பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றதாக அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 523 பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு, அண்ணா பல்கலைகழகத்தில் கடந்த மாதம் 23ம் தேதி துவங்கியது. பொறியியல் பல்கலைக்கழகங்களில் மொத்தம் உள்ள 1 லட்சத்து 70 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் மட்டுமே அழைக்கப்பட்டனர். இவர்கள் தரவரிசை பட்டியலில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் 86ஆயிரத்து 355 இடங்கள் மட்டுமே நிரம்பின. கலந்தாய்வில் […]
Author: அருள்
மாணவர்களுக்கு தமிழக அரசு துரோகம் இழைத்துவிட்டது!
நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறுவதில் தோல்வியடைந்த தமிழக அரசு மாணவர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்திருப்பதாகப் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறும் மசோதாவுக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறத் தமிழக ஆட்சியாளர்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்விலிருந்து விலக்கு அளித்தல், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் ஆகிய கோரிக்கைகளைக் குடியரசுத் தலைவர் தேர்தலின்போது வலியுறுத்தவும் […]
இந்திய ராணுவத்தில் ரோபோக்கள் களமிறக்கப்படுகிறது!
எதிரிகளுடன் சண்டையிட இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்கவும், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்களை ஒடுக்கவும் நம் ராணுவ வீரர்கள் இரவு பகலாக போராடிவருகின்றனர். இதனால் ஏற்படும் உயிர்சேதங்களை குறைக்கும் வகையில், பாதுகாப்பு பணிகளுக்காக எல்லையில் ரோபோக்களை பயன்படுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டிருந்தது. இதையடுத்து ரோந்து பணிகள் மேற்கொள்வது, வெடிபொருட்களை கொண்டுசெல்வது உள்ளிட்ட பணிகளுக்காக மொத்தம் 544 ரோபோட்கள் தேவைப்படுவதாக […]
தொலைபேசி உரையாடல், வாட்ஸ் அப்-ஐ கண்காணிக்க மத்திய அரசின் தொழில்நுட்பம் ரெடி!
இந்தியாவில் நடக்கும் தொலைபேசி உரையாடல்கள் உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு வசதிகளையும் கண்காணிக்க மத்திய அரசு தொழில்நுட்பம் ஒன்றைத் தயாரித்துள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தின் கீழ் பொதுமக்களின் தொலைபேசி உரையாடல்கள், வாட்ஸ் அப் உரையாடல்கள் போன்ற அனைத்தையும் கண்காணிக்க முடியும். இதற்காக நாடு முழுவதும் 20 இடங்களில் மத்திய கண்காணிப்பு மையங்கள் செயல்படத்துவங்கிவிட்டன. கூடுதலாக ஒரு கண்காணிப்பு மையமும், இந்த மையத்துக்கான பேரழிவு மீட்புக்குழு ஆகியவை இந்த ஆண்டு இறுதிக்குள் செயலுக்கு வர […]
பாலின பாகுபாடு காட்டப்படுவதாக புகார் கூறிய பொறியாளர் பதவி நீக்கம்
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டில் பொறியாளராக பணிபுரிபவர் ஜேம்ஸ் டோமோர். இவர் கடந்த வாரம் அந்நிறுவனத்தில் நடக்கும் பாலின பாகுபாடு குறித்து அறிக்கை ஒன்றை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். அதில், நிறுவனத்தில் ஆண்-பெண் பாகுபாடு அதிகம் பார்க்கப்படுகிறது என்றும், பெண்களுக்கு தொழில்நுட்பத்துறை மற்றும் தலைமை பொறுப்பு போன்ற பதவிகளை கொடுக்க மறுக்கின்றனர் என எழுதியிருந்தார். ஜேம்ஸ் டோமோரின் இந்த அறிக்கை உலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி […]
காந்தி ஜெயந்தி நீக்கப்பட்டதற்கு குவியும் கண்டனம்!
ராஜஸ்தான் மாநில அரசு மாநில பல்கலைக்கழகங்களுக்கு வெளியிட்ட விடுமுறை கால அட்டவணை பட்டியலில் காந்தி ஜெயந்தி நீக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆண்டுதோறும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று, அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அளிப்பது வழக்கம். இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில அரசு, அதன்கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களுக்கு வெளியிட்ட விடுமுறை கால அட்டவணை பட்டியலில் இருந்து காந்தி ஜெயந்தியை நீக்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி […]
ஓஎன்ஜிசி குறித்து அதிகாரிகள் விளக்கம்!
ஓஎன்ஜிசி செயல்பாட்டால் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று ஒஎன்ஜிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கதிராமங்கலத்தில் ஒஎன்ஜிசிக்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கும்பகோணத்தில் ஒஎன்ஜிசி நிறுவன மேலாளர் ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார். அப்போது, ஓஎன்ஜிசி மீது தவறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். எரிசக்தி தேவை நிறைவேற்றப்பட்டல்தான் நாடு முழுமையாக வளர்ச்சி அடையும் என்று கூறிய அவர், போராட்டக்காரர்கள் தவறான எண்ணத்தை மக்களிடம் உருவாக்கி […]
டிடிவி தினகரன் நியமனம் செல்லாது!
டிடிவி தினகரன் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக அம்மா அணி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீண்டும் கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வரும் டிடிவி தினகரன் சமீபத்தில் அதிமுக அம்மா அணியில் 67 கட்சிப் பதவிகளுக்கு புதிதாக நியமனங்களை மேற்கொண்டார். இந்த நியமனம் முதலமைச்சர் எடப்பாடிபழனிச்சாமி அணியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. டிடிவி தினகரன் மீண்டும் கட்சி பணிகளில் ஈடுபடுவதற்கு […]
மூக்குப்பொடி சாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்கிய தினகரன்
அதிமுகவை வலுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக டிடிவி தினகரன் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று திருவண்ணாமலையிலுள்ள மூக்குப்பொடி சாமியார் என்பவரிடம் டிடிவி தினகரன் ஆசிர்வாதம் வாங்கியது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, டிடிவி தினகரனின் அறிவிப்புகள் எதுவும் அதிமுக அம்மா அணியினரை கட்டுப்படுத்தாது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுகவில் உச்சக்கட்ட உட்கட்சிப் பூசல்
அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தில் நடைபெற்றுவருவது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “டிடிவி தினகரனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது அதிமுகவின் உட்கட்சி பூசல். அவரை நீக்குவதும், சேர்ப்பதும் அவர்கள் உரிமை” என்று தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், “அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது” என்றார். தினகரனின் நியமனம் செல்லாது என இபிஎஸ் அணியினர் […]





