Author: அருள்

எமது தலைவர்கள் இனத்தின் நலன் சார்ந்து செயற்படுவதில்லை

இலங்கையின் அரசியல் நிலைமையை தீர்மானிப்பவர்களாக பௌத்த மதகுருமார் விளங்குவதாகவும் , தமிழ் தலைமைகள் இனத்தின் நலன் சார்ந்து செயற்படுவதில்லையென்றும் வட மாகாண முன்னாள் மகளிர் அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்னொன் மற்றும் அனந்தி சசிதரனுக்கும் இடையில் இன்று கிளிநாச்சி சோலைவனம் ஹோட்டலில் சந்திப்பு இடம்பெற்றது. குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் தலைமைகள் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 06.06.2019

மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7 ரிஷபம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும். குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். பணக்கஷ்டம் தீரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 05.06.2019

மேஷம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் […]

முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், வீடுகள் மீது கல்வீச்சு

கெக்கிராவ பகுதியில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவு தெரிவித்து நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே பள்ளிவாசல்கள் மீதும், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதேவேளை சம்பவத்தின் போது பொலிஸார் பாதுகாப்பிற்கு இருந்த போதும் கல்வீச்சு தாக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பௌத்த மதகுருவுக்கு ஒரு நீதி! நமக்கு ஒரு நீதியா? – கேப்பாபிலவு மக்கள்

மூன்று வருடங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தங்களின் போராட்டத்திற்கு செவி சாய்க்காதவர்கள் பௌத்த மதகுருவின் 4 நாள் போராட்டத்திற்கு ஆதரவளிப்பது மிகவும் கவலையளிப்பதாக கேப்பாப்புலவு மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவில் 828 நாட்களாக நிலமீட்பு போராட்டத்தில் கேப்பாபிலவு மக்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிந்லியில் நேற்றை தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இதனை கூறியுள்ளனர். கடந்த நான்கு நாட்களாக கண்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த மதகுருவிற்கு ஆதரவாக பலர் கோசமெழுப்பியிருந்ததாகவும், ஆனால் […]

முஸ்லிம் தலைமைகளின் முடிவு வரவேற்கத்தக்கது

சிங்கள, பௌத்த, பேரினவாத வெறியாட்டத்திற்கு பதிலடியாக முஸ்லிம் தலைமைகள் எடுத்திருக்கும் முடிவை தாம் வரவேற்பதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியதாக குற்றம்சாட்டி ஒன்பது முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை நேற்று இராஜினாமா செய்திருந்தனர். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன மத ரீதியிலும் எண்ணிக்கையிலும் குறைந்த சிறுபான்மையினத்தவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையாகவே இதை நாம் பார்க்கின்றோம். முஸ்லிம் தலைமைகள் மீண்டும் […]

மகிந்த

நாடாளுமன்றில் இன்று விசேட உரையாற்ற உள்ள மகிந்த!

இன்று பிற்பகல் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இடம்பெற உள்ளது. குறித்த கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 03.00 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற உள்ளது. இந் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்க்ஷ இதன்போது நாடாளுமன்றத்தில் விஷேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கூட்டத்தில் அடுத்துவரும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக மேலும் […]

ஜனாதிபதி யார்? கருஜெயசூரியவின் அறிவிப்பு வெளியானது…

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தான் தயார் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார். அதோடு, சிறுவயதில் தான் இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவை சென்று பார்ப்பதுண்டு என்றும், அவர் பதவி ஆசைகளிற்கு அடிபணியாமல் நாட்டிற்கு அவசியமான விடயங்களை நிறைவேற்றுவதற்கு தனக்கு பயிற்சியளித்ததாகவும் கூறியுள்ளார். சுத்தமான கரங்களுடனேயே தான் தனது அரசியலை ஆரம்பித்ததாகவும், அதேபோன்று கறைபடியாத கரங்களுடனேயே அரசியலில் இருந்து […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 04.06.2019

மேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். ரிஷபம்: இன்றும் பிற்பகல் 1 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். மற்றவர்களுடன் உங்களை […]

இசைக்கச்சேரியில் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இளையராஜா- வைரல் வீடியோ

இளையராஜா என்றாலே இசை தான். அவரின் இசையை மக்களால் மறக்கவே முடியாது, அவ்வளவு நல்ல பாடல்களை கொடுத்தவர். பாடல்கள் ஒருபக்கம் இருந்தாலும் அவரின் சில விஷயங்கள் சர்ச்சையாகிறது. அப்படி தான் நேற்று நடந்த இளையராஜா இசைக் கச்சேரியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பாடல்கள் பாடிக் கொண்டிருக்கும் ஒரு போலீஸ் அதிகாரி இடையில் நுழைந்துள்ளார். அதைப்பார்த்த இளையராஜா என்னவென்று கேட்க, அவர் தாகமாக இருக்கிறது என்றார்கள் அதான் வந்தேன் என கூறினார், […]