சென்னை: ஏற்கனவே மன வலியுடன் இருக்கும் எங்களுக்கு மன உளைச்சலைக் கொடுக்காதீர்கள் என்று டாக்டர் கிருஷ்ணசாமிக்கு அனிதாவின் அண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அனிதாவின் மரணம் குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தொடர்ந்து கூறி வருகிறார். அனிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறி வருகிறார். இந்த நிலையில் அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் தனது முகநூலில் ஒரு பதிவு போட்டுள்ளார். ஒரு ஏழை மாணவி […]
Author: அருள்
ஜக்கையன் ரிட்டர்ன் வெறும் ட்ரைலர்தான்… எடப்பாடி அணியின் திடீர் உற்சாகம்!
சென்னை: தினகரன் அணியில் இருந்த கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் தங்களது முகாமுக்கு வந்ததில் எடப்பாடி தரப்பு மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறதாம். இது ட்ரைலர்தான்.. மெயின் பிக்சர் இனிமேதான் என உற்சாகமாக இருக்கிறதாம் எடப்பாடி தரப்பு. தினகரனுக்கு எதிராக அடுத்தடுத்த திட்டங்களை அதிரடியாகச் செயல்படுத்தி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. பொதுக்குழுவுக்கு முன்னதாக, ஆட்சிக்கான பெரும்பான்மையை நிரூபித்துவிடும் முடிவில் இருக்கிறதாம் எடப்பாடி தரப்பு. தினகரன் அணியை உடைப்பதில் எந்தவித சிக்கலும் இல்லை. […]
நீட்டுக்கு நிரந்தரமாக வேட்டு… ரயில் மறியல் செய்ய முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது
சென்னை : நீர் தேர்விற்கு நிரந்தரமாக தடை கேட்ட நாம் தமிழர் கட்சியினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், ஆவடியில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சயினிர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் செப்டம்பர் 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை […]
டீச்சர் வராட்டி என்ன… நான் பாடம் எடுக்கிறேன்.. அதிரடி சேலம் கலெக்டர் ரோகினி!
சேலம்: அரசு பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆத்தூரில் உள்ள அரசு பள்ளியில் சேலம் ஆட்சியர் ரோகிணி பாடம் நடத்தினார். ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும். தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை […]
நம்ப வைத்து கழுத்தறுத்த மத்திய அரசு !
அரியலூர்: நீட்’ தேர்வில் விலக்கு வரும் என, மத்திய அரசு நம்பவைத்து கழுத்தறுத்துவிட்டது’ என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். அரியலூர் மாவட்டம் குழுமூரில், ‛நீட்’ காரணமாக டாக்டர் சீட் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் தந்தை மற்றும் சகோதரரை ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: நாடு முழுவதும் ஒரே கல்வி கொள்கை என்பது சாத்தியம் இல்லாதது. […]
பா.ஜ., தலைவர் தமிழிசைக்கு காங்., – எம்.எல்.ஏ., கேள்வி
சென்னை: ‘நீட்’ தேர்வு தொடர்பாக, மூன்று கேள்விகளை எழுப்பிய, பா.ஜ., மாநிலத் தலைவர் தமிழிசைக்கு, காங்., – எம்.எல்.ஏ., விஜயதரணி, மூன்று கேள்விகளை எழுப்பி உள்ளார். ‘நீட்’ தேர்வுக்கு, விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள, காங்., தலைவர்களுக்கு, தமிழிசை சமூக வலைதளங்களில், மூன்று கேள்விகளை எழுப்பினார். ‘நாடு முழுவதும், நீட் தேர்வு என்ற கொள்கை முடிவை, முதன் முதலில் கொண்டு வந்தது யார்; நீட் தேர்வுக்கு ஆதரவாக […]
தினகரன் பேனர்களை கிழித்து விருத்தாசலத்தில் போராட்டம்
விருத்தாசலம்: விருத்தாசலத்தில், தினகரன் பேனரை கிழித்து, அவரது ஆதரவு, எம்.எல்.ஏ., உருவ பொம்மையை, அ.தி.மு.க.,வினர் எரித்தனர். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் தொகுதி, எம்.எல்.ஏ., கலைச்செல்வன், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால், அ.தி.மு.க.,வினர் அதிருப்தியில் உள்ளனர். கடலுார் கிழக்கு மாவட்டச் செயலரான அமைச்சர் சம்பத்தை, அந்த பொறுப்பில் இருந்து நீக்கி, கலைச்செல்வனை, மாவட்டச் செயலராக, தினகரன் அறிவித்திருந்தார். இது, அதிருப்தியை அதிகரித்தது. அ.தி.மு.க., இளைஞர், இளம்பெண்கள் பாசறை கிழக்கு மாவட்டச் செயலர் ரமேஷ் […]
நீட் விவகாரத்தில் தமிழக அரசு போராடும்
நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசு தொடர்ந்து போராடும்’ என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்ததாவது: நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக தமிழக மாணவர்களின் உணர்வுகளுக்கு தமிழக அரசு மதிக்கிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு தொடர்ந்து போராடும். இவ்விவகாரத்தில் மாணவர்களுக்கு ஆதரவாகவே தமிழக அரசு செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். https://www.youtube.com/watch?v=AU88D3CdCwg
நாட்டுக்கு கிடைத்த வள்ளல் மோடி: மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா
புதுடில்லி: நாட்டு மக்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்த பாடுபட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டுக்கு கிடைத்த வள்ளல்’ என மத்திய கலாசார துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா பாராட்டியுள்ளார்.
ஆறாவது முறையாக அணு குண்டு பரிசோதனை செய்து வடகொரியா அடாவடி
சமீப காலமாக வடகொரியா 5 தடவை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. கண்டம்விட்டு கண்டம் பாயும் இரு ஏவுகணைகளையும் இந்நாடு பரிசோதித்துள்ளது. அமெரிக்காவை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் வட கொரியாவின்மீது ஐ.நா.சபை சமீபத்தில் புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது. இது வடகொரியாவுக்கு கடும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புதிய பொருளாதார தடை எங்கள் இறையாண்மைக்கு எதிரானது. அதற்கு அமெரிக்கா உரிய விலை […]





