங்கும் தி ஸ்வீடன் அகாடெமி இந்த் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் முதல் முறையாக நோபல் பரிசு விருதுகள் அறிவிக்கப்படாமலும், தேர்வு செய்யப்படாமலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான காரணமும் கூறப்பட்டுள்ளது. அதாவது, பாலியல் புகார்கள், நிதி மோசடிகள் காரணமாக இந்த ஆண்டு …
Read More »ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதம் – மன்சூர் அலிகான் பங்கேற்பு
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில், நடிகர் மன்சூர் அலிகான் பங்கேற்றுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், மாணவ அமைப்பினரும் 84வது நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். # …
Read More »தமிழக மாணவர்களுக்கு உதவத் தயார் – கேரள முதல்வர்
நீட் தேர்வு எழுத கேரளா வரும் தமிழக மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர்களுக்கு கேரளா, ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக மாணவர்கள் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்கள் …
Read More »