யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அதன்படி இதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கிழக்கில் இரண்டு பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்ற போதிலும், பிரச்சினைகள் […]
Author: அருள்
வெளிநாடுகளில் படிக்க செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
இலங்கையிலிருந்து ஆண்டொன்றுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி கற்பதற்காக செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு செல்கின்றபோதிலும் அவர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதில்லையென குறிப்பிடப்படுகின்றது.நிதி இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன சபையில் இதனை தெரிவித்தார். அத்துடன் இவர்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்புவது உறுதி செய்யப்பட வேண்டும். ஏனெனில் கல்வி என்பது அரசினால் மட்டும் கட்டி எழுப்பப்படக்கூடியதல்ல. அதற்கு பல்வேறு தரப்பினரினதும் பங்களிப்பு அவசியம். எனவே தான் வெளிநாடு சென்று கல்வி […]
இன்றைய ராசிபலன் 15.03.2019
மேஷம்: திட்டவட்டமாக சிலமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாகஇருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப்பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். வெற்றிபெறும் நாள். ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும்.தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக […]
சற்று முன்னர் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி
மொரட்டுமுல்ல – பிலியந்தலை வீதியில் சற்று முன் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டர்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவராலேயே இந்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
புதிய கூட்டணிக்கான பேச்சுவார்த்தை வெற்றி!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அதன்படி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இச்சந்திப்பு இடம்பெற்றது. ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து பரந்தளவிலான கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பாகவே […]
புலம்பெயர்ந்தவர்களை அழைத்துவர பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
புலம்பெயர்ந்து இந்தியாவில் வாழும் இலங்கையர்களை, தாய்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான செயற்பாடுகளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ள வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றுவரும் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவ்வாறு அழைத்து வருவோருக்கு வீடமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, வீடுகளுடன் காணிகள், வேளாண்மை […]
விலகிச்செல்ல வேண்டுமென்கிறார் மஹிந்தர்! – ஐ.நா. ஆணையாளரின் கூற்றை ஏற்க மாட்டோம்!
ஐ.நா. ஆணையாளர் கூறும் சகல விடயங்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகிச் செல்ல வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய நாடாளுமன்ற அமர்வில் குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்து உரையாற்றியபோதே திலக் மாரப்பன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், ”எமது நாட்டின் இறைமை, தன்னாதிக்கம் என்பவற்றை பாதுகாத்துக்கொள்ள நாம் தொடர்ச்சியாக செயற்பட்டோம். எமது […]
யாழ். மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு புதிய தீர்வு
யாழ். மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், கீழ் பாளியாறு நீர்த்தேக்கத்தை நீர்மாணிக்கவுள்ளதாக தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மற்றும் வட. மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. வடக்கில் குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் 60 ஆயிரம் பேர் வரையிலான மக்கள் நிலக்கீழ் நீரின் மூலமாக தமது நாளாந்த தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள். இந்த நிலக்கீழ் நீர் எதிர்வரும் 10 முதல் 20 வருட காலத்திற்கு மாத்திரமே போதுமானதாக இருக்குமென […]
இன்றைய ராசிபலன் 14.03.2019
மேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். ரிஷபம்: இன்றும் நண்பகல் 12.45 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். மற்றவர்களுடன் உங்களை […]
வெளிநாட்டு இலங்கையர்களுக்கான வரப்பிரசாதம் : தடுத்து நிறுத்திய மைத்திரி!!
சர்வதேச தொலைபேசி அழைப்புக்களுக்கான வரியை நீக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான வரியை நீக்குவது தொடர்பில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர யோசனை முன்வைத்திருந்தார். இவ்வாறு வரியை தளர்த்துவதன் மூலம் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளவர்கள், இலங்கையில் உள்ள தங்கது உறவுகளுடன் குறைந்த செலவில் பேச முடியும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் […]





