கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களுடன் விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்தி சிலர் அரசியல் இலாபம் பெற முயன்றதாக அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். குறித்த அச்சுறுத்தல்கள் யாவும் கடந்த வருடம் மட்டக்களப்பில் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்தே ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குரிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே கடந்த சில காலங்களாக அரசாங்கத்துக்கும் புத்திஜீவிகளுக்கும் இடையிலான பிளவுகள் …
Read More »இன்றைய ராசிபலன் 07.06.2019
மேஷம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி …
Read More »உணவகம் ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!
மீகஹத்தேன பொலிஸ் பிரிவில் உள்ள உணவகம் ஒன்றின் மீது நேற்றைய தினம் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும், குண்டு வெடிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தின் போது, உணவக உரிமையாளரும், பணியாளர் ஒருவரும் மட்டுமே அங்கிருந்துள்ளனர். அவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் , வெடிக்காத கைக்குண்டை மீட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Read More »மஹிந்த – மைத்திரி முறுகல் தீவிரம்
மஹிந்த ராஜபக்ஷவிற்கு குண்டு துளைக்காத வாகனம் ஒன்றினை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு குண்டு துளைக்காத வாகனமொன்றை வழங்கும் யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் அமைச்சரவையில் முன்வைத்திருந்தார். இதற்கு ஆளும் தரப்பில் உள்ள சில முக்கிய அமைச்சர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வந்தனர். இந்தநிலையிலேயே மஹிந்தவிற்கு குண்டு துளைக்காத வாகனம் ஒன்றினை வழங்குவதற்கு ஜனாதிபதி எதிர்ப்பு …
Read More »உலகளாவிய தலைமைப் பண்பு விருதுக்கு சுந்தர் பிச்சை தெரிவு!
உலகளாவிய தலைமைப் பண்பு விருதுக்குச் சுந்தர் பிச்சை மற்றும் அடினா பிரீட்மெனி தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கூகுள் (Google) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்தவர். அடினா பிரீட்மேனி அமெரிக்க பங்குச் சந்தை தலைவர் ஆவார் . இவர்கள் இருவருக்கும் அமெரிக்காவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள, ‘இந்தியா ஐடியா’ மாநாட்டில் , இவ்விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »காணாமல் போனவர்களின் உறவுகளை சந்தித்த கனடிய தூதர்!
கிளிநொச்சிக்கு சென்றுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்னொன் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதேவேளை இன்று காலை அவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான முருகேசு சந்திரகுமாரை அவரது அலுவலகத்தில் சந்திதிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Read More »எமது தலைவர்கள் இனத்தின் நலன் சார்ந்து செயற்படுவதில்லை
இலங்கையின் அரசியல் நிலைமையை தீர்மானிப்பவர்களாக பௌத்த மதகுருமார் விளங்குவதாகவும் , தமிழ் தலைமைகள் இனத்தின் நலன் சார்ந்து செயற்படுவதில்லையென்றும் வட மாகாண முன்னாள் மகளிர் அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்னொன் மற்றும் அனந்தி சசிதரனுக்கும் இடையில் இன்று கிளிநாச்சி சோலைவனம் ஹோட்டலில் சந்திப்பு இடம்பெற்றது. குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் தலைமைகள் …
Read More »இன்றைய ராசிபலன் 06.06.2019
மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7 ரிஷபம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும். குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். பணக்கஷ்டம் தீரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, …
Read More »இன்றைய ராசிபலன் 05.06.2019
மேஷம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் …
Read More »முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், வீடுகள் மீது கல்வீச்சு
கெக்கிராவ பகுதியில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவு தெரிவித்து நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே பள்ளிவாசல்கள் மீதும், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதேவேளை சம்பவத்தின் போது பொலிஸார் பாதுகாப்பிற்கு இருந்த போதும் கல்வீச்சு தாக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Read More »