Wednesday , February 5 2025
Home / அருள் (page 298)

அருள்

பிக்பாஸ்ல இருந்து நிலாவுக்கா போறாங்க.. எதுக்கு இந்த அழுகை

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் முடியப்போகிறது. இந்த வாரம் வையாபுரி தான் வெளியேறினார். எவிக்‌ஷன் முடிந்து வெளியே போகும் போது பிரிவால் மற்றவர்கள் அழுவது சகஜமாகிவிட்டது. இந்நிகழ்ச்சி குறித்து அடிக்கடி தன்னுடைய கருத்து சொல்றவங்க நடிகை ஸ்ரீ பிரியா. இவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், ஏன் எவிக்ட் ஆன அழறாங்குனு புரியல. அவங்க நிலாவுக்கா நேரா போறாங்க. எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்கத்தான் செய்யும் மீண்டும் சந்திக்க …

Read More »

சுஜாவின் காதலர் யார் தெரியுமா? பிக்பாஸில் வெளிப்படுத்திய சுஜா

பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறது. இதில் பலர் எலிமினேட் ஆகி தற்போது 6 பேர் மட்டுமே மீதம் உள்ளனர். நேற்று பிக்பாஸ் வீட்டுக்குள்ள நுழைந்த கமல்ஹாசன் மீண்டும் வெளியேறும் போது, சுஜா அவரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதாவது அவர் முன்பு ஜோக்கர் குல்லா அணிந்து, தன்னுடைய சிவக்குமார் அத்தானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவர் தான் என்னுடைய ஜோக்கர் என்றும் கூறினார். கமலும் கேமராவைப்பார்த்து சிவக்குமாருக்கு …

Read More »

மீண்டும் வறட்சி ஏற்படலாம்! நிபுணர்கள் எச்சரிக்கை!! – ஜனாதிபதி, பிரதமருக்கு அறிக்கை சமர்ப்பிப்பு

கடந்த சில தினங்களாக நாட்டில் சில பகுதிகளிலும் பெய்துவந்த மழை படிப்படியாகக் குறைந்து வருவதால் மீண்டும் வறட்சியான காலநிலையொன்று ஏற்படலாம் என வானிலை ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர். இலங்கை வானிலை அவதானத் திணைக்களத்தின் நிபுணர்கள் இது தொடர்பில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருப்பதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் நாட்டின் பல பகுதிகள் விசேடமாக வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் வறட்சி ஏற்படலாம் …

Read More »

சைட்டம் பற்றிய அறிக்கை ஜனாதிபதிக்கு சமர்ப்பிப்பு!

சைட்டம் பிரச்சினை பற்றி ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை அவரிடம் சமர்ப்பித்திருப்பதாக அக் குழுவின் தலைவரும் பிரதி அமைச்சருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ள மேலதிக விவரங்களாவன:- “ஜனாதிபதி எங்களுக்கு வழங்கியிருந்த கால எல்லைக்குள் அறிக்கையை அவருக்கு சமர்ப்பித்து விட்டோம். எனவே, இந்த அறிக்கை இன்னும் முடியவில்லை என இலங்கை அரச மருத்துவ சங்கம் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டில் உண்மையில்லை . …

Read More »

ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கிடைத்ததும் பிணைமுறி மோசடியாளர்கள் தண்டனை பெறுபவர்!

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்ததும் குற்றவாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். “ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டவுடன் அது மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்படும். அதனைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குகள் தொடரப்படும். பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கு மேலதிகமாக …

Read More »

தேர்தலுக்குத் தயாராகுங்கள்! – ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கு பிரதமர் பணிப்புரை

தேர்தல்களுக்குத் தயாராகுமாறு ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கு அதிரடியாகப் பணிப்புரை விடுத்துள்ளது ஆளும் கூட்டணி அரசின் தலைமைப்பீடம். அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமாக வராத பட்சத்தில் அதற்கு மாற்றீடாக எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என உயர்மட்ட சட்டவல்லுநர்கள் சுட்டிக்காட்டியதையடுத்தே அரச தலைமைப்பீடம் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளது. 20ஆவது திருத்தச் சட்டமூலத்தைக் கைவிடவேண்டிய நிலை ஏற்படுமென சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அரசதலைமைக்கு ஆலோசனை வழங்கியுள்ள நிலையிலேயே …

Read More »

அரசியலில் களமிறங்குகிறார் மைத்திரியின் மகள் சத்துரிகா! – மாகாண சபைத் தேர்தலில் போட்டி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சத்துரிகா சிறிசேன தனது அரசியல் பயணத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளார். இதற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன என்றும், அவை முடிவடைந்த பின்னர் தான் அரசியலில் களமிறங்குவதற்கான காரணத்தை விளக்கும் வகையில் அவர் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. தகவல் தொழில்நுட்பத்துறையில் தேர்ச்சிபெற்ற அவர் தற்போது வணிகத்துறையில் ஈடுபட்டுவரும் நிலையிலேயே அவற்றைவிடுத்து முழுநேர அரசியலில் இறங்கவுள்ளார். இதற்கான பிள்ளையார் சுழியாகவே ‘ஜனாதிபதி தந்தை’ …

Read More »

முக்கிய தீர்மானங்கள் எடுப்பதற்காக அம்பாறையில் 23இல் கூடுகின்றது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு!

புதிய அரசமைப்பை உருவாக்கும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை, வடக்கு மாகாண அமைச்சரவை விவகாரம் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுப்பதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை அம்பாறையில் நடைபெறவுள்ளது. தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன், …

Read More »

‘பட்ஜட்’ மீதான தாக்குதலுக்கு தயாராகின்றது மஹிந்த அணி! – பந்துல தலைமையில் விசேட அணி களமிறக்கம்

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதற்கு எதிராகப் பிரசாரப்போரை முன்னெடுப்பதற்கு மஹிந்த அணியான பொது எதிரணி தீர்மானித்துள்ளது. இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், அதில் பொருளாதாரத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர். தேசிய அரசின் பட்ஜட் நவம்பர் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அது மீது டிசம்பர் 9ஆம் திகதி இறுதி …

Read More »

சினேகன் மற்றும் சுஜா இடையே பெரிய சண்டை

இன்றைய Bigg Boss promo 1 இல் சினேகன் மற்றும் சுஜா இடையே பெரிய சண்டை ஏற்றப்பட்டுள்ளதாக இன்றைய Bigg Boss promo 1 இல் பார்க்கமுடிகிறது. இன்றைய Bigg Boss promo 1 வீடியோ இணைப்பு கீழே

Read More »