கடந்த திங்கட் கிழமை இடைக்கால அறிக்கை மீதான விவாதம் ஆரம்பமாகிய போதும் எல்லா உறுப்பினர்களது கருத்துக்களையும் பெறும் நோக்கில் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விவாதம் இடம்பெறும் என சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார். இந்த விவாதம் பாராளுமன்ற அரசியலமைப்பு பேரவையில் நேற்று நான்காவது நாளாகவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Author: தமிழவன்
சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழை
தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே நிலை கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் வட கடலோட மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. தென் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்தது. சென்னை நகரில் காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சிறிது நேரம் வெயிலும் அடித்தது. இதனால் தாழ்வான இடங்களில் தேங்கி இருந்த தண்ணீர் வடிய தொடங்கியது. மதியத்திற்கு பிறகு வானிலை அப்படியே மாறியது […]
6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே நிலை கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் வட கடலோட மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. தென் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்தது. சென்னை நகரில் காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சிறிது நேரம் வெயிலும் அடித்தது. இதனால் தாழ்வான இடங்களில் தேங்கி இருந்த தண்ணீர் வடிய […]
பயங்கரவாதிகள் தாக்குதல்: ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் படுகாயம்
காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் லஸிபல் என்ற இடத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள், ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து அவர்கள் வந்த வாகனத்தின் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். பயங்கரவாதிகள் சுட்டதால் வாகனத்தின் கதவில் இருந்த கண்ணாடிகள் தெறித்து 2 […]
எப்பல்’ போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
இளையோர் போதைக்காகப் பயன்படுத்தும் எப்பல் எனும் போதை மாத்திரைகளுடன் கடவத்தைப் பேருந்து நிலையத்தில் சந்தேக நபரைத் திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவினர் கைது செய்துள்ளனர். திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் சிறப்புப் பொலிஸ் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாகக் கடவத்தைப் பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர் நேற்றுக் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 400 எப்பல் போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கம்பகா மாவட்டத்தின் […]
கடலோர மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்
தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும், கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. கனமழையின் காரணமாக சென்னை நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த மாதம் 27-ந் தேதிதொடங்கியது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த திங்கட்கிழமை வெளுத்து வாங்கிய மழை, நேற்றுமுன் தினம் பகலில் […]
2வது உஸ்பெகிஸ்தான் நபரை கண்டறிந்தனர் எப்.பி.ஐ. அதிகாரிகள்
நியூயார்க்கில் நடந்த தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய உஸ்பெகிஸ்தானை சேர்ந்த 2வது நபரை எப்.பி.ஐ. அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் லாரி ஒன்றை ஓட்டி வந்த மர்ம நபர் அதனை உலக வர்த்தக மைய நினைவகம் அருகே பொதுமக்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். இந்த தாக்குதலில் 8 பேர் பலியாகியுள்ளனர். 15 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தினை அடுத்து தப்பியோட முயன்ற அவரை போலீசார் சுட்டு பிடித்தனர். அவரிடம் […]
நெடுந்தீவு அருகே மீன்பிடித்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு
நெடுந்தீவு அருகே மீன்பிடித்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர். கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் எல்லை கடந்து மீன்பிடிக்கின்றனர், இரட்டை மடிவலைகளை பயன்படுத்துகின்றனர் என கூறி இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் என கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்த 3 […]
கல்முனை மாநகர சபையில் எவ்வித மாற்றமும் இல்லை.!
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிக்கமைவாக சாய்ந்தமருது பிரதேச சபையை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம். அதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் தயாராக இருந்தோம். எனினும் கல்முனை மாநர சபையை நான்கு உள்ளூராட்சி மன்றங்களாக பிரிக்குமாறு தற்போது அப்பிரதேச மக்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசத்திலுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் அபிப்பிராயம் பெறாது அதனை நிறைவேற்ற முடியாது. ஆகவே தற்போதைக்கு கல்முனை மாநகர சபையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளாது எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் […]
இலங்கை வந்தடைந்தார் அவுஸ்திரேலிய பிரதமர்.!
அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளார். இலங்கை வந்தடைந்த அவர், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இருநாட்டுக்குமிடையில் பொருளாதார தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் நடாத்த உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பாக ஆட்கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை நிறுத்த இரு நாடுகளும் இனைந்து செயற்பட வேண்டியதன் முக்கியம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டன்புல் மேலும் […]





