தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தமை நாம்விட்ட பெரும் தவறென பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்படியான அச்சுறுத்தலை நாடு எதிர்கொள்ளவில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவித்த அவர், “இன்று எங்களை இனவாதிகள் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், நாம் அப்படியானவர்கள் அல்லர். இந்த […]
Author: அருள்
புலிகளின் காலத்தில் பாவனையில் இருந்த வெடிபொருட்கள் கிணற்றில் இருந்து மீட்பு!
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் கிணறு ஒன்றிற்குள் இருந்து நேற்றையதினம் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த கிணற்றில் இருந்து இரண்டு கைக்குண்டுகள், ஆர்.பி.ஜி எறிகணைகள், தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் அவற்றை செயலிழக்க செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை விடுதலைப்புலிகளின் காலத்தில் பாவனையில் இருந்த வெடிபொருட்களே அவை எனவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அகதி ஒருவர் தமிழகத்தில் எரித்துக்கொலை!
தமிழகத்தின் நாகர்கோவில் உள்ள கனகமாணிக்கபுரம் சுடுகாட்டில் இலங்கை அகதி ஒருவரை எரித்து கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அகதி ஒருவர் உட்பட மேலும் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நாகர்கோவில் கனகமாணிக்கபுரம் சுடுகாட்டில் எரிக்கப்பட்ட நிலையில் ஆன் ஒருவரின் சடலம் நேற்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதன்போது திருநெல்வேலி சமூங்கபுரங்கபுரம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 34 வயதுடைய […]
இலங்கைக்குள் நுளைந்த 20 அவுஸ்திரேலிய புலனாய்வு அதிகாரிகள்
ஈஸ்டர் ஞாயிறு தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக அவுஸ்திரேலியா 20 புலனாய்வு நிபுணர்களை இலங்கைக்கு அனுப்பியிருப்பதாக, அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தெரிவித்தார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த அவர், செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போதே இந்த தகவலை வெளியிட்டார். ”தீவிரவாத தாக்குதல்கள் குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா புலனாய்வுக் குழுக்களுக்கு உதவுவதற்காக அவுஸ்திரேலியா 20இற்கும் அதிகமான புலனாய்வு அதிகாரிகளைக்கொண்ட குழுவொன்றை இங்கு அனுப்பியுள்ளது. அவர்கள் […]
விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்தி சிலர் அரசியல் இலாபம் பெற முயன்றதாக சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு!
கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களுடன் விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்தி சிலர் அரசியல் இலாபம் பெற முயன்றதாக அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். குறித்த அச்சுறுத்தல்கள் யாவும் கடந்த வருடம் மட்டக்களப்பில் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்தே ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குரிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே கடந்த சில காலங்களாக அரசாங்கத்துக்கும் புத்திஜீவிகளுக்கும் இடையிலான பிளவுகள் […]
இன்றைய ராசிபலன் 07.06.2019
மேஷம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி […]
உணவகம் ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!
மீகஹத்தேன பொலிஸ் பிரிவில் உள்ள உணவகம் ஒன்றின் மீது நேற்றைய தினம் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும், குண்டு வெடிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தின் போது, உணவக உரிமையாளரும், பணியாளர் ஒருவரும் மட்டுமே அங்கிருந்துள்ளனர். அவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் , வெடிக்காத கைக்குண்டை மீட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
மஹிந்த – மைத்திரி முறுகல் தீவிரம்
மஹிந்த ராஜபக்ஷவிற்கு குண்டு துளைக்காத வாகனம் ஒன்றினை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு குண்டு துளைக்காத வாகனமொன்றை வழங்கும் யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் அமைச்சரவையில் முன்வைத்திருந்தார். இதற்கு ஆளும் தரப்பில் உள்ள சில முக்கிய அமைச்சர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வந்தனர். இந்தநிலையிலேயே மஹிந்தவிற்கு குண்டு துளைக்காத வாகனம் ஒன்றினை வழங்குவதற்கு ஜனாதிபதி எதிர்ப்பு […]
உலகளாவிய தலைமைப் பண்பு விருதுக்கு சுந்தர் பிச்சை தெரிவு!
உலகளாவிய தலைமைப் பண்பு விருதுக்குச் சுந்தர் பிச்சை மற்றும் அடினா பிரீட்மெனி தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கூகுள் (Google) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்தவர். அடினா பிரீட்மேனி அமெரிக்க பங்குச் சந்தை தலைவர் ஆவார் . இவர்கள் இருவருக்கும் அமெரிக்காவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள, ‘இந்தியா ஐடியா’ மாநாட்டில் , இவ்விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காணாமல் போனவர்களின் உறவுகளை சந்தித்த கனடிய தூதர்!
கிளிநொச்சிக்கு சென்றுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்னொன் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதேவேளை இன்று காலை அவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான முருகேசு சந்திரகுமாரை அவரது அலுவலகத்தில் சந்திதிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





