கடந்த நாற்பத்தெட்டு மணிநேரங்களில் இடம்பெற்ற கலவரத்தில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல் கிடைத்துள்ளது. பலர் படுகாயமடைந்திருப்பதுடன் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது. குருநாகல் மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கிராமங்களில் சிங்களக் காடையர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கலவரத்தில் ஏராளமான மக்களின் வீடுகளும் வியாபார நிலையங்களும் வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக ஸ்தலத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. இதேவேளை இராணுவத்தினரின் தாக்குதலில் சில குண்டர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எவ்வாறாயினும் குறித்த பகுதிகளில் ஊராடங்கு தொடர்ந்தும் அமுலில் […]
Author: அருள்
வன்முறையில் ஈடுபடுவோரை சுட்டுத் தள்ள உத்தரவிடுங்கள்
பிரதமர் தலைமையில் இன்று மாலை நடைபெற்ற அவசர பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ரிஷாட், வன்முறையில் ஈடுபடுவோரை சுட்டுத் தள்ளுங்கள் என உரத்த குரலில் சத்தமிட்டுள்ளார். இதனை அடுத்து ஏற்பட்ட பரபரப்பை அவதானித்த பிரதமர், அதற்கான உத்தரவை உடன் பிறப்பித்தார். குருநாகல் மாவட்டத்தில் தற்போது வன்செயல் உச்சத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமரின் உத்தரவை அடுத்து வன்முறையாளர்களை கண்ட இடத்தில் சுடுமாறு இராணுவத் தளபதி தற்போது உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய ராசிபலன் 14.05.2019
மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள். ரிஷபம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் […]
வவுனியாவில் மீட்கப்பட்ட ரி56 ரக துப்பாக்கி வகைகள்
வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவிலுள்ள சிவபுரம் காட்டுப்பகுதியிலிருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை அப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட காட்டு பகுதியிலிருந்தே ரி 56 ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.இதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற விஷேட அதிரடிப்படையின் அதனை மீட்பதற்குரிய நடவடிக்கையினை பொலிசாருடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். முன்னர் விடுதலைப் புலிகள் குறித்த துப்பாக்கியைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று பொலிஸார் […]
மஹிந்தவை திட்டிக் கொண்டிருந்தால் எல்லா பிரச்சனையும் தீராது!
நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுடன் அரசியல்வாதிகள் தொடர்பு என ஜனாதிபதியும் பிரதமரும் கூறுகின்றார்கள். இதற்கு தொடர்புடைய யாருமே அந்த பொறுப்பில் இருந்து விடுபட முடியாது. முதலில் இருவரும் பதவியில் இருந்து விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பாக நேற்று (12) மட்டக்களப்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டு அமைப்பாளர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாமல் ராஜபக்ஷ கலந்து […]
இஸ்லாமிய தீவிரவாதிகளின் கொழும்பு குண்டுத்தாக்குதலின் எதிரொலி!!
இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தனர் மத தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றனர் என்ற காரணங்களை கூறி சிங்கள மக்கள் கின்னியம மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசலை தகர்த்தனர். மேலும்… குருநாகல்- பூவெல்ல பிரதேச தக்கியாவும் சிங்கள மக்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இஸ்லாமியர்களின் புனித நூல்களும் எரியூட்டப்பட்டது. மேலும் வன்முறை தொடராதிருக்க இலங்கை அரசாங்கம் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்துள்ளது. எனினும் எந்த பள்ளிவாசல் எப்போது தாக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுவதாக அங்கிருக்கும் நபர்கள் கூறுகின்றனர். […]
தீவிரவாதி சஹ்ரானை வளர்த்தது ஹிஸ்புல்லா!
காத்தான்குடி பிரதேசத்தில் சஹ்ரான் இருந்து கொண்டு கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாவின் அறிவுறுத்தலுக்கும் அதிகாரத்தையும் பயன்படுத்தி சஹ்ரான் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். குழுவை கட்டியெழுப்பியிருந்தார் என மட்டு. விகாரை விகாராதிபதி சுமணரட்ன தேரர் பரபரப்பை கிளப்பியுள்ளார். தமிழ்பெண்களை கடத்தி சென்று தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றுகிறார்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை அவசரகால சட்டத்தினாலும் வதைத்தால் தான் வீதிக்கிறங்கி போராடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள நிலமை தொடர்பாக புத்திஜீவிகள், இந்துகுருமார்கள், சிவில் […]
பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு!
குளியாப்பிட்டிய பகுதியில் வியாபாரநிலையம் ஒன்றின் மீது நேற்றையதினம் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட மூவரை கைது செய்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக இன்று காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது. இதேவேளை நேற்றையதினம் குளியாப்பிட்டி, தும்மலசூரிய , பிங்கிரிய பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிவித்துள்ள நிலையில் அப்பகுதிகளில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சில […]
இன்றைய ராசிபலன் 13.05.2019
மேஷம்: மற்றவர்களை நம்பிஎந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள். ரிஷபம்: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். தாய்வழிஉறவினர்களால் அலைச்சல்ஏற்படும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவரசலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். நினைத்தது […]
இலங்கைக்குள் கொள்கலன்கள் கணக்கில் வாள்கள்!!
நாட்டின் சட்டத்திற்கு அமைய, கொள்கலன்கள் கணக்கில் வாள்கள், இறக்குமதி செய்யப்பட்டு, அவை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இந்த வாள்களைக் கொண்டுவந்த அரசியல்வாதி ஒருவர் தனக்கு பிரச்சினை ஏற்படும் என அறிந்துகொண்டு, அவற்றை பள்ளிவாசலில் வைத்துள்ளார். எனவே, அந்த 47 வாள்களைத் தவிர வேறு எங்கும் வாள்கள் கைப்பற்றப்படவில்லை என அஸாத் […]





