Author: நித்தியன்

மின்னல் தாக்கி சிறுவன் மரணம் மன்னாரில் சம்பவம்

மன்னாரில் மின்னல் தாக்கி சிறுவன் மரணம்-(படம்)   (20-11-2017) மன்னார் முருங்கன் செட்டடியார் மகன் கட்டையடம்பன் பகுதியில் மின்னல் தாக்கிய 11 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று(19) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது. -உயிரிழந்த சிறுவன் செட்டடியார் மகன் கட்டையடம்பன் கிராமத்தைச் சேர்ந்த நித்தியானந்தன் ரஸ்கின் வயது(11) என தெரிய வந்துள்ளது. -குறித்த சிறுவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணியளவில் வயலில் வேளை செய்து கொண்டிருந்த […]

மன்னாரில் இரு இடங்களில் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதோடு, திருடப்பட்டுள்ளது

மன்னாரில் பல்வேறு இடங்களில் பிள்ளையார் சிலைகள் திருடப்பட்டுள்ளதோடு, பிள்ளையார் சிலைகள் மற்றும் தேவாலயத்தின் உண்டியல் என்பன உடைக்கப்பட்ட சம்பவம் இன்று சனிக்கிழமை (18) அதிகாலை இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது. மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,தள்ளாடி விமான ஓடு பாதைக்கு முன்பாக வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை நான்காவது தடவையாக இன்று (18) சனிக்கிழமை அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பிள்ளையார் சிலை மூன்றாவது தடவையாக கடந்த […]

மன்னார் மாவட்ட கடல் உணவு ஏற்றுமதி தொடர்பில் விழிப்புணர்வு

மன்னார் நகரப்பகுதில் 2015 ஆம் 2016 ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் மீன்களில் நோய், தொற்றுகிருமிகள் காணப்படுவதன் காரணமாக நெருப்புக்காச்சல், வயிற்றோட்டம் போன்ற நோய்த்தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வு அறிக்கைகளின் படி தெரிய வந்துள்ளதாக தேசிய நீரியல் வள ஆராட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மன்னார் மீன்பிடித்திணைக்கள கேட்போர் கூடத்தில் தேசிய நீரியல் வள ஆராட்சி நிறுவனத்தினால் இன்று சனிக்கிழமை மதியம் இடம் […]

உணர்வு சார்ந்த போராட்ட முன்னெடுப்புக்களும்

சிவில் சமூக செயற்பாடுகள், செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய ஜனநாயகம் என்று சொல்லி, அல்லது நல்லாட்சி என்று சொல்லி ஆட்சி மாற்றத்தின் பின்னர் இவ்வாறான அச்சுரூத்தல்கள் விடுக்கின்றமையானது நல்லாட்சி அரசாங்கம் தனது கையாளாகத்தன்மையை காட்டுவதாகவே எங்களுக்கு தெரிகின்ற என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரன் நேற்று வெள்ளிக்கிழமை(20) கொழும்பு பயங்கரவாத விசாரனைப் பிரிவினால் விசாரனைக்கு உற்படுத்தப்பட்டார். […]

மன்னார் மாவட்டத்தில் மூன்று இடங்களில்

மன்னார் மாவட்ட மக்கள் தொடர்ச்சியாக இறை நம்பிக்கையுடனும், இறை சிந்தனையுடனும் வாழ்வதற்கும்,எந்த ஒரு மதத்தின் சின்னங்களை உடைத்து சேதப்படுத்துவதற்கும் யாரும் அனுமதிக்க கூடாது என மன்னார் மாவட்ட அற நெறி பாடசாலை இணையத்தின் தலைவர் மஹாதர்மகுமார குருக்கள் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் மூன்று இடங்களில் நேற்று(17) திங்கட்கிழமை இரவு பிள்ளையார் சிலைகள் உடைக்கப்பட்டமை தொடர்பிலும் மக்கள் மத்தியில் அமைதியினை நிலை நாட்டும் வகையிலும் மன்னார் உப்புக்குளம் அம்மன் ஆலையத்தில் விசேட […]

எந்தநேரத்திலும் ஆணைக்குழு முன் விளக்கமளிப்பதற்கு நான் தயார்! – பிரதமர் ரணில் தெரிவிப்பு

“பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க எந்த நேரத்திலும் தயாராக இருக்கின்றேன்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் குறித்து தெரிவிக்கப்பட்ட விடயங்களுக்கு விளக்கமளிக்க, எந்த நேரத்திலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தயாராக இருக்கின்றார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் ரவி […]