Tuesday , August 26 2025
Home / அருள் (page 43)

அருள்

அதிரடி சுற்றிவளைப்பில் 10 தமிழா்கள் கைது!

அதிரடி சுற்றிவளைப்பில் 10 தமிழா்கள் கைது! சிலாபம் பகுதி ஊடாக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 10 பேரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய முறையில் சிலர் சிலபத்தில் இருந்து பயணிப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறிய ரக லொறி ஒன்றில் சிலாபம், இரணவில வீதியில் பயணித்து கொண்டிருந்தபோது அவர்களை கைது செய்யப்பட்டுள்ளதோடு, லொறியின் சாரதி …

Read More »

ஆடி மாத ராசிபலன் – ரிஷபம்

Today rasi palan 14.09.2019

18.08.2019 முதல் 17.09.2019 ரிஷபம்: சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் சற்று சாதகமான கிரஹ சூழல் நிலவுகிறது. ராசிநாதன் தொடர்ந்து சாதகமான நிலையில் அமர்ந்திருப்பதும் உடன் இணைந்திருக்கும் மற்ற கிரஹங்களின் துணையும் நன்மையைத் தரும். ஏதோ ஒரு காரணத்தினால் தடைபட்டிருந்த செயல்கள் மீண்டும் நடைபெறத் துவங்கும். பொருளாதார நிலை உயர்வடைவதோடு சேமிப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்பும் உருவாகும். புதிய சொத்து வாங்குவதற்கான முயற்சியில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் …

Read More »

இன்றைய ராசிபலன் 18.08.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 18.08.2019 மேஷம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்துப் போகும். பிள்ளைகளால் டென்ஷன் வந்துப் போகும். உடல் அசதி, சோர்வு வந்துப் போகும். செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். வியாபாரத்தில் வேலையாட்களை  அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அலைச்சலுடன் ஆதாயம் பெறும் நாள். ரிஷபம்: உணர்ச்சிப்பூர்வ மாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் …

Read More »

ஆடி மாத ராசிபலன் – மேஷம்

Today rasi palan 14.09.2019

18.08.2019 முதல் 17.09.2019 மேஷம்: ராசிநாதன் செவ்வாயின் சஞ்சார நிலை இந்த ஆவணி மாதத்தில் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும் வகையில் அமைந்துள்ளது. ஆயினும் உங்கள் பணிகளை செய்துமுடிக்க மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகலாம். தனது திறமையைக் கொண்டு அடுத்தவர்களை வேலை வாங்கி காரியத்தினை சாதித்துக் கொள்ள வேண்டியிருக்கும். வேகமாக நடைபெற்று வந்த காரியங்களில் சிறிது தாமதத்தினை சந்திக்க நேரிடும். ஆயினும் அவ்வகையில் உண்டாகும் தாமதமும் உங்களுக்கு சாதகமான …

Read More »

மின்னல் தாக்கியதில் இளைஞர் பலி!

மின்னல்

மின்னல் தாக்கியதில் இளைஞர் பலி! மின்னல் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கெக்கிராவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாமினியாவ வாவிக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த அனர்த்தத்தில் 17 வயதுடைய மரதன்கடவல பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கெக்கிராவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

பலாலி விமான நிலை­யத்­தில் இருந்து ஒக்டோபர் முதல் விமானசேவைகள்!

பலாலி

யாழ்ப்­பா­ணம், பலாலி சர்வதேச விமான நிலை­யத்­தில் இருந்து எதிர்­வ­ரும் ஒக்ரோபர் மாதம் முதல் விமான சேவை­கள் ஆரம்­பிக்­கப்­ப­டும் என தெரிவிக்கபட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மூன்று நாள்­கள் பய­ண­மாக யாழ்ப்­பா­ணத்­துக்கு வந்­தி­ருந்­த நிலையில், மூன்­றாம் நாளான நேற்று அவர் பலாலி விமான நிலை­யத்­துக்­கும் சென்­றி­ருந்­தார். இதன்போது அவருடன் விமான போக்­கு­வ­ரத்து அமைச்­சர் அர்­ஜூன ரண­துங்க, இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன், மற்றும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பல­ரும் சென்­றிருந்த­னர். இதை­ய­டுத்து அங்கு …

Read More »

சாவகச்சேரியில் தாய் மகள் சண்டை – தாய் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் தாயொருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது மகளுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே தாய் இந்த விபரீத முடிவினை எடுத்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த ஊரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

யாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டு

இராணுவத்தினர்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை- ஊாிக்காடு பகுதியில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழு ஒன்று வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியுள்ளது. நேற்றய தினம் இரவு 9 மணியளவில் ஊாிக்காடு பகுதியில் உள்ள இராணுவத்தின் கடை ஒன்றில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதனையடுத்து குறித்த பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொண்ட இராணுவத்தினர் 3 இளைஞா்களை கைது செய்துள்ளதோடு இரண்டு வாள்களையும் மீட்டுள்ளனா். இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் வல்வெட்டித்துறை பொலிஸாாிடம் ஒப்படைக்கபப்ட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More »

இன்றைய ராசிபலன் 17.08.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 17.08.2019 மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோ ரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற்போல் ஒருவர் அறிமுகமாவார். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மதிப்புக் கூடும் நாள். ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வீடு வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து …

Read More »

கூட்டமைப்பால் மகிழ்ச்சி வெள்ளத்தில் விஜயகலா

விஜயகலா

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வழங்கிவரும் ஆதரவுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார். புனரமைக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகத்தை திறந்து வைக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘வலி வடக்கில் …

Read More »