Author: அருள்

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 19.06.2019

மேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட் களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர் கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல்இருப்பீர்கள். சில நேரங்களில் நன்றி மறந்த சொந்த-பந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்துகொடுத்துப் போவது நல்லது. உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்கவேண்டியிருக்கும். […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 18.06.2019

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாக […]

Ranil

அமைச்சர்களுடன் முக்கிய கலந்துரையாடலில் பிரதமர் ரணில்

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட கூட்டம் நடைபெற்றுவருகின்றது. அலரிமாளிகையில் இடம்பெறும் இக்கூட்டத்தில் அமைச்சர்களான மங்கள சமரவீர, எரான் விக்ரமரத்ன, ஹர்ஷ டி சில்வா, திலக் மாரப்பன மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இதன்போது நாட்டில் நிலவும் தற்போதைய நிலை மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கான பதில்கள் குறித்தும் கலந்துரையாடப்படுகின்றன. இந்த சந்திப்பிற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் […]

மைத்திரி மஹிந்த

இருதரப்பு ஆறாம் கட்டபேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து புதிய கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் பேச்சு நடத்திவருகின்றது. குறித்த விடம் தொடர்பில் ஐந்து கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்த நிலையில் ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெறவிருந்த இந்தப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 26 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இருதரப்பினரும் […]

யாழ். பல்கலை

யாழ். பல்கலைக்கழகதிற்கு அதிகளவான முஸ்லீம்கள் விண்ணப்பம்

யாழ் பல்கலைக்கழகத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கிடைத்துள்ள 454 விண்ணப்பங்களில் 137 விண்ணப்ப படிவங்கள் முஸ்லீம்களின் விண்ணப்ப படிவங்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பல்கலைக் கழகத்தில் நீண்டகாலமாக காணப்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் பிரகாரம் குறித்த வெற்றிடங்களிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களால் பரிந்துரைக்கக்படும் விண்ணப்பதாரிகளை நேர்முகத் தேர்விற்கு உட்படுத்தி அவர்களில் தகுதியானவர்களை நியமிக்க முடியும் என்பது விதிமுறை. அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்களால் சிபார்சு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் நேரடியாக […]

மீண்டும் மகிந்தருடன் சங்கமிக்கும் ஹிஸ்புல்லா!

தற்போதைய ஜனாதிபதியின் ஆதரவாளராக தான் செயற்பட்டவர் என்றும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் எப்போதும் தான் மகிந்த ராஜபக்ஸவின் ஆதரவாக தான் செற்பட்டதாகவும், ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். அவ்வாறு பார்க்கப்போனால் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஹிஸ்புல்லா எவ்வளவு சாதுரியமாக ஏமாற்றியுள்ளார் என்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. அவரது சகல சக்தியையும் பாவித்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று செயற்பட்டவர்தான் ஹிஸ்புல்லா. பின்னர் நடைபெற்ற […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 17.06.2019

மேஷம்: பகல் 12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். திட்டமிட்டு செயல் படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். […]

எந்தவொரு தேர்தலுக்கும் முங்கொடுக்க தயார்

நாட்டில் எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள எந்தவொரு தேர்தலுக்கும் முங்கொடுக்க தாம் தயாராக உள்ளதாக, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்காலை கால்டன் இல்லத்தில் மகிந்தவை அங்குள்ள மக்கள், சந்தித்து பேசியிருந்தனர். இதன்போது, ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சரவையை கூட்டுவதில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் விடுதலை!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 18 தமிழக மீனவர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கடற்படையினர் கைதுசெய்து தடுப்புக்காவலில் வைத்திருந்தனர். இந் நிலையில் இவர்கள் தொடர்பான வழக்கு நேற்றைய தினம் நீதிமன்றுக்கு வந்தபோது நீதிவான் அவர்களை விடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் 18 பேரையும் இந்திய குடியுரிமை அதிகாரிகளிடம் இலங்கை அதிகாரிகள் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

யாழில் முஸ்லிம் குடும்பங்களுக்கு தானம் வழங்கிய படையினர்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரப் பகுதியில் வசிக்கும் 20 முஸ்லிம் குடும்பங்களுக்கு படையினரால் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. பொசன் பண்டிகையை முன்னிட்டு படையினர் குறித்த பொருட்களை வழங்கியுள்ளனர். யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியின் ஏற்பாட்டில் படை அதிகாரிகள் கலந்து கொண்டு இந்த உலர் உணவுப் பொருள்களை வழங்கிவைத்துள்ளனர்.