வழங்கிய காலக்கேடு முடிவடைய இன்னும் 40 நிமிடங்களே அரசாங்கத்திற்குள்ளன என பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். அமைச்சர் ரிஷாத், மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை உடன் பதவி நீக்கி குற்றப்புலனாய்வு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இல்லையேல் கடும் எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் […]
Author: அருள்
சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல் ?
அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியார் தொடர்பில் முக்கிய கலந்துரையாடலொன்று தற்போது அலரிமாளிகையில் இடம்பெற்றுவருகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அனைத்து முஸ்லிம் தலைவர்களுக்கிடையிலேயே குறித்த கலந்துரையாடல் தற்போது அலரிமாளிகையில் இடம்பெற்று வருகின்றது. அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதிவியிலிருந்து ஜனாதிபதி விலக்க […]
சிங்கங்கள் சீறிப் பாய்ந்தால், ஒட்டகங்களுக்கு ஓடி ஒளிய வேண்டிய நிலையே ஏற்படும்
சிங்கங்கள் சீறிப் பாய்ந்தால் ஒட்டகங்களுக்கு ஓடி ஒளிய வேண்டிய நிலையே ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரித்துள்ளார். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அத்துரலிய ரதன தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். மேலும் கூறுகையில், 21/4 தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர். 500 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். எனினும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளை இந்த அரசாங்கம் பாதுகாத்து வருகின்றது. […]
வவுனியாவில் வெடிபொருட்கள் மீட்பு
வவுனியா அட்டமஸ்கட பகுதியிலிருந்து வெடிபொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக மாமடு பொலிஸார் இன்று காலை தெரிவித்தனர். நேற்று மாலை வவுனியா அட்டமஸ்கட பகுதியிலுள்ள குளத்திற்கு அருகிலுள்ள மரப் பொந்தில் பொதி ஒன்று காணப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்ற பொலிஸார் அங்கு காணப்பட்ட பொதியை சோதனையிட்ட போது, குறித்த பொதியில் வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளன. எஸ்.எல்.ஆர் மகசீன் 2, எஸ்.எல்.எல் தோட்டாக்கள் 08, ரி. 56 ரக தோட்டாக்கள் 02, என்பன மீட்கப்பட்டுள்ளன. […]
நல்லூர் வீதியில் தோன்றியுள்ள ஆபத்து
யாழ்.மாநகர சபைக்கு முன்பாக வீதியில் வாகனங்களில் செல்வோர் மிக அவதானமாக செல்லவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு யாழ்.மாநகர சபையிலிருந்து வேறு ஒரு இடத்திற்கு பீப்பாயில் நிரப்பிய ஓயில் டிராக்டர் மூலம் எடுத்து சென்றபோது அதில் இருந்து சரிந்து வீதியில் சிந்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகர சபை ஊழியர்கள் வீதியில் மணல் நிரப்பியிருந்தனர். ஆனாலும் மணல் போட்டும் ஓயில் வழுக்கியமையால் நேற்றும் அவ்வீதியில் உந்துருளி ஈருருளி போன்றவற்றில் பயணத்தவர்கள் வழுக்கி விழுந்துள்ளனர். […]
இன்றைய ராசிபலன் 03.06.2019
மேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டாகும்.விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். சொந்த-பந்தங்களால் அன்புத்தொல்லை அதிகரிக்கும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும், விமர்சித்தாலும் கலங்கிக் […]
இன்றைய ராசிபலன் 02.06.2019
மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தோற்றப் பொலிவுக் கூடும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனநிறைவு கிட்டும் நாள். ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் […]
ஜனாதிபதி தேர்தல் டிசம்பர் 7 இல்!
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, புதுடில்லியில் வைத்து நடத்திய விசேட ஊடக சந்திப்பின்போது இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் ,டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இலங்கையின் […]
மோடியை பார்த்து விட்டு நாடு திரும்பினார் மைத்திரி…
இந்திய பிரதமராக மீண்டும் பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் நாடு திரும்பியுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 10.20 மணிக்கு புதுடில்லியிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்.196 ஆம் இலக்க விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஹைதராபாத் ஹவுசில் நேற்று காலை 10.50 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி […]
ஆறாத வடு! யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 38 ஆண்டுகள்!
தெற்காசியாவின் ஆசியாவின் அறிவுக் கருவூலமாக விளங்கிய யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எரிந்த தீ அணைந்துவிட்டாலும் தமிழர்களின் மனதில் அந்த சம்பவம் ஏற்படுத்திய வடு இன்னும் ஆறாமல் எரிந்துகொண்டிருக்கிறது. 1981ம் ஆண்டு. சிங்கள பேரினவாதம் தமிழர்களின் மேல் அடக்குமுறைகளையும், அடாவடித்தனங்களையும், கட்டவிழ்த்துக்கொண்டிருந்த காலப்பகுதி. குறித்த ஆண்டின் மே மாதத்தின் 31ம் திகதி நள்ளிரவில், தமிழ் தலைமுறைகளின் மேல் ஊற்றப்பட்ட எரிதலாக, காதுகளில் வந்து விழுந்த […]





