Author: அருள்

எடப்பாடி முதலமைச்சரானது ஒரு விபத்து

எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் அமர்ந்திருந்த முதலமைச்சர் பதவியில், எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருப்பது ஒரு விபத்து என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பதவி இருக்கும் காரணத்தால், சிலர் ஆடுவதாக கூறிய அவர், அவர்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார். அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் தலைமையில், மதுரையில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மதுரையில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மதுரையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் […]

இட்லி மாவுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்க கோரிக்கை

பாக்கெட் செய்யப்பட்ட இட்லி, தோசை மாவுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இட்லி மாவு 18 சதவிகித வரி பிரிவில் வரும் நிலையில், இதை 12 சதவிகித பிரிவில் கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வறுகடலைக்கான ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதோடு சாம்பிராணி, களிமண் சிலைகள், பிரார்த்தனை மெத்தை ஆகியவற்றுக்கான வரியையும் குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் எஸ்யுவி […]

சசிகலா நினைத்திருந்தால் டிசம்பர் 5ம் தேதியே முதல்வராகி இருப்பார்

மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுக ‌அம்மா அணி சார்பில் டிடிவி தினகரன் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி உள்ளிட்ட 14 எம்எல்ஏக்களும், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட 5 எம்பிகளும் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய டிடிவி தி‌னகரன், 1977ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டால் கருணாநிதியால் எம்ஜிஆர் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். ஆனால் அதன்பிறகு மக்கள் கருணாநிதியை ஒதுக்கி வைத்தனர். ஏழை எளிய […]

எம்எல்ஏக்களை ஒளித்து வைப்பவர்கள் ஒழிக்கப்படுவார்கள்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு வரத்தயாராக இருந்த எம்எல்ஏக்களை கடத்திச் சென்று ஒளித்து வைத்தவர்கள் ஒழிக்கப்படுவார்கள் என அம்மா அணியின் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டி உள்ளார். மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுக ‌அம்மா அணி சார்பில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய டிடிவி தினகரன் ‘இது நமது ஆட்சி. இந்த ஆட்சிக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் பங்கம் வராது. ஆட்சி செய்பவர்களுக்கு மடியிலே கணம் உள்ளது. ராணுவ […]

ஜெயலலிதா மரணத்தில் நீதிவிசாரணை தேவை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும் என அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார். மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், தர்மத்தோடு யுத்தம் நடத்துபவர்கள் தர்மயுத்தம் நடத்துவதாக சொல்கிறார்கள். அம்மா அவர்கள் மருத்துவமனையில் இருந்தபோது அவர்கள்தான் முக்கியமான பொறுப்பில் இருந்தவர்கள். அம்மா அவர்களின் மரணம் குறித்து அவர்களிடம்தான் நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும். […]

ரஜினி, கமல் செய்தது என்ன?

மக்கள் துன்பப்படும்போது ரஜினி, கமல் ஆகியோர் என்ன உதவி செய்தார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை அமைச்சர் செல்லூர் ராஜு குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் ஆனால் மக்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், எம்.ஜி.ஆரை […]

38 பில்லியனா? ஷாக் கொடுத்த மின் கட்டணம்!

வழக்கமாக வீடுகளுக்கு மின்சார கட்டணம் எவ்வளவு வரும்? அதிகப்பட்சமாக சில ஆயிரங்களுக்குள்தான் . ஆனால், ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த குஹாவுக்கு எகிறி இருக்கிறது இக்கட்டணம். இதையடுத்து வீட்டில் மின்சாரத்தை திடீரென்று துண்டித்துவிட்டார்கள். ஏன், என்னாச்சு என்று மின்வாரியத்தில் விசாரிக்க சென்ற குஹாவுக்கு ஷாக். ஏனென்றால் கட்டணம் ரூ.38 பில்லியனை கட்டாததால்தான் மின்சாரத்தைத் துண்டித்ததாகக் கூறியுள்ளனர். இதுபற்றி குஹா கூறும்போது, ‘மூன்று அறைகள் கொண்ட எனது வீட்டில் 3 ஃபேன்கள், […]

சூனியக்காரி என்று பெண் அடித்துக்கொலை

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ளது கெர்கி. இங்கு வசித்து வந்தவர் கன்யா தேவி. வயது 40. இவரது கணவர் ஒரு மாதத்துக்கு முன் இறந்துவிட்டார். இதையடுத்து மகன் மற்றும் மகளுடன் வசித்துவந்த அவரை, உறவினர்கள் சூனியக்காரி என்ற கூறினர். இதையடுத்து அவரை அடித்துக் கொடுமைப் படுத்தி, மனிதக் கழிவை சாப்பிட வைத்தனர். பின்னர் சாகும்வரை அடித்தேக் கொன்று எரித்துவிட்டனர். இந்தச் சம்பவம் கடந்த 3-ம் தேதி நடந்துள்ளது. இது […]

சுதந்திர தின விழா ஒத்திகை

சுதந்திர தினவிழாவையொட்டி தலைநகர் டெல்லியில் முழு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. டெல்லி ராஜபாதையில் நடைபெறவுள்ள அனைத்து நிகழ்ச்சிகளையும், முழுச் சீருடை அணிந்த பாதுகாப்புப் படையினர் நடத்திப் பார்த்தனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நாடாளுமன்றம்‌, குடியரசுத் தலைவர் மாளிகை, செங்கோட்டை, தூதரகங்கள் உள்ளி்ட்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்திலும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் 15 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு […]

நாடு முழுவதும் ஒரே மின் கட்டணம்

நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் யோசனை கூறியுள்ளார். பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ரயில்வே கட்டணங்கள் போல் மின் கட்டணங்களும் நாடெங்கும் ஒரே சீராக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். பீகாரில் அனைத்து பகுதிகளுக்கும் அடுத்தாண்டு இறுதிக்குள் மின்சார வசதி செய்து தரப்படும் என்றும் […]