Author: பார்த்தீபன்

அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரி

அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரி பன்னங்கண்டிக் கிராம மக்களின் போராட்டம் தொடர்கின்றது!

அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரி பன்னங்கண்டிக் கிராம மக்களின் போராட்டம் தொடர்கின்றது! கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி கிராம மக்கள் அடிப்படை வசதிகள் கோரி இன்று புதன்கிழமை 12 நாளாகவும் போராட்டம் நடத்தினர். “மத்திய வகுப்புத் திட்டத்தில் வழங்கப்பட்ட குறித்த காணியில் நீண்ட காலமாக வாழ்கின்றபோதும் காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை. அதனால் வீட்டுத் திட்டமோ ஏனைய அரச உதவிகளையோ பெற முடியாதுள்ளது. எமது கிராமங்களில் அடிப்படை […]

கேப்பாப்பிலவு அறவழிப் போராட்டம்

15 நாட்களாகத் தொடர்கிறது கேப்பாப்பிலவு அறவழிப் போராட்டம்!

15 நாட்களாகத் தொடர்கிறது கேப்பாப்பிலவு அறவழிப் போராட்டம்! இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என்று வற்புறுத்தி கேப்பாப்பிலவு மக்கள் முன்னெடுத்துவரும் தொடர் போராட்டம் இன்று புதன்கிழமை 15ஆவது நாளாகவும் தொடர்கின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பொதுமக்களின் காணிகளில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். தங்களது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று கடந்த 7 வருடங்களாக மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தொடர் அறவழிப் […]

காணாமல்போனோரின் விடயத்தை

காணாமல்போனோரின் விடயத்தைக் காணாமல் ஆக்க முயல்கின்றது அரசு! – உறவினர்கள் கடும் விசனம்

காணாமல்போனோரின் விடயத்தைக் காணாமல் ஆக்க முயல்கின்றது அரசு! – உறவினர்கள் கடும் விசனம் “காலத்தை இழுத்தடித்து – எங்களை அலைக்கழித்து, காணாமல்போனோர் பிரச்சினை காணாமல்போகச் செய்வதற்குக் நல்லாட்சி அரசு முயற்சிக்கின்றதா ? இவ்வளவு நாட்களாகப் போராடி வருகின்ற எங்களை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது இந்த அரசு.” – இவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள காணாமல்போனோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 24 ஆவது நாளாக […]

மஹிந்த நாளை ஊழல், மோசடி ஆணைக்குழு

மஹிந்த நாளை ஊழல், மோசடி ஆணைக்குழுவுக்கு அழைப்பு!

மஹிந்த நாளை ஊழல், மோசடி ஆணைக்குழுவுக்கு அழைப்பு! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாளை வியாழக்கிழமை ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருக்கின்றது என ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது தனது பிரசார வேலைகளுக்காக தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தைப் பயன்படுத்திய வகையில் அந்நிறுவனத்துக்குச் செலுத்தவேண்டிய 16 கோடி ரூபாவைச் செலுத்தத் தவறியுள்ளார் என்ற குற்றச்சாட்டின்கீழ் மஹிந்தவுக்கு எதிராக ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாடு […]