புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது பற்றி ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பொது எதிரணி இன்று கொழும்பில் கூடவுள்ளது. இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அனைத்து பொது எதிரணி எம்.பிக்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மஹிந்தவுக்குச் சார்பான சட்டவல்லுநர்கள் சிலரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். அரசமைப்பு நிர்ணய சபையின் வழிநடத்தல் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் சம்பந்தமாக …
Read More »சிவசக்தி ஆனந்தனையும் வியாழேந்திரனையும் பாராட்டுகிறார் நாமல்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் எஸ்.வியாழேந்திரன் ஆகியோருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ஷ எம்.பி. பாராட்டுத் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் நடந்துகொண்ட விதம் தொடர்பாகவே தனது டுவிட்டர் தளத்தில் அவர் தமிழில் பாராட்டிப் பதிவேற்றியுள்ளார். “நாடாளுமன்றம் வந்தும் தமிழ்த் தேசியக் …
Read More »அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் மூவர் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!
தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் வழக்குகள் இடமாற்றப்பட்டு அநுராதபுரம் சிறப்பு நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில், அரசியல் கைதிகள் மூவரும் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். வவுனியா மேல்நீதிமன்றில் கடந்த 4 வருடங்களாக இடம்பெற்று வந்த வழக்கை, அநுராதபுரம் சிறப்பு நீதிமன்றுக்கு இடமாற்றுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கடந்த 13ஆம் திகதி, வவுனியா மேல் நீதிமன்றுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக வவுனியா …
Read More »அதியுச்ச அதிகாரப் பகிர்வு யதார்த்தமாக வேண்டும்! – யாழ். ஆயர் வலியுறுத்து
“அதிகாரங்களை உச்சபட்சம் பகிர்வதற்கு கூட்டு அரசு இணங்கியுள்ளதாக பிரதமர் ரணில் கூறியுள்ளார். அது வெறும் வாய்மொழியில் அல்லாமல் நடைமுறையில் வரவேண்டும்.” – இவ்வாறு யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தெரிவித்தார். புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “கடந்த வியாழக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, அதியுச்ச அதிகார பகிர்வினை …
Read More »ஜெனீவாவில் வைகோவை சிங்களவர்கள் தாக்க முயன்றதை அடுத்து வைகோவுக்கு பலத்த பாதுகாப்பு
சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. சபையில் மனித உரிமை கவுன்சிலின் 36-வது அமர்வு செப்டம்பர் 11-ந் தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த அமர்வில் இலங்கைத் தீவின் ஈழத் தமிழர்கள் பிரச்சினையும் விவாதிக்கப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஜெனீவா சென்று உள்ளார். ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வைகோ 2 முறை பேசினார். தனது பேச்சை முடித்த சில நிமிடத்திலேயே, …
Read More »உலகெங்கும் இன்று பேரெழுச்சியுடன் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்! – கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நல்லூரில் பிரதான நிகழ்வு
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்!!” என்று முழக்கமிட்டு தாயக மண்ணை முத்தமிட்டு வீரகாவியம் படைத்த தியாக தீபம் லெப். கேர்ணல் திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் தாயக மண்ணிலும், புலம்பெயர் தேசத்திலும் இன்று பேரெழுச்சியுடன் நடைபெறவுள்ளன. வடக்கு, கிழக்கில் அமைதிப்படையாகக் காலடி எடுத்துவைத்து ஆக்கிரமிப்புப் படையாக மாறி ஈழத் தமிழர்களை வேட்டையாடி சூறையாடி அழித்தொழித்த இந்திய இராணுவத்துக்கு எதிராக அஹிம்சை வழியில் 12 நாட்கள் உண்ணாவிரதப் …
Read More »குர்திஸ்தான் தனிநாடு கோரிக்கை: ஈராக்கின் கடும் எதிர்ப்பையும் மீறி இன்று பொதுவாக்கெடுப்பு
ஈராக்கின் வடபகுதியில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். குர்திஸ்தான் என்றழைக்கப்படும் இந்தப் பகுதி ஈராக் ஆட்சியின் கீழ் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுகிறது. ஈராக்கின் எண்ணெய் வளம் மிக்க குர்துகள் வசிக்கும் இந்த பகுதியை தனிநாடாக அறிவிக்க அம்மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இக்குழுக்கள்ளில் பிகேகே எனப்படும் குர்துக்கள் தொழிலாளர் கட்சியினர் ஆயுதமேந்திய போராட்டம் நடத்திவருகின்றனர். ஆனால், குர்து இன மக்களின் இந்த கோரிக்கையை ஈராக் ஏற்க மறுத்து …
Read More »பிக்பாஸ் பட்டத்தை வென்ற பிரபல நடிகையின் கணவர்..! எவ்வளவு தொகை தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஹிந்தியில் 10 சீசனாக சக்கை போடு போட்ட இந்நிகழ்ச்சிய தமிழில் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். இதையடுத்து தெலுங்கில் 1 மாதம் கழித்து தொடங்கப்பட்டது. ஜுனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் பிரபல நடிகர் சிவ பாலாஜி வெற்றி பெற்று ரூ. 50 லட்சத்தை கைப்பற்றினார். இவர் நடிகை மதுமிதாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் …
Read More »பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நடிகை அஞ்சலி..! அம்பு விட்டு அசத்திய கணேஷ்…!!
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதியை நோக்கி நெருங்கி கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே பாக்கி உள்ளது. நேற்று சுஜா வெளியேற்றப்பட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டில் 5 பேர் மட்டுமே உள்ளனர். இதிலும் இன்னும் ஒருவர் ஓரிரு நாளில் வெளியேற்றப்பட உள்ளார். இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தினராக நடிகை அஞ்சலி வருகிறார். இவரது வருகையால் அனைவரும் பெரும் உற்சாகம் அடைகின்றனர். அனைத்து போட்டியாளர்களும் தனக்கு தெரிந்த வித்தைகளை காட்டி …
Read More »சுஜாவால் திணறும் விஜய் டிவி…!!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் சுஜா வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்டதை அவராலேயே நம்ப முடியவில்லை. தனக்கு எப்படி மக்கள் வாக்களிக்காமல் போனார்கள் என அதிர்ச்சி அடைந்தார். மேலும் சினேகன் தனக்கு அவரது மதிப்பெண்களை கொடுத்து காப்பாற்றுவார் என எதிர்பார்த்தார். அதுவும் நடக்கவில்லை. ஏற்கனவே ஒரு முறை நடந்தது போல வெளியேற்றி விட்டு மீண்டும் உள் அழைப்பார்கள் என நினைத்து கொண்டார். அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே தான் வெளியேற்றபட்டதை …
Read More »