Author: தமிழவன்

ஆர்.கே.நகரை ரவுண்டு கட்டிய போலீஸ்

கடந்த முறை ஆர்.கே.நகர் தேர்தல் அறிவித்தபோது ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ.500 முதல் ரூ.5000 வரை கொடுப்பதாக புகார் எழுந்ததை அடுத்து இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் இந்த முறை அதுமாதிரி எதுவும் நடந்துவிட கூடாது என்பதில் தேர்தல் கமிஷன் கண்ணில் விளக்கெண்ணெய் வைத்து கண்காணிக்கின்றது. ஆர்.கே.நகர் தொகுதிக்குள் செல்லும் பாதைகள் அனைத்தும் போலீசாரால் ரவுண்டு கட்டப்பட்டன. போலீசை மீறி ஒரு சைக்கிள் கூட செல்ல முடியாதாம். 24 மணி நேர […]

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு; 8 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர். மற்றொரு சம்பவத்தில் 15 ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தலை துண்டிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போர் தொடுத்து அங்கு ஆட்சியில் இருந்த தலீபான்களை 2001-ம் ஆண்டு விரட்டியது. அதைத் தொடர்ந்து அங்கு மக்களாட்சி மலர்ந்தது. இருப்பினும் அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு இருந்து, சட்டம்-ஒழுங்கை பராமரிக்க அந்த நாட்டு படையினருக்கு பக்க பலமாக உள்ளனர். அத்துடன் அங்கு இன்றளவும் ஆதிக்கம் செலுத்தி வருகிற தலீபான்களை ஒடுக்க […]

மருத்துவ குணம் நிறைந்த வல்லாரை

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது. காசம், மேகம், போன்ற நோய்களைக் குணப்படுத்துவதில் வல்லாரை கீரை நிகரற்றது. இந்த கீரையை பால் கலந்து அரைக்க வேண்டும். வல்லாரை விழுதை தொடர்ந்து மாதக் கணக்கில் சாப்பிட்டு வந்தால் நரை மறைந்து இளமை தோற்றம் திரும்பும். எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் வல்லாரை இலையால் செய்யப்பட்ட மாத்திரை குணமாக்கும். உடலில் ஏற்படும் கட்டிகள் மற்றும் புண்கள் ஆகியவற்றை வல்லாரை சரிசெய்து […]

ஆர்.கே.நகரில் போட்டியிடும் பிரபலம் யார்?

வரும் டிசம்பர் 21ஆம் தேதி சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதனையடுத்து தினகரன் மற்றும் தீபா ஆகியோர் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட போவது உறுதி என்று தெரிவித்துவிட்டனர். அதேபோல் அரசியல் கட்சிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்துவிட்டது. இந்த நிலையில் பாஜக ஒரு பிரபலத்தை இந்த தேர்தல் களமிறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியபோது, ‘“எந்த […]

கைவசம் வசம்பு இருந்தால் போதும்

வசம்பு காரச்சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. உடல் வெப்பத்தை அதிகரிக்கும்; பசியுண்டாக்கும்; வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், வயிறு கனமான உணர்வு போன்றவற்றுக்கு மருந்தாகும். வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம். வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் […]

கருமையை நீக்கி முகத்தை பொலிவுறச் செய்யும் இயற்கை முறையில் ஸ்க்ரப்…!

கருமையை போக்க பல க்ரீம்கள் மற்றும் இராசாயனப்பொருட்களை தான் முகத்தில் தடவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமது வீட்டில் எளிதில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டு முகத்தில் பொழிவை அதிகரிக்க செய்யலாம். அது எப்படி என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம். ஓட்ஸை பொடி செய்து அதனுடன் தக்காளி சாற்றினையும், தயிரையும் கலந்து முகத்தில் குறிப்பாக வாயை சுற்றிலும் போடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். […]

தல அஜித்துக்கு தலையில் விசுவாசத்தை காட்டிய ரசிகர்கள்

தல அஜித் நடிக்கும் 58வது படத்திற்கு ‘விசுவாசம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவித்ததில் இருந்தே தல ரசிகர்கள் படத்தின் டைட்டிலை கொண்டாடி வருகின்றனர். அஜித் படத்தின் டைட்டில் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பே வெளியாவது இப்போதைக்கு நடந்திராக நிகழ்வு என்பதால் ரசிகர்களுக்கு தலைகால் புரியவில்லை விசுவாசம்’ பட டைட்டிலை பைக்குகளில் எழுதுவது மட்டுமின்றி போஸ்டர், பேனர் என தூள் கிளப்பி வரும் ரசிகர்கள் இன்று ஒரு படி மேலே போய், […]

ஆர்.கே.நகரில் போட்டியிட்டு ஆட்சியை பிடிப்பேன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 24ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ள நிலையில் இந்த தொகுதியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன அதிமுகவை பொருத்தவரை இந்த தொகுதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு அபாரமாக வெற்றி பெற்ற தொகுதி என்பதால் இந்த தொகுதியை கைப்பற்றுவது என்பது அவர்களது தன்மானப்பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. அதேபோல் ஆளுங்கட்சி மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியை அறுவடை செய்ய திமுகவும் மற்ற […]

எழுச்சி பெற்று வரும் தேராவில் துயிலுமில்லம் உறவுகளுக்கு பகிரங்க அழைப்பு

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வீரகாவியமான மாவீரர்களுக்கு உணர்வு பூர்வ அஞ்சலி செலுத்தும் மாவீரர் நாளான கார்த்திகை மாதம் இருபத்தேழாம் திகதி அஞ்சலி நிகழ்வுகளுக்காக முல்லைத்தீவு விஸ்வமடு தேராவில் மாவீரர் துயிலுமில்லம் புத்துணர்வு பெற்று வருகிறது. யுத்தத்தின் பின்னர் மக்கள் மீள்குடியேறிய காலத்தில் தேராவில் துயிலுமில்லம் இராணுவத்தால் சுபீகரிக்கப்பட்ட நிலையில் துயிலுமில்லத்தில் குறித்த ஒரு பகுதி இராணுவ முகாமுக்கு வெளியில் காணப்பட்டது. இந்நிலையில் குறித்த பகுதியை மாவீரர்களின் பெற்றோர் உறவுகள் இளைஞர்கள் என […]

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சுதீஷ் கூறியுள்ளார். இரட்டை இலை நேற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணிக்கு தேர்தலை ஆணையத்தால் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று காலை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. டிடிவி தினகரன் தான் போட்டியிடுவதை உறுதி செய்தார். எடப்பாடி தரப்பில் இருந்து இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஸ், […]