Author: நித்தியன்

மன்னாரில் இடம் பெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்வு 26.12.2017

சூனாமிப் பேரலையினால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ அலகு ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்வில் சர்வமதத்தலைவர்கள்,மன்னார் பிரதேசச் செயலாளர் என்.பரமதாசன்,மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர்,மாவட்ட கடற்தொழில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் சாந்திபுர கிரம அபிவிருத்தி சங்க தலைவர் திரு.யோசப் தர்மன் உற்பட பொது மக்கள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என […]

கட்டுப்பணத்தை செலுத்தியது தமிழர் விடுதலைக்கூட்டனி

மன்னாரில் கட்டுப்பணத்தை செலுத்தியது தமிழர் விடுதலைக்கூட்டனி தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் சார்பில் தமிழர் விடுதலைக்கூட்டனியின் சார்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளுராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காக இன்று வெள்ளிக்கிழமை(15) காலை 11 மணியளவில் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளில் ஒன்றான சனநாயக தமிழரசு கட்சியின்  செயலாளர் வி. எஸ் .சிவகரன் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. -மன்னார் நகர சபை,மன்னார் பிரதேச சபை,மாந்தை மோற்கு […]

தாழ்வுபாட்டு கடல் பகுதியில் 25 மீனவர்கள் கைது

மன்னார் தாழ்வுபாடு பிரதேசத்தை சேர்ந்த மக்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சுருக்குவலைகளை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். யுத்தத்தினால் இரண்டு முறை இடப்பெயர்வை சந்தித்த இம் மக்களுக்கு இன்று வரை மாற்று தொழில் வாய்ப்புக்கள் எதுவுமே அரசாங்கத்தினால் செய்து தரப்படாத நிலையில் குறித்த தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். 04.12.2017 இன்று திங்கள்கிழமை காலை தமது அன்றாட கடற்தொழிலில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்து சுமார் 25 மீனவர்களையும் […]

மன்னார் வெள்ளாங்குளம் ‘சேவா’ கிராமத்தினுள் காட்டு யானைகளின் அட்டகாசம்- பாதீப்பை எதிர்கொள்ளும் கிராம மக்கள்-(VIDEO)

மன்னார்,மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுவுக்குற்பட்ட   வெள்ளாங்குளம் ‘சேவா’ கிராமத்தினுள் நேற்று வியாழக்கிழமை(30) இரவு காட்டு யானைகள் குறித்த கிராமத்தினுள் உற் புகுந்து விவசாயம் மற்றும் தோட்டச் செய்கையினை சேதப்படுத்தியுள்ளதாக குறித்த கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறித்த கிராமத்தினுள் தொடர்ச்சியாக காட்டு யானைகள் உற் புகுந்து விவசாயம் மற்றும் தோட்டச் செய்கையினை சேதப்படுத்தி வந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை(30) இரவு குறித்த கிராமத்தினுள் உற் புகுந்த காட்டு யானைகள் […]

மன்னாரில் காணாமல் போன குடும்பஸ்தர் மடு காட்டு பகுதியில் சடலமாக மீட்பு

 மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போய் சுமார் 37 நாட்களை கடந்த நிலையில் நேற்று(01) வெள்ளிக்கிழமை மாலை மடு   காட்டுப்பகுதியில் உருக்குழைந்த நிலையில் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.   -சடலமாக மீட்கப்பட்டவர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆண்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சன் நீக்கிலாஸ் (வயது-56) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.   ஆண்டாங்குளம் சந்தியில் முடி திருத்தகத்தை […]

சாந்திபுர மக்களின் போரட்டத்திற்கு வெற்றி

மன்னார் சாந்திபுர கிராம மக்கள் வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி கடந்த 15-11-2017 அன்று மன்னார் பிரதேசச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் ஓன்றை மேற்கொன்டனர் அதன் விலைவாக வறட்சி நிவாரணம் ,இன்று சாந்திபுர கிராமசேவகர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது தற்போது நாட்டின் பல பாகங்களிலும் வறட்சியால் பாதீக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வறட்சி நிவாரணம் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பல்வேறு கிராமங்களிலும் நிவாரணங்கள் மக்களுக்கு […]

மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினம் அனுஸ்ரிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

புலனாய்வாளர்களின் அச்சுரூத்தல்களுக்கு மத்தியிலும் மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினம் அனுஸ்ரிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி  புலனாய்வாளர்களின் பல்வேறு அச்சுரூத்தல்களுக்கு மத்தியிலும் மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினம் அனுஸ்ரிப்பதற்கான சகல விதமான ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் ஆட்காட்டி வெளி மற்றும் பெரிய பண்டிவிருச்சான் ஆகிய இரண்டு துயிலும் இல்லங்களிலும் மாவீரர் தினம் அனுஸ்ரிப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ஊடக […]

மன்னார் மறைமவாட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு துணை ஆயர் மேதகு கலாநிதி பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்ணான்டோ நியமனம்-(படம்) -மன்னார் நிருபர்-

மன்னார் மறைமவாட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு துணை ஆயர் மேதகு கலாநிதி பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்ணான்டோ நியமனம்  மன்னார் மறைமவாட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு துணை ஆயர் மேதகு கலாநிதி பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக திருத்தந்தை பாப்பரசர் அறிவித்துள்ளதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை இன்று புதன் கிழமை(22) மாலை 4.30 மணியளவில் விசேட அறிவித்தலை வழங்கியுள்ளார். -மன்னார் புனித […]

நிலை மாறும்  நீதியும் மீனவர்களுடைய வாழ்வும்

மீனவர்தினத்தை முன்னிட்டு மன்னார் நகர  மண்டபத்தில்  கார்த்திகை  21 இன்று காலை 11 மணியளவில் MSEDO அமைப்பின் தலைவர் திருவாளர் யாட்சன் பிகிறாடோ தலைமையில்வடமாகாணத்தில்  உள்ள மீன்  பிடியை வாழ்வாதாரமாக  கொண்ட ஆண் மற்றும் பெண் மீனவர்கள் சுமார் 500 மீனவ  பிரதி நிதிகளின் பங்குபற்றுதலுடன்   இடம் பெற்றது.  “நிலை மாறும்  நீதியும் மீனவர்களுடைய வாழ்வும்”  என்ற  கருப்பொருளில்  இடம் பெற்ற இந்த நிகழ்வை  மன்னார் சமூக  பொருளாதார  மேம்பாட்டுக்கான […]

தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன்  பாடசாலையின் வருடாந்த  ஒளி விழா

மன் தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன்  பாடசாலையின் வருடாந்த  ஒளி விழா நிகழ்வானது பாடசாலை அதிபர் A.N.ஜோகராஜா தலைமையில் மதியம்  12.30 மணிக்கு ஆரம்பம் ஆனது. மேற்படி  நிகழ்வில் மன்னார் வலயக்கல்வி பணிமனையின் முன்னாள் தமிழ்  உதவி கல்வி பணிப்பாளர் P.P.M.V.லெம்பேட் அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வும்  இடம் பெற்றது. இந்த நிகழ்வில் தோட்டவெளி பங்கு  தந்தை செபமாலை  மற்றும் ஜோசேவாஸ்  நகர்  பங்கு தந்தை யூட் குரூஸ் அவர்களும் மடு […]